பற்கள், செரிமானம், தூக்கம் - அறிவியல் அறிவோம்.

 முத்துப்பல் வரிசை


இந்தியாவில் உள்ள ஊடகத்தினர் பலருக்கும் பற்கள் பறிபோய்விட்டது. முதுகெலும்பும் இற்றுவிட்டது. அதனால்தான் ஊடகத்தினர் தாங்கள் சமூகத்தில் காவல் நாய்கள் என்பதை மறந்துவிட்டு அதிகாரத்திற்கும் பணத்திற்கும் வாலை குலைத்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பெல்ட்டில் சிகிச்சை தேவைப்படுகிறது. சரி இருக்கட்டும். நாம் அறிவியல் பக்கம் நிற்போம். பற்களைப் பற்றி பேசுவோம். 


குழந்தையாக இருக்கும்போது ஒருவருக்கு இருபது பற்கள் இருக்கும். பிறகு, இவற்றுக்கு கீழேயே பெரிய பற்கள் முளைக்கும் தருவாயில் குழந்தை பற்கள் விழுந்துவிடும். ஈறுகளுக்கு குழந்தை பற்கள் பொருத்தமாக இருக்காது. எனவே, பெரிய பற்களே உணவை அரைக்க உதவும். 


ஒருவரின் ஆறு முதல் பனிரெண்டு வயது வரையிலான காலத்தில் குழந்தை பற்கள் விழுந்துவிடுகின்றன. 


தினசரி பட்டாணி அளவு பற்பசையை பல்துலக்க பயன்படுத்தலாம். அதை இருமுறை பயன்படுத்த வேண்டுமா என்பதை, நீங்கள் சாப்பிடும் உணவில் இறைச்சி உண்டா, மாவுப்பொருட்கள் உண்டா என்பதை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கலாம். அமெரிக்க தயாரிப்பான கோல்கேட், இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான பெப்சோடென்ட் ஆகிய பற்பசைகளை நீங்கள் பயன்படுத்தலாம். இதிலும் கூட ஜெல் அவசியமில்லை. க்ரீம் போதுமானது. இந்திய தயாரிப்புகளை தவிருங்கள். கலப்படம் அதிகம்.


சொத்தைப் பற்களைப் பிடுங்கும்போது வலி, பேரளவில் இருக்கும். இதற்கு காரணம் பற்களின் ஈற்றில் நரம்புகள், ரத்த நாளங்கள் உள்ளன.எனவே, அரசு மருத்துவமனையில் ஒழுங்காக பாடம் படிக்காமல், காசு கொடுத்து கொல்லைப்புறமாக பின்புற கதவு வழியாக வந்த மருத்துவர்கள் கையில் உங்களை ஒப்படைக்க கூடாது. அப்படி செய்தால், வாழ்க்கை முழுக்க முகம் கோணலாகி நரம்பு பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும். 


ஒருவர் வயது வந்தோராக இருக்கும்போது மொத்தம் முப்பத்தி இரண்டு பற்கள் இருக்கும்.


பற்கள் முளைக்கும்போது சிலசமயம் தாறுமாறாக செல்வதுண்டு. இதனால் பற்களின் வரிசை தாறுமாறாகும். இதை சரிசெய்ய பல் மருத்துவத்தில் பிரேசஸ் எனும் கம்பியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த கம்பிகள் பற்களை சீரான வரிசையில் இருத்துகிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, இதை கழற்றிவிடலாம். 


பற்களில் முன்பற்கள் உணவுகளை சிறு துண்டுகளாக உடைக்கின்றன. பின்னால் உள்ள பற்கள், அதை அரைத்து செரிமானத்திற்கு உகந்ததாக மாற்றுகின்ற்ன. 

___________________________________________________________________________________________________________________________

சோறுதான் முக்கியம்


இந்திய நாட்டின் ஆட்சித்தலைவர் அவரது நண்பர்களுக்காக உழைக்கிறார். ஆனால், மக்கள் அவரவர் வயிற்றுக்காக உழைத்து வருகிறார்கள்.ஆக மொத்தம் நம் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான்.சோறு. சோறு தின்பது எதற்கு?


உணவுதான் உங்களுக்கு உடலின் களைப்பைப் போக்குகிறது. ஆற்றலை வழங்குகிறது. உங்களை வளர்ச்சியை நோக்கி உந்தித் தள்ளுகிறது.ஆகவே, நல்லுணவுகளை உண்ணுங்கள். மாட்டிறைச்சியோ, வெண்டைக்காய் புளிக்குழம்போ, பசிக்கு உணவு தேவை. உடலுக்கு ஒத்துவரும் உணவுகளைச் சாப்பிடலாம்.


வயிற்றில் உணவை செரிக்க ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது.இதிலிருந்து வயிற்றைக் காக்க தனியாக திரவம் இருக்கிறது. 


சிறுகுடலின் நீளம் ஏழு மீட்டர் ஆகும்.அதாவது, 23 அடி.


நாம் சாப்பிடும் உணவு முதலில் செல்லும் இடம் எசோபாகஸ் எனும் குழாய்ப்பகுதி. இதிலிருந்து உணவு குடலுக்குச் செல்கிறது. 


நாம் தோராயமாக ஆண்டுக்கு 500 கிலோ உணவை சாப்பிடுகிறோம். இதில் அமெரிக்கர்கள் மட்டும் விதிவிலக்கு. அவர்கள் பிற நாடுகளை அபகரித்து அங்குள்ள வளங்களையும் திருடுவதால், நாம் சொன்ன ஆண்டுக்கணக்கு பற்றாது. 


சிறுகுடல் வழியாக சத்துக்கள் ஈர்க்கப்பட்டு கல்லீரலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 


பெருங்குடலில் ஒருவர் சாப்பிட உணவின் மிச்சங்கள், மீதிகள் தேங்குகிறது. அங்கு அதில் இருந்து நீர் உள்ளிழுக்கப்படுகிறது. பிறகு, ரெக்டம் வழியாக வெளியே தள்ளப்படுகிறது. மலம் என்பது உடலுக்கு தேவையில்லாத ஒன்று.பாலை கல்லுக்கு ஊற்றிவிட்டு, மூத்திரத்தை குடித்து சாணியைத் தின்பது அறிவியல் முறையில் சரியான அணுகுமுறை கிடையாது. கழிவுகளில் கிருமிகள் இருக்கும்.


நீங்கள் தண்ணீர் குடிக்கும்போது, அது நேராக குடலுக்கு வருகிறது. பிறகு ரத்தத்தில் கலக்கிறது.சிறுநீரகம் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீரை பிளாடருக்கு அனுப்புகிறது. பிறகுதான் உங்களால் அதை சிறுநீராக வெளியேற்ற முடிகிறது. குறிப்பு - இதிலும் உடலில் உள்ள அதிகப்படியான உப்பு வெளியேற்றப்படுகிறது. இதை ஒருவர் உணவாக, மருத்துவ சிகிச்சைப் பொருளாக பயன்படுத்தக்கூடாது. சில முட்டாள்கள் பயன்படுத்துவதாக வீடியோ போட்டாலும் அதை நம்பாதீர்கள்.அதெல்லாம் அறிவியலுக்கு புறம்பானவை.

_______________________________________________________________________________________________________________________________________________________

 

தூக்கம் வருதே


கொட்டாவி விடுவது உடல் சோர்வுக்கு உள்ளாகிவிட்டது. ஆக்சிஜன் தேவை என்பதன் அடையாளம்தான். கொட்டாவி விடும்போது உடல் ஆக்சிஜனின் தேவையை அடையாளப்படுத்துகிறது. 


தூங்கும்போது நம்மை அறியாமல் 45 முறை உடலின் நிலையை மாற்றிக்கொள்கிறோம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டப்படி, குறைந்த கூலிக்கு அதிக நேரம் உழைப்பவர்கள் இப்படி தூங்க முடியுமா என்று தெரியவில்லை. 


ஒருவர் தூங்கும்போது வரும் கொடும் கனவுகளை ஆங்கிலத்தில் நைட்மேர் என்று அழைக்கின்றனர். இப்படி வரும் கனவுகள் பலவும் அன்றைய நாளின் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அமைய வாய்ப்புகள் அதிகம். கனவுகள் ஏன் உருவாகிறது என்பது முழுமையாக தெரியவில்லை. அதை இன்றுவரை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.


தூங்கினால்தான் மூளை புத்துணர்ச்சி அடையும். தூங்காமல் உழைப்பவர்கள், உடல், மனம் ஆகிய இரண்டின் செயல்பாடும் மந்தமாகிவிடும். வயது வந்தோர் ஏழு மணிநேரம் தூங்கவேண்டும். நேரத்தை குறைத்தால் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகள் பாதிக்கப்படும்.


தூக்கத்தில் நடக்கும் குறைபாடு குழந்தைகளுக்கு இருக்கலாம். உடை அணியாமல், உணவு தேடிக்கூட அவர்கள் செல்லலாம். இந்தக் குறைபாடு மெல்ல வயது வந்தோராக மாறும்போது குறைந்து நின்றுவிடும். ஆபத்தானது இல்லைதான். ஆனால் குழந்தைகளைக் கண்காணிப்பது அவசியம். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால்,அவர்களை உளவியல் மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது முக்கியம். திட்டுவது, இழிவுபடுத்துவது குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும். 


ஒருவருக்கு ஒருநாளில் வரும் கனவுகளில் எண்ணிக்கை தோராயமாக 4. கனவுகளின் நேரம் 5 நிமிடம் தொடங்கி 30 நிமிடங்கள்தான். முழு வாழ்க்கையே வாழ்ந்தது போலத் தோன்றினாலும் உண்மையில் கால அளவு இவ்வளவுதான். 


 

நன்றி

டிகே புக்ஸ்


  #sleep #nightmares #food #gut #teeth #blood #life #health #bacteria #wellness #acid #nutrient


 



 


  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?