இடுகைகள்

நகைச்சுவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனிக்க இனிக்க காதல், நகைச்சுவை என நகரும் பொறியியல் மாணவர்களின் வாழ்க்கை!

படம்
  மேட் தெலுங்கு இசை பீம்ஸ் சிசிரிலோ ஹைதராபாத்தில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆப் எஞ்சினியரிங் கல்லூரி வளாகத்திற்கு ஒரு மாணவன், இரவுநேரத்தில் வேகமாக வருகிறான். அங்கு கட்டப்பட்டுள்ள கயிற்றில் தட்டிவிட்டு கீழே விழுகிறான். எதிரே பார்த்தால் நிறைய மாணவர்கள் நிற்கிறார்கள். கீழே விழுந்த மாணவன், அந்த கல்லூரியில் சேர்ந்துவிட்டு பிறகு என்னமோ பீதியடைந்து அங்கிருந்து தப்பியோட முயல்கிறான். ஆனால் சீனியர் மாணவர்கள் அவனை பிடித்து கட்டி வைத்து தலைவர் சீனியர் வரும்வரை காத்திருக்கிறார்கள். அவர் பெயர் லட்டு. அவர், தானும் இப்படித்தான் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தப்பியோட முயன்றதாக சொல்லி தனது கதையைக் கூறுகிறார். படம் தொடங்குகிறது.  மனோஜ்,அசோக், தாமோதர் என மூன்று நண்பர்களின் பெயர்தான் படத்தின் தலைப்பு. இந்த பாத்திரங்களில் நடித்தவர்கள் எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக தாமோதர் பாத்திரத்தில் நடித்த நடிகர். இவரது காமெடி சென்ஸில் தியேட்டரே அதிர்கிறது. அதிலும் படத்தின் கடைசி ட்விஸ்ட் இருக்கிறதே? ஏமாந்துவிட்ட சோகம், வருத்தம் அதை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துவார். அதேசமயம் நண்பர்கள் சிரிக்க, எதுக்க

இரு குடும்பங்களின் பகையைத் தீர்க்கும் காரியஸ்தன் - காரியஸ்தன் - திலீப், அகிலா சசிதரன், ஹரிஶ்ரீ அசோகன்

படம்
  காரியஸ்தன் - மலையாளம் -திலீப் அகிலா சசிதரன் - திலீப் - காரியஸ்தன் காரியஸ்தன் திலீப், அகிலா சசிதரன், சுரேஷ் வெஞ்சரமூடு, ஹரிஶ்ரீ அசோகன் நட்பாக பழகிய இரு குடும்பங்கள் பிரிந்துகிடக்கின்றன. குடும்பங்கள் பிரிவதற்கு காரணமான ஒருவரே பின்னாளில் அதை ஒன்றாக சேர்க்க முயல்கின்றார் ஒருவர். அவ்வளவே கதை. வடக்கு, கிழக்கு என இரு குடும்பங்கள் முதலில் சுவர்களே இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. இரண்டு குடும்பங்களுமே மூடநம்பிக்கை கொண்ட ஆணாதிக்க வாதி குடும்பங்கள்தான். தங்கள் குடும்பத்திற்குள் திருமண உறவு செய்ய நினைக்கிறார்கள். ஆனால் கிழக்கு குடும்பத்தைச் சேர்ந்த மூத்தபிள்ளைக்கு, ஏற்கெனவே ஒரு காதல் இருக்கிறது. ஆனால்,அவரது அப்பா சொன்னதால் அவரது பேச்சையும் உடனே தட்டமுடியவில்லை. டௌரி பணமாக பத்து லட்சத்தையும் பெண் வீட்டார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த நிலையில் ராஜன் என்ற கல்யாண மாப்பிள்ளை, சுசீலன் என்பவரிடம் டௌரிப் பணத்தைக் கொடுத்துவிட்டு, வடக்கு குடும்பத்திடம் பணத்தை சேர்க்குமாறு சொல்லிவிடுகிறார். பிறகு, கல்யாண வீட்டிலிருந்து தப்பி, தனது காதலியோடு ரயிலில் ஏறப்போகிறார். இவர்களது காதலை அறிந்து ராஜனுக

உராங்குட்டான் நகைச்சுவை உணர்வுமிக்கது!

படம்
  டாக்டர் பைருட் கால்டிகாஸ் விலங்கியலாளர் பைருட் கால்டிகாஸ், இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில் உராங்குட்டான்களை ஆராய்ந்து வருகிறார். பூர்விகம், கனடா. கனடாவிலுள்ள சைமன் ஃபிரேஸர்  பல்கலைக்கழகத்தில் அகழாய்வுத்துறை பேராசிரியராக பணிபுரிகிறார்.   நீங்கள் உராங்குட்டானை முதன்முறையாக எப்போது பார்த்தீர்கள் என நினைவிருக்கிறதா?  பள்ளியில் படிக்கும்போது, டைம் லைஃப் புத்தகத்தைப் படித்தேன். அதில், ஆண் உராங்குட்டான் புகைப்படத்தை முதன்முறையாக பார்த்தேன். மனிதர்களோடு அதிக ஒற்றுமை கொண்ட குரங்கினம்.  அந்த புகைப்படம், இன்றுவரையும் என் மூளையில் மறக்கமுடியாத நினைவாக  உள்ளது.  உராங்குட்டானை 40 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறீர்கள். அவற்றைப் பற்றி வரையறை செய்யமுடியுமா? வால்ட் டிஸ்னி உருவாக்கிய அனிமேஷன் விலங்குகள் போன்றவை தான்  உராங்குட்டான்கள். மனதில் நகைச்சுவை  உணர்வு நிரம்பியவை. அவற்றின் உணர்ச்சிகளை நீங்கள் கூர்ந்துகவனித்தால், எனது கருத்தைப் புரிந்துகொள்ளலாம்.  பல்கலைக்கழக படிப்பை முடித்தவுடன் உராங்குட்டானைப் பற்றி ஆய்வு செய்ய எப்படி முடிவு செய்தீர்கள்? அப்போது எனக்கு வயது 19. என்னுடைய பேராசிரியர், ஆப்பிரிக்காவி

ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிகர் தெரிவது தவறு கிடையாது! - நஸ்ரூதின் ஷா, இந்தி திரைப்பட நடிகர்

படம்
  நஸ்ரூதின் ஷா இந்தி திரைப்பட நடிகர் தான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து அதிகாரத்தை எதிர்ப்பதாக நஸ்ரூதின் ஷா கூறினார். அவரின் வாழ்க்கை, கலை, வாழ்க்கை பற்றி நம்மிடையே பேசுகிறார்.  நீங்கள் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது நீங்கள் நடித்த படம்  அல்லது நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்போது எப்படி உணர்கிறீர்கள்? நான் உங்களை திருத்த நினைக்கிறேன். நான் திரையுலகிற்கு வந்து 48 நாட்கள் ஆகின்றன. 2025ஆம் ஆண்டு வந்தால்தான் 50 ஆண்டுகள் ஆகிறது. நான் எனது முதல் படத்தை வங்காள மொழியில் ஷியாம் பெனகலின் நிஷாந்த்துடன் செய்தேன். 1975ஆம் ஆண்டு நடித்த படம் அது. நான் திரைப்படம், டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தபோது கிடைத்த வாய்ப்பு அது. என்னை பரிந்துரைத்தவர், அந்த மையத்தின் இயக்குநராக இருந்த திரு. கிரிஷ் கர்னாட் தான்.  ஷியாம் பெனகலின் படத்தில் நடிக்க பலரும் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே அழகாக இருந்தார்கள். அதனால் அந்த விஷயத்தில் பலவீனமாக இருந்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  இந்தி திரைப்படங்களில் நான் நாயகனாக நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஏனெனில் சிறிய பாத்திரங்களில் அப்போது மு

ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க நான் தயாராக இல்லை! - அதிதி பாலன்

படம்
  அதிதிபாலன்  திரைப்பட நடிகை அருவி படத்திற்கு பிறகு இப்போதுதான் நீங்கள் கோல்ட்கேஸ் படத்தில் நடித்திருக்கிறீர்கள் இல்லையா? அருவி படத்திற்கு பிறகு நான் சிறிய பாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என பலரும் நினைத்தார்கள். ஆனால் அது தவறு. நான் கதையை மட்டுமே முக்கியமாக கருதினேன். அதில் முக்கியத்துவத்தை எதிர்பார்த்தேன். கோல்ட் கேஸ் படம் அப்படிக் கிடைத்தது. இதில் பிரித்விராஜூக்கு தனி டிராக் உள்ளது. எனக்கு கதையும் பாத்திரமும் பிடித்திருந்ததால் இதில் நடித்தேன்.  நீங்கள் நடித்துள்ள பாத்திரம் அமானுஷ்யங்களை நம்பி பயப்படும்படியாக உள்ளது. இதனை எப்படி நடித்தீர்கள்? எனக்கு அமானுஷ்யங்களின் மீது நம்பிக்கை கிடையாது. எனவே இந்த பாத்திரம் எனக்கு சவாலாக இருக்கும் என நினைத்தேன். அமானுஷ்யங்களை நம்பாத பெண் என்பதால் பயப்படும் காட்சிகள் எப்படி வரும் என்று கவலைப்பட்டேன். ஏனெனில் எனக்கு பயமே வரவில்லை. ஒருவகையில் நடிகையாக எனக்கு இது புதிய அனுபவமாக இருந்தது.  உங்களிடம் வரும் கதைகளை நிராகரிக்கிறீர்கள் என்று கூறுகிறார்களே? நான் ஒரே மாதிரியான பாத்திரங்களை செய்ய விரும்பவில்லை என்பதுதான் இதற்கு காரணம். இதுபோல வதந்திகளை பரப்புவது

நகைச்சுவையை செய்ய நாட்டில் ஜனநாயகத்தன்மை அவசியம்! - சைரஸ் புரோச்சா

படம்
    சைரஸ் புரோச்சா         சைரஸ் புரோச்சா எழுத்தாளர் , டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களை ஹஸே தோ பாஸே நிகழ்ச்சியில் பங்கேற்றத் தூண்டியது எது ? என்னை நானே எவ்வளவு சிறந்தவன் என்று கண்டுபிடிக்கத் தோன்றியது . அந்த முயற்சியின் விளைவாகவே நான் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன் . நிகழ்ச்சியின் கான்செப்ட் வேடிக்கையும் , சுவாரசியமும் கொண்டது . நீங்கள் ரிகானா போன்ற புகழ்பெற்ற ஒருவராக இருக்கலாம் . ஆனால் ஒருவரை சிரிக்க வைப்பது கடினமான ஒன்று . நீங்கள் எவ்வளவு சிறந்தவர் என்று நீங்களே தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு . பொதுமுடக்க காலத்தில் உங்களை எப்படி பரபரப்பாக வைத்துக்கொள்கிறீர்கள் ? தினசரி எனது நாயுடன் ஐந்துமுறை வெளியே செல்கிறேன் . அதிகாலை ஆறுமணிக்கு உடற்பயிற்சி செய்கிறேன் . இந்தியாவில் நகைச்சுவை என்பது எப்படி இருக்கிறது ? நீங்கள் நகைச்சுவை செய்வதற்கு நாட்டில் ஜனநாயகத்தன்மை தேவையாக உள்ளது . கூடவே பிரச்னைகளை சமாளிக்க நல்ல வழக்கறிஞரும் தேவை . இதில் நிறைய பிரச்னைகளும் உள்ளதுதான் . அதிலும் நீங்கள் மக்கள் நினைப்பதுபோல் இல்லாமல் நகைச்சுவை செய்யமுடியும் . ஜனநாயகத்தன்மையோடு ந

கண்டமேனிக்கு கலாய்க்கும் சமூக வலைத்தள ஆட்கள்! - ட்விட்டர், இன்ஸ்டா பரோடி கணக்குகளில் சிரிப்பு விளையாட்டு

படம்
              கண்டமேனிக்கு கலாய்ப்போம் சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பிறரை கிண்டல் செய்வது , பகடிக்கு உள்ளாக்குவது என்பது வேற லெவலுக்கு மாறிவிட்டது . சீரியசான அனைத்து விஷயங்களையும் மக்கள் சின்னாபின்னாக்கி சிரிக்கவிட்டு சிதறவிடுகிறார்கள் . இப்படியெல்லாம் யோசிக்கமுடியுமா என அசரடிக்கிறார்கள் . இப்படி கிண்டல் செய்து கலாய்ப்பதற்கென்றே தனியாக சேனல் ஒன்றை பல்வேறு சமூக வலைத்தளங்களில் தொடங்கி சென்சார் பிரச்னையின்றி கிண்டல் செய்து தள்ளுகிறார்கள் . தொடர்புடையவர்களுக்கு பச்சை மிளகாயை நறுக்கென கடித்தபடி இருக்குமாறு காமெடி செய்கிறார்கள் அவர்களைப் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம் . தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கலைஞர் ஹாப்மெயர் . இவருக்கு 41 வயது . இவர் பார்சி பொம்மைகளை கிண்டல் செய்து பல்வேறு படங்களை பதிவிடுகிறார் . பார்பி பொம்பை எப்படியிருக்கும் என்று உங்களுக்கு தெரியும ? கச்சிதமான மார்பகங்கள் , உடுக்கு இடை , நீளமான கால்கள் என அமைக்கப்பட்டிருக்கும் . இதற்கு எதிர்மாறாக ஹாப்மெயர் தனது பார்பியை வடிவமைக்கிறார் . படங்கள் பார்த்தாலே இயல்பாக இருக்கும் . இவரது நோக்கம் . ஒன்

நிர்வாகத்திறன் கொண்ட பெண்மணிகள்! - ஜெசிந்தா ஆர்டெர்ன், கமலா ஹாரிஸ், ட்சாய் இங்க் வென், செலிஸ்டா பார்பர்

படம்
              சிறந்த பெண்மணிகள் ஜெசிண்டா ஆர்டெர்ன் பிரதமர் (2017 முதல் ), நியூசிலாந்து இவரையும் அந்நாட்டின் இளமையான பிரதமர் என்று கூறப்போவதில்லை . அதைத்தாண்டிய பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டவராக ஜெசிந்தா இருக்கிறார் . மக்களின் மீதான கருணை , நம்பிக்கை , சகிப்புத்தன்மை , பிற கலாசாரங்களை ஏற்றுக்கொள்ளுதல் என பல்வேறு குணங்களைக் கொண்ட அரசியல் தலைவராக இருக்கிறார் . இவரை உலகம் அடையாளம் கண்டுகொண்டது உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனில்தான் . கோவிட் 19 பிரச்னையில் ஜெசிந்தா எடுத்து உறுதியான விதிகள் , நடைமுறைப்படுத்திய கட்டுப்பாடுகள் , காட்டிய வேகத்தை ஊடகங்கள் மறக்கவே முடியாது . கிறிஸ்ட்சர்ச் விவகாரத்தில் ஜெசிந்தா பிற மதத்தினர் மீது காட்டிய நேசமும் , அக்கறையும் அரசியல் தாண்டியவை . மதவெறியை தூண்டும் பிரிவினைகள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியவை . இப்படி நாம் சொன்னாலும் இவரிடமும் சில பிழைகள் உண்டு . மக்கள் அனைவருக்குமான வீடுகளை குறைந்த விலையில் கிடைக்கச்செய்வதில் தவறியது . குழந்தைகள் வறுமையில் தவிப்பதை தடுக்க முயற்சிகள் செய்யவில்லை என்று விமர்சனங்கள் வந்து

இந்தியாவை மகிழ்விக்கும் தனிக்குரல் கலைஞர்கள் இவர்கள்தான்! - இணையத்தைக் கலக்கும் புதிய பிரபலங்கள்

படம்
😆 1 bhargav kenny virdas praveen தனிக்குரல் கலைஞர்கள் இன்று இணையம் எங்கும் பிரபலமாக உள்ளனர். தமிழில் அலெக்ஸ் பின்னி எடுப்பது போல இந்தியாவெங்கும் தனிக்குரல் கலைஞர்கள் பல்வேறு தீம்கள் எடுத்து காமெடியில் மக்களை மறக்கவைக்கின்றனர். இதில் சினிமா போல பெரிய சென்சார் விஷயங்களை யாரும் செய்வதில்லை. உதாரணத்திற்கு வீர்தாசை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வடிவம் மேற்குலகு சார்ந்தது என்றாலும், வீர்தாஸ் இதனை இந்தியாவிற்கு ஏற்றபடி சிறப்பாக மாற்றி வெற்றிகண்டிருக்கிறார். kanan மிஸ்டர் ஃபேமிலி மேன் பிரவீன் குமார் அமேஸான் ப்ரைம் தமிழில் வரும் தனிக்குரல் கலைஞரின் படைப்பு. நடுத்தர வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும் பிரச்னைகளைத்தான் ஒருமணி நேரம் நிகழ்ச்சியாக செய்கிறார். பெரும்பாலானோர் வாழ்க்கைதான். அதிலுள்ள சுவாரசியத்தைக் கண்டறிந்து பேசுவதுதான் பிரவீனின் கிரியேட்டிவிட்டி. குங்பூ போண்டா பேக்கி அமேஸான் ப்ரைம் பார்க்கவ் ராமகிருஷ்ணன் என்பதுதான் பேக்கியாக சுருங்கிவிட்டது. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் 30 பிளஸ் ஆட்களின் சந்தோஷம், கலவர விஷயங்களை நிகழ்ச்சியில் சுவைபட பேசுகிறார். பஞ்சகச்சம் கட்டி, போ டை கட்டி வ

வறுமைதான் எனக்கு உலகைக் கற்றுக்கொடுத்தது

படம்
pinterest மொழிபெயர்ப்பு நேர்காணல்  ராபர்ட் பெனிக்னி, இத்தாலி நடிகர் பினாச்சியோ கதை உங்களுக்கு முழுவதுமாக தெரியவில்லை என்றாலும் லேசு பாசாக அறிந்திருப்பீர்கள். மரத்தில் செய்யப்பட்ட சிறுவன் நிறைய பொய்களைச் சொல்லிக்கொண்டே இருப்பான். பொய்களின் நீளத்திற்கு ஏற்ப மூக்கும் வளர்ந்து கொண்டே இருக்கும். 1970களில் உலகம் முழுக்க வலம் வந்த குழந்தைகளின் கதை இது. இந்த கதை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த கதையில் வரும் பினாச்சியோ திரும்ப திரைப்படமாக்கப்பட்டு எழுபதாவது பெர்லின் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டுள்ளது. இதில், பினாச்சியோவின் அப்பா கெபிட்டோவாக, இத்தாலி நடிகர் ராபர்ட் பெனிக்னி நடித்துள்ளார். இவர் நடித்த லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படம் ஆஸ்கார் கௌரவம் பெற்றது. எழுத்தாளர், இயக்குநர் நடிகர் என பன்முகம் கொண்ட -அவரிடம் பேசினோம்.  நீங்கள் இளமையில் கடுமையான வறுமையைச் சந்தித்தவர் என்று கேள்விப்பட்டோம்.  ஆமாம். எனது தந்தை உண்மையில் தச்சுவேலை செய்பவர்தான். அவர் என்னை நான் சொல்லும் ஏராளமான பொய்களை வைத்து என்னை செல்லமாக பினாச்சியோ என்று அழைத்தார். நான் டஸ்க