செயற்கை நுண்ணறிவை சமூக வலைத்தளத்தில் கொண்டு வந்த தலைவர்! - ஸாங் யீமிங்
ஸாங் யீமிங்
இன்று உலகையே குறுகிய நேரம்
கொண்ட வீடியோக்களால் ரசிக்க வைக்கும் பைட் டான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இவர்தான்.
செயற்கை நுண்ணறிவு கொண்ட சமூக வலைத்தளங்களின் இயக்கத்தை இவரே ஊக்கமுடன் தொடங்கி வெற்றிகண்டிருக்கிறார்.
இன்று இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் செயலி இவருடையதுதான் அமெரிக்க நிறுவனங்களான
கூகுள், ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு முன்பே ஏ.ஐ முறையில் சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட
விருப்ப அடிப்படையில் செய்திகளை வழங்கத் தொடங்கியவர் இவர்.
எளிமையாகவும் வசீகரமாகவும்
பேசக்கூடிய தொழிலதிபர்களில் இவர் முக்கியமானவர். புதிய கண்டுபிடிப்புகளின் காதலன்.
புதிய கண்டுபிடிப்புகள் நடைமுறையில் சாத்தியமா இல்லையா என்பதை விட அவற்றைப் பற்றி கற்பனை
செய்வது எனக்கு பிடிக்கும் என்று கூறுபவர், விரைவில் டிக்டாக் நிறுவன தலைமையகத்தை இங்கிலாந்தில்
அமைக்க கூடும்.
கை ஃபு லீ
benjamin |
பெஞ்சமின் நேடான்யூ
தற்போது கோவிட் -19 பெருந்தொற்றுக்கு
சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத அரசை எதிர்த்து இஸ்ரேலில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
இதுதவிர தற்போதைய பிரதமரான பெஞ்சமினுக்கு வேறு தலைவலிகளும் உண்டு. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும்
உள்ளன. இஸ்ரேலை அதிக காலம் ஆண்ட நிறுவன பிரதமரான டேவிட் பென் குரியன் சாதனையை பெஞ்சமின்
முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதோடு அவருக்கு எதிராக உள்ள இன்டிஃபெடெ அமைப்பின்
சதி, ஹமாஸ் அமைப்பின் ராக்கெட் தாக்குதல்கள், இரானின் வளர்ந்து வரும் ஆற்றல் என பல்வேறு
வகை தாக்குதல்களையும், ஆபத்துகளையும் சந்திக்கவேண்டியுள்ளது.
அவர் மட்டுமல்ல நாட்டிற்கும் மிக சிக்கலான, கடினமான காலகட்டம்தான் இது.
பைபி என்று அழைக்கப்படும்
பெஞ்சமினுக்கு எழுபது வயதாகிறது. அவர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் அவரை இஸ்ரேல்
நாட்டு மக்கள் நம்புகின்றனர். அதனால்தான் தேர்தலில் இன்றும் வெற்றிபெற முடிகிறது. இஸ்ரேல்
நாடு இன்று பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் வலிமை பெற்றிருக்கிறது என்றால் அதற்கு
பெஞ்சமினின் வலிமையும், தந்திரமான அரசியல் வியூகங்களும் முக்கியமான காரணங்கள்.
டேவிட் பிரெஞ்ச்
கருத்துகள்
கருத்துரையிடுக