இடுகைகள்

உலகம்-அமெரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சித்திரவதையில் வித்தகி!

படம்
விசாரணைத்திலகம் ஹாஸ்பெல் ! சிஐஏ அமைப்பின் இயக்குநராக கினா ஹாஸ்பெல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிபர் ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டார் . சிஐஏவை நிர்வகிக்க ஹாஸ்பெல் தகுதியானவரா என விவாதங்கள் இன்றும் நிற்காமல் க்யூகட்டி வருகின்றன . சிஐஏ அமைப்பின் முதல் பெண் இயக்குநரான கினா ஹாஸ்பெல்லுக்கு வயது 33. செப் .11 தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை ஹாஸ்பெல் விசாரணை செய்த முறை சர்ச்சைகுரியதாக உள்ளது . ரகசிய போலீசாக பெரும்பாலும் செயல்பட்டுள்ள ஹாஸ்பெலின் வாழ்க்கை ரகசியங்கள் நிறைந்ததாகவே இன்றும் உள்ளது . கைதிகளை டார்ச்சர் செய்து விசாரிப்பதில் புகழ்பெற்றவர் என ஹாஸ்பெலை விமர்சிக்கிறது போலீஸ் வட்டாரம் . தாய்லாந்தில் அல்கொய்தா கைதிகளை ஹாஸ்பெல் டீல் செய்த விவகாரம் 2014 ஆம் ஆண்டு வெளியானது . 2002 ஆம் ஆண்டு அபு ஜூபைதா என்பவரை வாட்டர்போர்டிங் எனும் முறையில் ( கை , கால்களை கட்டிவைத்து முகத்தில் துணியால் மூடி அதன் மீது நீரைப் பாய்ச்சுவது ) உச்சபட்ச சித்திரவதைக்குள்ளாக்கினார் ஹாஸ்பெல் என்பது அபு ஜூபைதாவின் வழக்குரைஞர் தொடுக்கும் முக்கியக்குற்றச்சாட்டு . " சிஐஏ அதுபோன்ற

ராணுவத்தில் தலைகீழாக தேசியக்கொடி பொறிக்கப்பட்டிருப்பது ஏன்?

படம்
தலைகீழாக தேசியக்கொடி ! இந்தியாவில் தேசியக்கொடிக்கு பயபக்தி மரியாதை உண்டு . சூரியன் அஸ்தமனம் ஆகும் முன்பு கழற்றுவது , உடையாக , கர்ச்சீப்பாக பயன்படுத்த தடையுண்டு . ஆனால் அமெரிக்க கொடியை தைத்து உள்ளாடையாகவும் அணிகிறார்கள் . அதிலும் ராணுவத்தில் கொடியை தலைகீழாகவே தைத்து அணிகிறார்கள் . ஏன் ? 1968 ஆம் ஆண்டு அப்பி ஹாஃப்மன் என்பவர் வாஷிங்டனில் நடந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்றார் அமெரிக்க தேசியக்கொடியை தலைகீழாக குத்திக்கொண்டு வந்தவரை போலீஸ் சுற்றிவளைத்து கைது செய்தது . இன்று ஹாஃப்மனை நினைத்து பார்க்க காரணம் , தேசியக்கொடியை எரிப்பது , கிழிப்பது அமெரிக்க சட்டப்படி குற்றமாகாது என்பதால்தான் . 1923 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட சட்டப்படி , தேசியக்கொடியை தரையில் வைப்பதோ , தலைகீழாக வைக்க கூடாது என்று சொன்னதே தவிர அதனை குற்றம் என கூறவிலை . ராணுவச்சட்டம் 670-1 படி தேசியக்கொடியின் நட்சத்திரங்கள் முன்புறம் இருக்கும்படி வலியுறுத்தியதால் , ராணுவ யூனிபார்ம்களில் கொடி வலதுபுறம் வலம் இடமாக பொறி