இடுகைகள்

மின்னூல் வெளியீடு 2020 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசுரகுலம், நட்பதிகாரம் இரு மின்னூல்கள் வெளியீடு! - அமேஸான் வலைத்தளம்

படம்
இரண்டு மின்னூல்கள் அறிமுகம்!  படிப்பது, எழுதுவது சார்ந்தே நான் இருக்கிறேன். இதன் காரணமாக பெரிய நட்பு வட்டத்தை என்னால் உருவாக்கிக்கொள்ளமுடியவில்லை. அதேசமயம் உறவு என்பது சுயநலன் சார்ந்தது என்பதை பல்வேறு உறவுகளை நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன. மனம் விட்டு ஒருவரிடம் பேசுவது என்பதே இன்று கடினமாக இருக்கிறது. இத்தகையை சூழலில் எனக்கு பள்ளிப்பருவத்தில் நண்பன் ஒருவன் கிடைத்தால் அவனது வாழ்க்கை துணிச்சலானது எனது குரலாக அவன் இருந்தான். தடுமாற்றங்கள் வாழ்வில் தென்படும்போதெல்லாம் நான் அவனையே நினைத்துக்கொள்கிறேன். அவனோடு உரையாடிய சில ஆண்டு பதிவு கள்தான் இந்த நூல்.  அமேஸானில் கிடைக்கிற நூலை கிண்டில் கணக்கு தொடங்கி வாசியுங்கள். நன்றி.  நட்பதிகாரம்  https://www.amazon.in/dp/B08B14WJ6M முத்தாரம் வார இதழில் சித்திரவதை கருவிகள் பற்றி எழுதும்போது சைக்கோ கொலைகாரர்களைப் பற்றி எழுதும் உந்துதல் தோன்றியது. அதன் விளைவாக அலுவலகம் முடிந்தபிறகு அரைமணிநேரம் அங்கேயே உட்கார்ந்து பல்வேறு வலைத்தளங்களை படித்து சுருக்கமான அறிமுகமாக அசுரகுலம் என்ற பெய ரில் தொடராக பிரதிலிபி தமிழ் வலைத்தளத்தில் எழுதி வந்தேன்.  பின் அதனை நூலூக

ஆதியில் சொல் இருந்தது! - மின்னூல் தரவிறக்க முகவரி

படம்
டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கன் கிரானிக்கல், வயர் இணையதளம் ஆகிய இடங்கள் வெளிவந்த நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு நூல் ஆதியில் சொல் இருந்தது. இந்த நூலை நாம் ஏன் படிக்கவேண்டும் என்றால், நடப்பு காலத்தில் பேச்சுரிமை எழுத்துரிமைக்கான அச்சுறுத்தலாக சூழல் நிலவுகிறது. அதைப்பற்றி இந்நூலில் பல்வேறு ஆளுமைகள் பேசுகின்றனர். இந்நூலில் நம் அடிப்படை உரிமைகளுக்காக போராடும், நடப்பு சூழலை புரியவைக்கும் கேள்வி பதில்கள் உள்ளன. தேசியவாதம், வளரும் பிரிவினைவாதம், இந்தி சினிமாத்துறையின் எதிர்காலம், ஐஐடிகளில் நடைபெறும் இந்துத்துவ ஆட்களின் தலையெடுப்பு, செயற்கை நுண்ணறிவின் வேகம், சிறுவயதில் விளையாட்டை லட்சியமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை என பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடியும். நூலை பீடிஎஃப் வடிவில் தரவிறக்கி வாசிக்க..... நூலை இபப் வடிவில் தரவிறக்கி படிக்க...  http://www.mediafire.com/file/49jvn2kam1u44f2/asi_ivw.pdf/file http://www.mediafire.com/file/u91m32hdr4ex8pz/ASI_ivw.epub/file