இடுகைகள்

பியூங் சுல் ஹான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவதாராளவாத உலகில் மக்கள் மீது செலுத்தப்படும் கண்காணிப்பு அரசியல்!

படம்
  சைக்கோ பாலிடிக்ஸ்  பியூங் சுல் ஹான்  வெர்சோ தத்துவ நூல் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தத்துவ நூல். இதை எழுதியுள்ள பியூங் சுல் ஹான், தத்துவத்தில் புகழ்பெற்றவர். இவரைப் பற்றி, இவரது நூல்கள் பற்றி இலக்கிய இதழ்களில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பக்க அளவில் நூல் சிறியதுதான். ஆனால் கூறும் விஷயங்கள் சற்று அடர்த்தியானவை.  அவர் தனது பேச்சில் கூறுவது போலவே பல்வேறு வார்த்தைகளை  மட்டுமல்ல முழு நூலிலுள்ள அனைத்து அடிக்குறிப்பிட்டு வைத்துக்கொண்டு புரிந்துகொள்ளவேண்டும். அந்தளவு அடர்த்தியான பொருளை விளக்க முயலும் நூல்தான் இது.  நூலில் பிக் பிரதர், பிக் டேட்டா, ஜார்ஜ் ஆர்வெல்லின் நூலிலுள்ள பல்வேறு பாத்திரங்கள், பிக் பிஸினஸ் என நிறைய எடுத்துக்காட்டுகள் காட்டப்படுகின்றன. மக்கள் மீது கேமராக்களின் கண்காணிப்பு இருக்கிறது. ஆனால் அது 1984 நாவலில் வரும்படியான வற்புறுத்தலாக இல்லை. நட்புரீதியான தன்மையில் கண்காணிப்பும், மக்களை வழிக்கு கொண்டு வரும் செயல்களையும் அரசு செய்து வருகிறது என ஆசிரியர் கூறுகிறார். ஒருவரை அரசு, சமகால தொழில்நுட்பங்கள் வழியாக கண்காணிக்கிறது. அரசுக்கு எதிர