இடுகைகள்

தமிழில் : லாய்ட்டர் லூன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூகத்தின் முன் எழுப்பப்படும் கேள்விகள்தான் க்யூ: சஞ்சீவ் குப்தா

படம்
உத்திரப்பிரதேசம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த இயக்குநர் சஞ்சீப் குப்தா தனது க்யூ(q) படத்திற்கு 2015 ஆண்டிற்கான கொலுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது பெற்றிருக்கிறார். தங்களின் படமான க்யூ எதைப்பற்றியது?           8000 ரூபாய்க்கு விற்கப்படும் எட்டு வயதான சிறுமியின் பயணம் குறித்தது ஆகும். விலைக்கு விற்கப்பட்ட சிறுமி மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு  ஒரு குடும்பத்துடன் வாழ்கிறாள். அந்த குடும்பத்திற்கென ஒரு இலக்கு உள்ளது. ஆனால் சிறுமிக்கு வரும் காய்ச்சல் காரணமாக அந்த இலக்கு தவறுகிறது. அங்கு வாழும் ஒரு பெண்மணிக்கு அவளோடு எந்த உறவும் ஏற்படாமல் பிரிக்கப்பட்டு இருக்கிறாள். அவளின் குழந்தையோடு சிறுமிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதன் பிறகு என்னவானது என்பதுதான் படம். க்யூ என்று உங்கள் படத்திற்கு பெயர் வைத்ததன் காரணம் என்ன? க்யூ எதைக் குறிக்கிறது?          இதில் பல கேள்விகள் சமூகத்திற்கு முன்பாக எழுப்பப்படுகிறது என்பதால் அதன் அடையாளமாய் படத்தின் தலைப்பு க்யூ என்பதாக உள்ளது. 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் இறுதி 20 நிமிடங்கள்தான் பார்வையாளர்களுக்கு முழுப்படத்தையும் புரிந்துகொள்ள உதவும