மாணவர்களை மன உளைச்சலில் தள்ளும் சீன அரசு தேர்வுமுறை!
சீன பொதுவுடைமைக் கட்சி, நாட்டிலுள்ள பொதுக்கல்வியைக் கட்டுப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்தி வருகிறது. அரசியல் கொள்கை திணிப்பு, அதீத தேசியவாதமும் உள்ளடங்கும். உலகிலேயே சீனாவில் பள்ளிகளும், ஆசிரியர்களும், படிக்கும் மாணவர்களும் அதிகம். சீன அரசின் நோக்கம், மக்களை உற்பத்தித்துறையில் இருந்து கண்டுபிடிப்புகளுக்கு நகர்த்தி நாட்டை முன்னேற்றுவதுதான். அதற்கு கல்வி தரமாக இருக்கவேண்டும் என்பதே முதல்படி. ஏழை - பணக்காரர், நகரம் - கிராமம் இடைவெளியே குறைத்து கல்வியில் சீர்திருத்தங்களை செய்யவேண்டும். சிந்தனையும், செயல்திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்கினால்தான் நாடு எதிர்காலத்தில் வலிமை பெறும். கிராமங்களில் சிறுபான்மை மக்களுக்கு, ஏழைகளுக்கு, தொலைதூரத்தில் வசிப்பவர்களுக்கு கற்கும் கல்வியை தரமாக்குதல், தொடக்க கல்வியை அனைவரும் எளிதாக அணுகும்படி மாற்றுதல், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வியை மானியம் அளித்து வழங்குதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மேம்படுத்துதல் ஆகியவற்றை பொதுவுடைமைக் கட்சி முக்கியமானதாக கருதியது. சீனத்தின், பதிமூன்றாவது ஐந்தாவது திட்டத்தில் கல்வியை சீர்திருத்தி மேம்படுத்து...