இடுகைகள்

நூல் அறிமுகம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் எட்டாவது பிரதமராக பதவி வகித்த சந்திரசேகர்! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
      சந்திரசேகர்         சூப்பர் பவர் ஷோடவுன் பாப் டேவிஸ் - லிங்லிங் வெய் ப.480. ரூ.599 அமெரிக்கா, சீனா இடையே ஏற்பட்டுள்ள பொருளாதார போருக்கு யார் காரணம் என்று நூல் விளக்குகிறது. பலரும் டிரம்பும் ஜிங்பிங்கும்தான் காரணம் என்று கூறுவார்கள். அதுபற்றிய உண்மைகளை நூல் முன்வைத்து பேசுகிறது. சந்திரசேகர் ரோட்ரிக் மேத்யூஸ் ப.344 ரூ.699 இந்தியாவின் எட்டாவது பிரதமராக பதவி வகித்தவர் சந்திரசேகர். மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்குப் பிறகு வி.பி. சிங்கின் அரசு கவிழ்ந்துவிட்டது. இக்காலகட்டத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி பேசுகிற நூல் இது. அவுட் இன்னோவேட் அலெக்ஸாண்டர் லாசரோவ் ப.304 ரூ. 1250 அமெரிக்காவின் சிலிக்கன் வேலி கடந்த பல்வேறு கண்டுபிடிப்பாளர்கள், அவர்களின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பற்றி இந்த நூல் பேசுகிறது. கொரோனா வைரஸ் லீடர்ஷிப் அண்ட் ரெகவரி ப. 192 ரூ.599 கொரோனா காலத்தில் வாழ்வதே கடினம். இதில் தொழில் தொடங்கி நடத்துவது சாத்தியமா? என்பதைப் பற்றி நூல் பேசுகிறது.   finacial express

எதிர்கால வேலைவாய்ப்பு முதல் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான உரிமைப்போராட்டங்கள் வரை- புதிய புத்தகங்கள் அறிமுகம்

படம்
      cc         தி விக்டரி புராஜெக்ட்  சௌரப் முகர்ஜி , அனுபம் குப்தா ப .304 ரூ .544 இன்று இந்தியா வரலாறு காணாத பொருளாதார தேக்கத்தில் உள்ளது . அதேசமயம் நாம் வேலை செய்யும் முறைகளும் , பணிகளும் மாறியுள்ளன . இந்த சூழ்நிலையில் நம் எதிர்காலம் எப்படி இருக்கும் ? புதிய தலைமுறையினர் எப்படி இதனை எதிர்கொள்வது என விளக்கியுள்ளனர் . ஹோப் இன் ஹெல் ஜொனாதன் போரிட் ப .384 ரூ .699 சூழல் மாறுபாடு என்பது இன்று முக்கியமான பிரச்னையாகி உள்ளது . இதனை அறிவியல் முறையில் எப்படி அணுகி பிரச்னையைத் தீர்ப்பது , இதனை எப்படி ஆழமாக புரிந்துகொள்வது , அதன் தீவிரத்தன்மை ஆகியவற்றை இந்த நூல் ஆராய்கிறது . டெட்லி அவுட்பிரேக் அலெக்ஸாண்ட்ரா லெவிட் ப .256 ரூ . 699 நுண்ணுயிரிகள் மனிதர்களை தாக்குவது வரலாறெங்கும் நிகழ்ந்து வருகிற ஒன்றுதான் . இதன் வளர்ச்சி , வெளிப்பாடு , தாக்கம் ஆகியவற்றை பற்றி இந்த நூல் ஆராய்கிறது . தி ஆர்எஸ்எஸ் அண்ட் தி மேக்கிங் ஆப் தி டீப் நேஷன் தினேஷ் நாராயணன் ப . 344 ரூ .699 ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாறு , அதன் உள்கட்டமைப்பு , அதன் பதவிகள் , செயல்பாட

புத்தக அறிமுகம்! - இந்தியாவின் பொருளாதாரப் பிரச்னை முதல் ஷாகீன் பாக் போராட்டங்கள் வரை

படம்
புத்தக அறிமுகம் ஓவர்ட்ராப்ட் உர்ஜித் படேல் ஹார்பர் கோலின்ஸ் ரூ.599 தனது பணிக்காலத்தில் ரிசர்வ் வங்கி இயக்குநரான எதிர்கொண்ட பொருளாதார சிக்கல் பற்றி உர்ஜித் படேல் எழுதியுள்ள நூல் இது. ஷாகீன்பாக் – புரடெஸ்ட் டு தி மூவ்மென்ட் ஜியா அஸ் ஸலாம், உஸ்மா அசாப் ப்ளும்ஸ்பரி 599 உலகத்திற்கு ஜனநாயகம் மீது ஆர்வம் கொண்ட இந்தியப் பெண்களின் குரலை வெளிப்படுத்திய போராட்டம் ஷாகீன்பாக். இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களோடு இணைந்து நின்ற எழுத்தாளர்கள் அந்த அனுபவங்களை தெளிவாக எழுதியுள்ளனர். குடியுரிமைச்சட்டம், மக்கள் தொகை பதிவேடு பற்றி அறிய விரும்புபவர்கள் இந்த நூலை கண்டிப்பாக வாங்கி படிக்கலாம். பேட் நியூஸ்: ஒய் வீ ஃபால் ஃபேக் நியூஸ் ராப் பிரதர்டன் ப்ளூஸ்பரி 599 உண்மையான தகவல்களை விட மனிதர்கள் உணர்வுபூர்வமான பொய்த்தகவல்களை வதந்திகளை எப்படி நம்புகிறார்கள், அதனை பிறருக்கு பகிர்கிறார்கள் என்பதை அறிவியல்பூர்வமாக எழுத்தாளர் எழுதியுள்ளார்.

மாற்றுப்பாலினத்தவர் பற்றிய நூல்கள் அறிமுகம்!

படம்
மாற்றுத்திறனாளிகள் பற்றிய கவனம் இப்போதுதான் உலகம் முழுக்க ஏற்பட்டு வருகிறது. அண்மையில் கூகுள் தங்களது சர்ச் எஞ்சின் வழியாக யார் அதிகம் தேடப்பட்டவர்கள் என்ற பட்டியலை வெளியிட்டது. இதில் அதிகம் பேர் மாஷா பி ஜான்சன், என்ற மாற்றுப்பாலினத்தவர் பற்றி அதிகம் தேடியுள்ளனர். அவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள நூல்கள் உதவும்.   தி வேர்ல்டு தட் பிலாங்க்ஸ் டு அதிதி அங்கிராஸ் – அகில் கட்டியால் ஹார்பர் கோலின்ஸ் இந்தியா   தெற்காசியாவைச் சேர்ந்த மாற்றுப்பாலினத்தவர்களின் கவிதைகள் நிரம்பிய நூல் இது. இந்தியாவைச்சேர்ந்த காசிம் அலி முதல் ஹோசங் மெர்ச்சண்ட் வரை தங்களுடைய வாழ்க்கையில் கண்ட பல்வேறு உண்மைச்சம்பவங்களை கவிதையாக எழுதியுள்ளனர். ஏறத்தாழ சமூகத்தில் உள்ள உண்மைகளை கண்ணாடி போல காட்டும் எழுத்துகள் இவை. கே பாம்பே பர்மேஷ் சஹானி சேஜ் 2008இல் வெளியான நூல் இப்போது சிறப்பு எடிஷனாக வெளியாகியிருக்கிறது. மும்பையில் எல்ஜிபிடியினரைப் பற்றிய வரலாறு, அவர்களைப் பற்றிய எழுத்தாளர்களின் பதிவுகள் ஆகியவை இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.   லெஸ் 2017 புலிட்சர் பரிசு பெற்ற நாவல். ஒரினச்சேர்க்கைய

இன பாகுபாட்டை எதிர்க்க குழந்தைகளுக்கு கற்றுத்தரும் நூல்கள் - வாசிப்பு பக்கம்

படம்
ஜிபி உலக நாடுகள் அனைத்திலும் பேரினம், சிறுபான்மை இனத்திற்கு எதிராக பல்வேறு வன்முறைகள், அநீதிகள் நடந்து வருகின்றன. பெரும்பாலும் நிறைய சம்பவங்கள் அரசியல் அனுகூலத்திற்காக வலிந்து ஏற்படுத்தப்படுபவைதான். இதன்மூலம் சிறுபான்மையினரை பயத்தில் அச்சுறுத்த வைத்து பெரும்பான்மையினருக்கு ஆட்சி செய்வதற்கான திறனை வழங்குவது போல மாயக்காட்சியை உருவாக்குகிறார்கள். ஆனால் உண்மையில் ஏமாற்றப்படுவது மக்கள்தான். அறிமுகமற்ற ஒருவரை உங்கள் எதிரியாக நினைத்து அவர்கள் சொத்தை அழித்து, பெண்களை கற்பழித்து, அடித்துக்கொல்வது என்பது அநீதிதானே? இதனை தவறு என வலியுறுத்தும் நூல்களை குழந்தைகளுக்கு வாசிக்க கொடுக்கலாம். இதன்மூலம் எதிர்காலத்தில் அவர்கள் நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆல் அமெரிக்கன் பாய்ஸ் ஜேசன் ரினால்ட்ஸ் பிரெண்டன் கைலி கருப்பு மற்றும் வெள்ளை இன சிறுவர்களுக்கு காவல்துறையால் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை பற்றிய கதை. ஸ்டாம்ப்டு: ரேசிசம், ஆன்டி ரேசிசம் அண்ட் யூ ஜேசன் ரினால்ட்ஸ் இப்ராகிஸ் எக்ஸ் கெண்டல் இனபாகுபாடு கொண்ட உலகில் குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள், அவர்களுக்கு ஏற்படும

அமெரிக்க அதிபரின் மனைவியாக...

படம்
புத்தகம் புதுசு! Impeachment AN AMERICAN HISTORY By JON MEACHAM, TIMOTHY NAFTALI,  PETER BAKERand JEFFREY A. ENGEL 304 Pages, Penguin random house.   அமெரிக்க அதிபர்களில் ஆண்ட்ரூ ஜான்சன், ரிச்சர்ட் நிக்ஸன், பில் கிளிண்டன் ஆகியோருக்கு எதிராக மக்கள் எவரும் எதிர்பார்க்காத பெரும் கண்டனத்தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தை காக்கும் முயற்சியாக இதனைக்கருதலாம் என முன்னாள் அதிபர் தாமஸ் ஜெஃபர்சன் கூறுகிறார். அமெரிக்க வரலாற்றையும் இதன்மூலம் அறியமுடிவது நூலின் சிறப்பு. Becoming MICHELLE OBAMA 448pp Penguin random house அமெரிக்க முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவின் வாழ்க்கை கதை பிகம்மிங் என்ற நூலாகியுள்ளது. சிகாகோவின் தெற்குப்பகுதியில் வாழ்ந்த மிச்செல், தன் வாழ்க்கையை வாசகர்களுக்கு இயல்பின் மணம் குன்றாமல் விவரித்திருக்கிறார். எளிய பெண்ணாக இருந்து அமெரிக்க அதிபரின் மனைவியாக மாறும்போது தன்னைச்சுற்றிலும் மாறிய சூழல்களை துல்லியமாக எழுதியுள்ளார் மிச்செல் ஒபாமா.  

கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு..

படம்
கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு.. "The Naked Roommate," by Harlan Cohen கல்லூரி செல்பவர்கள் வகுப்புகளைத் தாண்டி கல்லூரி வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்,நண்பர்களை அடையாளம் காண்பது, விடுதி அறை தூய்மை துணிதுவைப்பது அனைத்துக்கும் வழிகாட்டும் நூல் இது. “Outliers: The Story of Success," by Malcolm Gladwell 10 ஆயிரம் மணிநேரங்களை செலவிட்டு ஒரு விஷயத்தில் மாஸ்டர் ஆவது எப்படி என சுவாரசியமாக விவரிக்கிறார் கிளாட்வெல். "The Idiot," by Elif Batuman துருக்கி அகதி குடும்பத்தைச் சேர்ந்த செலின் ஹார்வர்ட் பல்கலையில் இணைகிறாள். அங்கு நட்பாகும் இவான், ஸ்வெட்லனா ஆகியோரின் மூலம் தனது வாழ்வை அடையாளம் காண்பதே நாவலின் கதை. "Exit West," by Mohsin Hamid தீராத வன்முறை நிகழும் தேசத்திலிருந்து தப்பி அகதியாக செல்லும் சயீத்-நாடியா எனும் இளம் காதல்ஜோடியின் போராட்டமே கதை. "This is Water," by David Foster Wallace   வாழ்வை தீர்மானிக்கும் கல்லூரிப்பருவத்தில் மதிப்பெண் பின்னால் ஓடாமல் திறமையாக வெல்ல இந்நூலிலுள்ள வாலஸி

குற்றவாளியை பின்தொடர்ந்த பத்திரிகையாளர்!

படம்
So You Want to Talk About Race by   Ijeoma Oluo 248 pages Seal Press அமெரிக்காவில் இன்று நிலவும் நிறவெறி, போலீசாரின் வன்முறை, பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கம், நீக்ரோ என்ற வார்த்தை ஆகியவற்றை விரிவாக விளக்கி அந்நாட்டின் வளர்ந்துவரும் இனவெறுப்பு, வெறுப்பு அரசியல் ஆகியவற்றை விளக்கியுள்ளார். எளிமையான திறந்தமனதுடன் எள்ளலுடன் எழுதும் ஐஜியோமா ஆலுவோவின் எழுத்து இந்நூலை இவ்வாண்டின் முக்கியமான நூலாக்கியிருக்கிறது. I'll Be Gone in the Dark: One Woman's Obsessive Search for the Golden State Killer by   Michelle McNamara ebook,   352 pages Harper கலிஃபோர்னியாவை அலறவைத்த சைக்கோ கொலைகாரரை தேடிய புலனாய்வு செய்தியாளர் மிச்செல் மெக்நமாராவின் க்ரைம் தேடுதலில் கிடைத்த ஆதாரங்கள் செய்திகள் திகில் தருகின்றன. மிச்செல், குற்றவாளியை நெருங்கும்போது திடீரென மர்மமாக மரணித்தார். முப்பது ஆண்டுகளாக கலிஃபோர்னியா வடக்குப்பகுதி மக்களின் உறக்கத்தை அழித்த கொலைகாரரைப் பற்றிய ஆய்வேடு என இந்நூலை கூறலாம். Top of Form

அமெரிக்க சிறைகளில் என்ன நடக்கிறது?

படம்
முத்தாரம் லைப்ரரி! These Truths: A History of the United States Jill Lepore Hardcover, 960 pages W. W. Norton Company அடிமைகளாக இருந்து அடிமைகளை வைத்திருக்கும் முதலாளிகள் வரையிலான அமெரிக்காவின் வரலாற்றை ஜில் லெபோர் விவரித்துள்ளார். இறையாண்மை, சம உரிமை, அரசியல் சமநிலை ஆகியவற்றுக்காக போராடிய அமெரிக்காவின் விடுதலை வரலாறு திகைக்க வைக்கிறது. American Prison: A Reporter's Undercover Journey into the Business of Punishment Shane Bauer , 318 pp Penguin Press 2014 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஷேன் பாயர், லூசியானாவிலுள்ள வின்ஃபீல்டு தனியார் சிறைக்கு காவலராக பணிபுரியச்செல்கிறார். தனியார் சிறை அமைப்பு, செயல்பாடு. அமெரிக்காவின் நீதி எப்படி காப்பாற்றப்படுகிறது என சுவாரசியமாக எழுதியுள்ளார்.    

கண்டுபிடிப்புகள் உருவானது எப்படி?

படம்
புத்தகம் புதுசு! How to Be a Good Creature: A Memoir in Thirteen Animals   Sy Montgomery , Rebecca Green   208 pp,Houghton Mifflin Harcourt சூழலியலாளரான சை மான்ட்கோமரி, உலகம் முழுக்க சுற்றிவந்ததில் தன்னை ஈர்த்த பதிமூன்று விலங்குகளைப் பற்றி எழுதியுள்ளார். டரன்டுலா –- புலி வரையிலான தன்னை ஈர்த்த பல்வேறு விலங்குகளைப் பற்றிய அசத்தலான கட்டுரைகளைக் கொண்ட நூலை தூரிகையால் அழகாக்கியுள்ளார் ஓவியர் ரெபெக்கா க்ரீன். How to Invent Everything: A Survival Guide for the Stranded Time Traveller Ryan North   ebook Virgin Digital அறிவியல் கண்டுபிடிப்புகள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன, எந்த வித அரசியல் சூழல்களில் தத்துவங்கள் பிறந்தன என்பது வரையிலான வரலாற்றை எளிமையாக புரிந்துகொள்ளும் மொழியில் விளக்கியுள்ளார் ஆசிரியர் ரியான் நார்த்.  

பெரும் கேள்விகளுக்கு எளிய பதில்கள்!

படம்
புத்தகம் புதுசு! The Poison Squad: One Chemist's Single-Minded Crusade for Food Safety at the Turn of the Twentieth Century Deborah Blum 352 pp,Penguin Press 1883 ஆம் ஆண்டு விவசாயத்துறையில் வேதியியலாளராக பொறுப்பேற்ற டாக்டர் ஹார்வி வாஷிங்டன் வில்லி, பாலில் கலந்த பார்மால்டிஹைடு, இறைச்சியில் பதப்படுத்த சேர்த்த போரக்ஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்களை தடை செய்து உணவுப்பொருட்களுக்கான விதிகளை(1906, வில்லி சட்டம்) வலுவாக்கினார். அவர் தொடங்கிய நச்சுதடுப்புதுறை பற்றிய சுவாரசிய தகவல்களை இந்நூல் பகிர்கிறது. Brief Answers to the Big Questions Stephen Hawking 144 pages, Bantam ஐன்ஸ்டீனுக்கு பிறகு உலகறிந்த விஞ்ஞானி அமரர் ஸ்டீபன் ஹாக்கிங், விண்வெளியில் மனிதர்கள் வசிக்கமுடியுமா? கடவுள் உண்டா? என ஏராளமான கேள்விகளுக்கு பதில் கூறியுள்ள நூல் இது.

கரையான்கள் உயிர்பிழைக்கும் அதிசயம்!

படம்
புக் பாய்ன்ட்! Underbug: An Obsessive Tale of Termites and Technology Lisa Margonelli 320 pages Scientific American / Farrar Straus and Giroux நிலம், நீர், காற்று என நச்சுக்களை தொழில்துறை மூலம் விளைவித்தாலும் கரையான்கள் தம் இயற்கை வழியை விட்டு விலகாமல் காப்பாற்றிக்கொள்வது எப்படி ஆராய்ந்துள்ளார் பிரபல பத்திரிகையாளர் லிசா மார்கொனெலி. சுற்றுச்சூழல் பிரச்னைகள், நாளைய நம்பிக்கைகள் ஆகியவற்றையும் விரிவாக பேசியுள்ளார். You Can Fix Your Brain: Just 1 Hour a Week to the Best Memory, Productivity, and Sleep You've Ever Had Tom O'Bryan  304 pages Rodale Books ஞாபகமறதி என்பது இன்று அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்னை. அதனை எப்படி சிறுசிறு பயிற்சிகள் மூலம் குறைத்து மூளையை சூரியனாக பிரகாசிக்க செய்வது என வழிகாட்டியுள்ளார் மருத்துவர் டாம் ஓபிரையன். really liked it