இடுகைகள்

ொழிபெயர்ப்பு நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாத்திகர்கள், பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது! - ஜாவேத் அக்தர், பாடலாசிரியர்

படம்
மதம் என்பது வழக்கற்று போய்விட்டது! ஜாவேத் அக்தர், பாடலாசிரியர் முதல் இந்தியராக ரிச்சர்ட் டாகின்ஸ் விருது வென்றிருக்கிறீர்கள்? இந்த விருது பகுத்தறிவாளர்களுக்கும், அறிவியலை நம்புபவர்களுக்கும் வழங்கப்படும் விருது அல்லவா? இந்த உலகில் ஆன்மிக நம்பிக்கை இல்லாதவர்கள்,   பகுத்தறிவாளர்கள் என இரண்டு தரப்பினருமே உண்டு. இவர்களின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்துவருகிறது. நான், எனக்கு நம்பிக்கையில்லாத விஷயங்களை மக்களிடையே பகிர்ந்துகொள்கின்றேன். அவை அவர்கள் அமைதியாக ஏற்றுக்கொண்டு புன்னகைக்கின்றனர். இன்று இந்தியாவில் தாங்கள் நம்பும் உண்மைகளை சொல்ல பலரும் பயப்படுகின்றனர். காரணம், விமர்சனங்கள் மீதான பயம்தான். பொதுமுடக்க காலம் எப்படி இருந்தது? கண்டாலாவில் உள்ள வீட்டில்தான் இருக்கிறேன். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியான பல்வேறு சினிமா மற்றும் டிவி தொடர்களை பார்த்து வருகிறேன். முன்னர் கவிதை எழுத நேரமில்லை என்று வருந்திக்கொண்டிருந்தேன். இந்த காலம் அந்த வருத்தத்தை போக்கியுள்ளது. எனக்கு வருத்தம் ஏற்படுத்திய விஷயம், இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான். கையறு நிலையில் அவர்கள் பட்ட கஷ்டங்களை மறக்

தேசியவாதத்தின் தந்தைகள் உருவானது இப்படித்தான்!

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் பேராசிரியர். சுனில் பி இளையிடோம் கேரளத்தின் முக்கியமான கலாசார விமர்சகர் சுனில், எழுதுவதை விட இவரின் பொதுமேடைப் பேச்சு அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிறது. இவரின் முக்கியமான படைப்பு  political unconsciousness of Modernism .  மார்க்சியத்தை புகழ்ந்து மட்டும் பேசாமல் அதன் பிரச்னைகளை பட்டென போட்டு உடைப்பதோடு அண்மையில் பாஜக முன்னெடுத்து வரும் தேசியவாத வரலாறு, நாராயணகுரு என பொதுமேடையில் அசத்தலாக பேசிவருகிறார். இசை, இலக்கியம், நடனம் என்பதைத் தாண்டி தேசியவாதம், அதன் வரலாறு வரை பேசுகிறீர்கள். உங்களது எழுத்திலும் பேச்சிலும் கூட தத்துவத்தின் சாயல் உள்ளது. எப்படி இப்படி ஒரு பாணியை பிடித்தீர்கள்.  கலாசார வரலாற்றில் நவீனத்தன்மையை ஆராய்வதே என்னுடைய பாணி. நான் இதுவரை செய்த ஆராய்ச்சிகளை இம்முறையில் செய்துள்ளேன். ஒரே ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை  நோக்கியே எழுதவேண்டும் பேசவேண்டும் என்பதில்லை. மார்க்சும் இம்முறையில் எதையும் வலியுறுத்தியவரில்லை. நான் கைக்கொள்ளும் முறையில் தத்துவத்தில்  சிக்கிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளதால், நான் இம்முறையை அனைவருக்கும் பரிந்துரைக்க