மாற்றுப்பாலினத்தவர் பற்றிய நூல்கள் அறிமுகம்!
மாற்றுத்திறனாளிகள் பற்றிய
கவனம் இப்போதுதான் உலகம் முழுக்க ஏற்பட்டு வருகிறது. அண்மையில் கூகுள் தங்களது சர்ச்
எஞ்சின் வழியாக யார் அதிகம் தேடப்பட்டவர்கள் என்ற பட்டியலை வெளியிட்டது. இதில் அதிகம்
பேர் மாஷா பி ஜான்சன், என்ற மாற்றுப்பாலினத்தவர் பற்றி அதிகம் தேடியுள்ளனர். அவர்களைப்
பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள நூல்கள் உதவும்.
தி வேர்ல்டு தட் பிலாங்க்ஸ் டு
அதிதி அங்கிராஸ் – அகில் கட்டியால்
ஹார்பர் கோலின்ஸ் இந்தியா
தெற்காசியாவைச் சேர்ந்த
மாற்றுப்பாலினத்தவர்களின் கவிதைகள் நிரம்பிய நூல் இது. இந்தியாவைச்சேர்ந்த காசிம் அலி
முதல் ஹோசங் மெர்ச்சண்ட் வரை தங்களுடைய வாழ்க்கையில் கண்ட பல்வேறு உண்மைச்சம்பவங்களை
கவிதையாக எழுதியுள்ளனர். ஏறத்தாழ சமூகத்தில் உள்ள உண்மைகளை கண்ணாடி போல காட்டும் எழுத்துகள்
இவை.
கே பாம்பே
பர்மேஷ் சஹானி
சேஜ்
2008இல் வெளியான நூல் இப்போது
சிறப்பு எடிஷனாக வெளியாகியிருக்கிறது. மும்பையில் எல்ஜிபிடியினரைப் பற்றிய வரலாறு,
அவர்களைப் பற்றிய எழுத்தாளர்களின் பதிவுகள் ஆகியவை இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
லெஸ் 2017
புலிட்சர் பரிசு பெற்ற நாவல்.
ஒரினச்சேர்க்கையாளரான எழுத்தாளர் சமூகத்தில் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளை நையாண்டியாக
சொல்லும் நூல் இது. நூலில் நீங்கள் போராடிக்கிறது என்று சொல்லும் எந்த விஷயமும் கிடையாது
என்பதுதான் ஸ்பெஷல்.
மெமரி ஆப் லைட் 2020
ரூத் வனிதா
பெங்குவின் ராண்டம் இந்தியா
18ஆம் ஆண்டு நூற்றாண்டில்
நடைபெறும் சம்பவங்களைக் கொண்ட வரலாற்று நூல். இதில் ஒரினச்சேர்க்கையாளர்களைப் பற்றி
பேசப்படுகிறது. தெற்காசியவைப் பற்றிய ஆய்வுப்பூர்வமாக தகவல்களை ஆசிரியர் கூறியுள்ளார்.
மோகனசுவாமி 2006
வசுதேந்திரா
மொழிபெயர்ப்பு ரேஷ்மி டெர்டல்
கன்னடத்தில் வெளியான நூல்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வாழ்பவர், தனது பாலியல் அடையாளத்தை
தெரிந்துகொள்வதுதான் கதை. கிராமம், நகரம், நகரத்தின் சூழ்நிலை, அங்கு தன் காதலை கண்டுபிடிப்பது
என செல்லுகிற கதையில் சுபமான முடிவை எதிர்பார்க்காதீர்கள்.
செக்ஸ் அண்ட் தி
சுப்ரீம் கோர்ட்
சௌரபி கிர்பால்
ஹாசட் இந்தியா
377 என்ற பிரிட்டிஷ் சட்டம்
மாற்றுப் பாலினத்தவரை சிறையில் அடைக்க வழிவகை செய்த்து. இதை எப்படி எதிர்த்து போராடி
வென்றனர் என்பதை நூல் சொல்லுகிறது. அதோடு சமூக மாற்றத்தை ஏற்படுத்திய முத்தலாக் ரத்து
முதல் மேலும் பல்வேறு சட்ட மாற்றங்களை நூலில் கூறுகிறார்கள்.
லிவ்மின்ட்
சோமக் கோஷல்
கருத்துகள்
கருத்துரையிடுக