இடுகைகள்

ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலங்கியலின் தந்தை யார்?

 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஹைட்ரோபோனிக்ஸ் என்றால் என்ன? மண்ணில் செடிகள் நடப்படுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் செடிகள், மண் இல்லாமல் வளர்க்கப்படுகின்றன. பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம். நைட்ரஜன் ஆகிய வேதிப்பொருட்களை திரவ வடிவில் செடிக்கு வழங்குகிறார்கள். நவீன ஹைட்ரோபோனிக் முறையை உருவாக்கியவர், ஜூலியஸ் வான் சாக்ச்ஸ். இவர் தாவரங்களின் ஊட்டச்சத்து பற்றி ஆய்வுகள் செய்து வந்தவர். விதைகளை எத்தனை ஆண்டுகள் கெடாமல் காக்க முடியும்? காற்று படாத பெட்டியில் விதைகளை பாதுகாப்பாக வைத்திருந்தால் அவற்றைக் காக்கலாம். பெரும்பாலும் காய்கறி விதைகளை ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை பத்திரப்படுத்தலாம். இகிபெனா என்றால் என்ன? பாறைகளில் கற்களில் பூக்களை செதுக்கும் கலை, இதை தொடக்கத்தில் வீரர்கள், புகழ்பெற்ற குடும்பத்தினர் பழகினர். ஆனால், இன்று காலப்போக்கில் ஆண்கள் மட்டுமே செய்து வந்த கலையை பெண்களும் செய்து வருகிறார்கள். பூக்களை அலங்காரம் செய்வது என்பதுதான் இகிபெனாவின் மூலம். ஒத்திசைவு, அழகு, சமநிலை என்பதை அடிப்படை சூத்திரமாக கொண்டது. 1400 ஆண்டுகளாக இக்கலை ஜப்பானில் புகழ்பெற்ற...

வைரத்திற்கு அடுத்தபடியாக உள்ள கடினமான பொருள்!

  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மோகா அளவுகோல் எதற்கு பயன்படுகிறது? கனிமங்களை அவற்றின் கடினத்தன்மை அடிப்படையில் வகைப்படுத்த மோகா அளவுகோல் உதவுகிறது. 1812ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளர் பிரடரிச் மோஹ்ஸ் மோகா அளவுகோலை கண்டுபிடித்தார். மென்மையான கனிமங்கள் தொடங்கி கடினமானவை வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கனிமங்களை நிறங்கள் அடிப்படையில்  தரவரிசைப்படுத்தியது யார்? இதைச்செய்ததும் கூட ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்தான். ஆபிரகாம் காட்லோப் வெர்னர் என்பவர், நிறங்கள் அடிப்படையில் கனிமங்களை தரம் பிரித்து அவற்றை படங்களாக வரைந்து விளக்கியவர் இவரே. வைரத்திற்கு அடுத்து கடினமான பொருள் என எதைக் கூறலாம்? போரோன் நைட்ரைட் என்ற பொருளைக் கூறலாம். இது கடினமான செராமிக். வைரத்திற்கு அடுத்த நிலையில் இப்பொருள் இடம்பிடிக்கிறது. ஸ்ட்ராடெஜிக் மினரல்ஸ் என்றால் என்ன? ஒரு நாட்டின் பாதுகாப்பு தொழில்துறைக்கு அவசியம் தேவைப்படும் கனிமங்களை ஸ்ட்ராடெஜிக் மினரல்ஸ் என்று குறிப்பிடுவார்கள். தோராயமாக எண்பது கனிமங்களை ஒரு நாடு எப்போதுமே குறைவற வாங்கி சேமித்து வைத்திருக்கும். உதாரணமாக குரோமியம், பல்லாடிய...

முடியை சீவும்போது ஏற்படும் வலி, சோப்பு போட்டு கைகழுவினால் கூட நீங்காத பாக்டீரியா

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பள்ளிகளில் இடைவேளை விடுவது ஆக்கப்பூர்வமான விளைவை தருகிறதா? ஆங்கிலத்தில் ரீசஸ் என இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த இடைவேளை என்பது உடற்பயிற்சிக்கானது அல்ல. இந்த நேரத்தில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்து ஊக்கமூட்டும் எதையேனும் செய்யலாம். உடலும் மனமும் ஒத்திசைவாக இருக்க ஓட்டம் கூட உதவக்கூடியதுதான். மனம் அமைதியாக இருக்கும்போதுதான் நிறைய விஷயங்களைக் கற்க முடியும். ஆபத்து நெருக்கடியை உணரும்போது மூளை சிறப்பாக செயல்படுகிறது. அதேசமயம், எதிர்பார்ப்புகள் உள்ளபோது வரும் ஏமாற்றம் கடுமையாக மனதைப் பாதிக்கிறது. இதை பின்னடைவு தோல்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம். பொதுவாக குழந்தைகள் கிடைக்கும் இடைவேளையில் அனைவருடனும் பேசி விளையாட்டில் ஈடுபட்டாலே அவர்களது மனம், உடல் என இரண்டுமே வளம்பெறும். ஆகவே, குழந்தைகள் மூச்சுவிட சற்று இடைவேளை விடலாம் கல்வியாளர்களே! சோப்பு போட்டு கைகழுவினால் கூட பாக்டீரியா கைகளில் இருக்குமா? ஆன்டி செப்டிக் சோப்பு விளம்பரங்களை மறந்துவிடுங்கள். பாக்டீரியாக்கள் எப்போதுமே நம் கைகளில் இருக்கும். அவற்றில் சில மட்டுமே கைகழுவும்போது ந...

ரோனி சிந்தனைகள் - பொற்கால ஆட்சியை விரும்பாமல் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடும் மக்கள்

படம்
  தொடக்கத்தில் கல்லடி பட்ட நாய் போல ஓரிடத்தில் நுழைபவர்கள்தான் பின்னாளில் போடா மயிரே என்று கூறும் அளவுக்கு தந்திரக்காரர்களாக, ஆணவம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். முட்டாள்தனத்தை ஒருமுறை நீங்கள் அடையாளம் கொண்டுவிட்டால் போதும். முட்டாள்கள் அப்படியே இருப்பார்கள், முட்டாள்தனம் மட்டுமே வீரியமாக மாறிக்கொண்டே வரும். ஒரு நாட்டை அழிக்க எதிரிகள், உளவுப்படை, கூலிக்கொலைகாரர்கள் எதுவுமே தேவையில்லை. இவை செய்யும் அனைத்தையும் மதமும், மூடநம்பிக்கைகளுமே செய்துவிடும். ஒருவருக்கு சலுகை கொடுப்பது வேறு. அந்த சலுகையை பயன்படுத்துமாறு அவரின் வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொடுப்பது வேறு. வெட்டப்பட்ட கிராப் தலையை சீவ உயர்தர சீப்பு, விற்றுவிட்ட வாட்சிற்காக அழகிய உயரிய உலோக பட்டை என ஓ ஹென்றியின் கதை மனிதர்கள் போலவேதான் அர்த்தமே இல்லாத அவலங்கள் நம் வாழ்க்கையில் சில சமயங்களில் நடந்து தொலைக்கின்றன. ஆட்டு எலும்பு கடினமோ இல்லையோ, கடித்தே தீருவேன் என்று தின்ற நாய்க்கு கடைவாய் பல் விழுந்துவிட்டது. ஆபீஸ்ல வேலை செய்யறவங்கெல்லாம் எப்படி என்று கேட்டதற்கு, பரவாயில்லைங்க, ஒரு பிகர் தேறும் என்று பதில் சொல்லுவதெல்லாம் விதியல்லாம...

ரோனி சிந்தனைகள் - அழிவு தரும் மட்டற்ற மகிழ்ச்சி

படம்
  ரோனி சிந்தனைகள் ஊருக்கு இளைத்தவன் என்பவன் தனது பலவீனத்தை வெளிப்படையாக தெரிவிப்பவனே. அதை வைத்தே அவன் கூறிய நல்ல விஷயங்களைக் கூட சேறு வீசி இழிவுபடுத்தி இன்பம் பெறுகிறவர்கள் உலகில் நிறையப்பேர் உண்டு. ஒருவனை தோற்கடிப்பது என்பது வெளியுலகில் காண்பதைப் போன்ற கைத்தட்டல்களோ, கோஷங்களோ இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது என்பதல்ல. மனதளவில் அவனை எழ முடியாமல் முற்றாக அழித்து கீழே தள்ளுவதுதான். செயல் என்பது வெளியே தெரிவது. அதற்கான சிந்தனை, எண்ணம், கனவு என்பது மனதில் உருவாகி வளர்வது. அக்கனவுகளை உடைத்துவிடவே பலரும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த கோட்டைகள் தரைமட்டமாக்கப்படுவது தொடர்வது இதன் காரணமாகத்தான். உருவாக்குவது படிப்படியான ஒரு நிகழ்ச்சி. ஆனால், அழிவு அல்லது சிதைவு என்பது உடனே நடப்பது அதற்கு மக்களின் பங்களிப்பும் ஆர்வமும் ஈடுபாடும் கூட அதிகம். ஒருவருக்கு நாயகன் என்பவர் அனைவருக்கும் அதேபோல இருக்கவேண்டுமென்பவதில்லை. அவரவர் கதையில் அவர்கள்தான் நாயகன். வில்லன், துணைப்பாத்திரங்களை நிதானமாக பொருத்திக்கொள்ளலாம். நேர்மை, கைராசி, நம்பிக்கை என்பதெல்லாம் காலம்தோறும் மதிப்பு கூடி வருபவை. ஒரு நல்ல...

ரோனி சிந்தனைகள் - மீண்டும் மீண்டும் திருட்டு

படம்
      ரோனி சிந்தனைகள் விருது கொடுக்க என்னையும் அழைத்திருக்கலாம் என மூத்த வீரர் ஆதங்கப்பட்டிருக்கிறார். விருதின் பெயருக்கு பரவாயில்லை. ஆனால் விருது கொடுக்க எங்கள் நாட்டின் மூத்த வீரரே போதும் என நிர்வாகம் கூறிவிட்டது. கேட்டுப்பெறுவது உரிமையாக இருந்த காலம் இருந்தது. இப்போது அப்படியல்ல. இரத்தலாக மாறிவிட்டது. அரசு விற்கும் மூன்றாந்தர தேயிலைக்கு ஒரே பலம், அதன் பாலிதீன் பாக்கெட்தான். ஆம், அதை வைத்துத்தான் அதை தேயிலைத்தூள் என காலை, மாலை என இருவேளைகளில் மனதில் உருவேற்றிக்கொண்டு கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து அருந்த வேண்டும். அதிலும் தேயிலை என குறிப்பிடாதபோது, நீங்கள் அதை அருந்துவதையே மறந்துவிடுவீர்கள். மறுக்கவும் வாய்ப்புள்ளது. சகோதரரிடம் அவரது நெருங்கிய நணபர் எனது கண்முன்னே உரையாடினார். பிறகு, இயல்பான தொனியில் குரலை மாற்றிக்கொண்டு அப்புறம் அண்ணனோட கடை எப்படி போகுது என்றார். அதை போனிலேயே கேட்டிருக்கலாமே என கேட்டதற்கு சினம் கொண்டுவிட்டார். இயல்பான கேள்விகளுக்கு நீங்கள் காரண ரீதியாக பதில் அளிக்க கூடாது. அது எப்போதும் தர்ம சங்கடத்திலேயே பகையிலேயே முடியும். காயம்பட்ட வீரனுக்கு கர்ப்...

ரோனி சிந்தனைகள் - நன்மையின் இன்னொரு பரிமாணம்!

படம்
      ரோனி சிந்தனைகள் நம் கையை விட்டு அனைத்தும் விலகிப்போய்விட்ட நிலையில் விரக்தியில் சொல்லும் வார்தைகள்தான் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் என்பது. ஒருவர் உங்களுக்கு உதவுகிறார் என்றால் அவர் நல்லவராக இருக்கவேண்டுமென்பதில்லை. முன்னர் உங்களுக்கு செய்த கெடுதலுக்கு பரிகாரமாக நன்மையைச் செய்யக்கூடும். பணத்திற்கு வாய் உண்டு. காதுகள் கிடையாது. அதனால்தான் காசு இருக்கிறவர்கள், தன்னால் யாராவது எளியோர் செத்தால்கூட கவலையேபடாமல் கேக் வெட்டி சாப்பிடவும், மது அருந்திக் கொண்டாடவும் முடிகிறது. கைது செய்ய காக்கிப்படை வந்தாலும் டீ குடித்தபடி மாட்லாடலாம். கையில் காசுள்ளவரையில் இங்கு எதுவும் தவறே கிடையாது. சோளப்பொரிக்கு வரி என அலறவேண்டியதில்லை. குறைந்த வரி கொண்ட சோளப்பொரியை வாங்கிச் சாப்பிடுங்கள் என நிதி அமைச்சர் விரைவில் கூறி மக்களுக்கு வழிகாட்டக்கூடும். சாப்பிட சோறு இல்லையா, கோதுமையில் ரொட்டி சுட்டு சாப்பிடுங்கள் என அரசு கூறக்கூடிய நாள் அருகில் உள்ளது. மேல், நடு, கீழ் என பல்வேறு வர்க்கங்கள் உள்ளனவே என சிலர் வருத்தப்படுகிறார்கள். பின்னே அவர்களை வைத்துத்தானே அரசுகளும் திட்டங்களைத் தீட்டி ...

ரோனி சிந்தனைகள் - மண்ணிலே சொர்க்கம் கிடைக்கும்!

படம்
        ரோனி சிந்தனைகள் குடியுரிமை அமைப்புகள், பழங்குடி மக்களுக்கான அமைப்புகளை தடை செய்துவிட்டு, நிதியுதவியை நிறுத்திவிடுவது சர்வாதிகாரத்திற்கு உதவும். பின்னே, இவர்கள் போராட தொடங்கினால் தீவிரவாத இயக்கங்களுக்கான தடையை நீக்கி செயல்படுவது எப்படியாம்? மக்களுக்கு சொர்க்கத்தை காட்டுவது ஆட்சியாளர்களுக்கு மகத்தான லட்சியக்கனவாக இருக்கக்கூடும். ஆனால், சொர்க்கத்தைப் பார்த்தால் உயிரை விட வேண்டியிருக்குமே என மக்கள் புரிந்துகொண்டால் சரிதான்... குற்றங்களை செய்தீர்களே என யாராவது புகார் சொல்கிறார்களா,  பதற வேண்டாம். அப்படி சொல்பவர்களையும் குற்றத்தில் பங்குகொள்ள வைத்துவிட்டால். குற்றச்சாட்டுகளே எழாது. எப்போதும் போல ஊழலை செவ்வனே கர்மயோகியாக தொடரலாம். உண்மைக்குத்தான் நிரூபணம் தேவை. பொய்க்கு கிடையாது. பொய்யால் ஏற்படும் குழப்பத்தைப் பயன்படுத்தினாலே வெற்றிதான் என்பதை பொய் கூறுபவர்கள் தெளிவாக புரிந்துவைத்திருக்கிறார்கள். நல்லவனை கெட்டவனாக காட்டுவதற்கு இழிவுபடுத்துவதற்கு விசுவாச ஊடகங்கள் ஏராளம் உண்டு. அரசு, அவர்களுக்கு சொல்லாமல் விட்ட இன்னொரு வேலை, நல்லவனாக வேடமிட்டு மோசமானவர்கள் செய்யு...

ரோனி சிந்தனைகள்!

படம்
    தினமணி கதிரில் சுவாமிநாதன் என்ற ஆயுர்வேத பேராசிரியர், குஷ்டம் நோயைப் பற்றி கூறும்போது, தொடக்க பத்தியில் பிறரை சித்திரவதைப்படுத்துவது, முன்னோர்களது சாபம் என்றெல்லாம் கூறி அதன் காரணமாக வந்த நோய் என குறிப்பிடுகிறார். அதாவது சுருக்கமாக கர்மா. இப்படி சொல்லி மருத்துவம் பார்த்தால் அந்த நோயாளி, மருத்துவத்தை ஏற்பானா? திரிதோஷ அடிப்படையில் மருந்துகளை கூறினாலே போதுமே? எதற்கு இந்த இழிவுபடுத்தல்கள் பேராசிரியரே? செருப்பால் அடித்துவிட்டு சோறு போட்டால் நாய் வேண்டுமானாலும் சோறு தின்னும், மனிதர்கள் அப்படி செய்வார்களா? ஒருநாள் உடல்நலம் குன்றிய உறவினரை விசாரித்துவிட்டு தின்பண்டம் கொடுத்துவிட்டு, வந்து இரண்டே நாட்களில் சாமி பூசைக்கு காசு குடுக்கலீனா, சாமி கொன்னுடுமான்னு கேட்டவன்தான் அவன் என ஒருவர் பேசினால் அதை எப்படி எடுத்துக்கொள்வது? இரட்டை முகம் என்றா, இல்லை மனச்சிதைவுள்ள ஆள் என்றா? இன்று ஊழல் எல்லாம் பிரச்னை கிடையாது. கையூட்டு தவறும் கிடையாது. கையூட்டு கொடுத்தும் கூட வேலை செய்யமாட்டேன்கிறார்களே இந்த கேடுகெட்ட அரசாங்கத்தான்கள் என்பதுதான் வேதனையும் புலம்பலுமாக உள்ளது. ஆத்திக நம்பிக்கையிலிருந்த...

மழைபேச்சு - உங்களுடன் ரோனி - புத்தக விமர்சனங்களுக்கான பாட்காஸ்ட்

படம்
  மடிக்கணினி பழுதாகி கிடந்தபோது தொடங்கிய முயற்சி. லினக்ஸ் மின்டில் பழுது என நினைத்தேன். அதில் பழுதேதும் இல்லை. கணினியின் சார்ஜிங் பாய்ண்டில்தான் பிரச்னை. அதை சிப்டிரானிக்ஸ் நிறுவனத்தினர், பழுதுபார்த்து கொடுத்துவிட்டனர். அந்த நேரத்தில் தொடங்கிய வேலை இது. இப்போது மழைப்பேச்சு பாட்காஸ்டில் மொத்தம் பதினாறு குரல் பதிவு கோப்புகள் உள்ளன. அவை அனைத்துமே படித்த நூல்களைப் பற்றியவை. நூல் விமர்சனங்களை படிக்க நேரமில்லை என்பவர்கள் ஸ்பாட்டிஃபை சென்று அதன் வழியாக மழைப்பேச்சு பாட்காஸ்டை கேட்டுக்கொள்ளலாம்.  நூலைப் பற்றி எழுதுவது எளிது. ஆனால் பேசுவது என்பது கடினமான ஒன்று. நேர்த்தி கைகூடி வர முயல்கிறேன். வாய்ப்பிருப்பின் கேளுங்கள். https://podcasters.spotify.com/pod/show/arasukarthick நன்றி செபியா நந்தகுமார் கார்ட்டூன் கதிர் கன்வா.காம் சிப்டிரானிக்ஸ் குழு

பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? - மிஸ்டர் ரோனி

படம்
            பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? இதற்கான பதிலை பலரும் அறிந்திருப்பார்கள். பதில் சொல்வதும் எளிதுதான். ஆனால் அதன் பின்னணிதான் இங்கு முக்கியம். சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளுக்கு 67 நிலவுகள் உள்ளன. இதில் பெரிய நிலவின் பெயர், கனிமெட். 2600 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதுவே பிற கோள்களுக்கும் நிலவு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ள தகவல். இதுபற்றிய டிவி வினாடி வினா நிகழ்ச்சியில் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஜீரோ தொடங்கி பதினெட்டாயிரம் நிலவுகள் வரை பதில் தரலாம் என கூறப்பட்டது. ஆனால் பொருத்தமான உண்மைக்கு அருகில் உள்ள பதில் ஒன்று. பூமிக்கு ஒரு நிலவு உள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஏராளமான பாறைக்கோள்கள் வட்டப்பாதைக்கு வருகின்றன. பல்லாண்டுகளாக சுற்றி வருகின்றன. அவற்றை நாம் நிலவு என்று கூறுவதில்லை. இதற்கு காரணம் இரண்டே விஷயங்கள்தான். துல்லியமாக சொன்னால் அறிவியலாளர்கள் வகுத்த இரண்டு விதிகள். அவை ஆயிரம் ஆண்டுகளாக வட்டப்பாதையில் சுற்றிவர வேண்டும். அதன் அளவு ஐந்து கி.மீ. என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்கவேண்...

பதில் சொல்லுங்க ப்ளீஸ் - மிஸ்டர் ரோனி - மின்னூல் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ்... அட்டைப்படம் தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவந்த வார இதழ், முத்தாரம். அந்த  இதழில் வெளியான ஏன்? எதற்கு? எப்படி? தொடரின் செழுமைபடுத்தப்பட்ட வடிவம்தான் இந்த நூல்.  பதில் சொல்லுங்க ப்ளீஸ் நூலில் என்ன எதிர்பார்க்கலாம்? தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சந்தேகங்கள், படிக்கும் நாளிதழில் உள்ள அறிவியல் தொடர்பான கேள்விகள் ஆகியவைதான் நூலில் இடம்பெற்றுள்ளன.  நூலின் தலைப்பை எழுத்தாளர் சுஜாதா தனது நூல்களுக்கு ஏற்கெனவே வைத்துவிட்டார் என பின்னர்தான் தெரிந்த்து. ஆனால் அதற்குள்  தலைப்பு வைத்து தொடரை தொடங்கியாயிற்று. ஆனாலும் தலைப்பு தொடருக்கு சரியாக இருந்த காரணத்தால் அதை மாற்றவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவரின் தலைப்புக்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.  நூலின் அட்டைப்படம், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது. ஃபோடார் வலைத்தளத்தில் படத்திற்கான குறிப்புகளைக் கொடுத்து உருவாக்கியது. அறிவியல் தொடருக்கு, அட்டைப்படமும் சாதாரணமாக இருந்தால் எப்படி? அறிவியல் என்பது காலம்தோறும் மாறிக்கொண்டே இருப்பது, நிறைய தகவல்கள் மாறிக்கொண்டே இருக...

உப்புக்கு மாற்று உப்பு இருக்கிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ்டர் ரோனி சாண்ட்விச்சை எப்படி எடுத்துசெல்வது? கையில்தான் என்று சொல்லுவது அரசு பதில்கள் போல சிம்பிளாக ஆகிவிடும். இருந்தாலும் சூழல் முக்கியம் அல்லவா? அலுமினியம் பாயில்தான் எளிதாக கிடைக்கும். ஆனால் இதனை திரும்ப திரும்ப பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். இல்லையெனில் பாதிப்பு அதிகம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெறும் காகிதம் என்பதை உடனே சாப்பிடுவதற்காக கொடுப்பார்கள். அதனை பார்சல் பெற்று கொண்டு செல்ல அந்த காகிதம் தாங்காது. காகிதத்தில் சுற்றி  உங்கள் கேர்ள் பெஸ்டியின் பையில் வைத்துவிடுங்கள்.  உப்புக்கு மாற்றாக வேறு உப்புகள் ஏதேனும் உண்டா? ஏன் இல்லாமல்? பொட்டாசியம் குளோரைடை நீங்கள் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஒரே பாதிப்பு, நீங்கள் நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டிருந்தால்  இதைப்பற்றி அவருக்கு கூறவேண்டும். சிறுநீரக பிரச்னை இருந்து பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்தினால் ஆபத்து அதிகம். உப்பாக நாம் பயன்படுத்தும் சோடியம் குளோரைடிற்கும் பொட்டாசியம் குளோரைடிற்கும் ருசியில் பெரிய வேறுபாடு கிடையாது.  சயின்ஸ்போகஸ் 

வயிற்றில் சுடப்பட்டால் வாயில் எப்படி ரத்தம் வரும்? - லாஜிக் மேஜிக் - பதில் சொல்லுங்க ப்ரோ? @ ரோனி

படம்
    பதில் சொல்லுங்க ப்ரோ ? @ ரோனி ஹாலிவுட் படத்தில் நாயகனை எங்கு சுட்டாலும் வாயில் வாந்தி எடுக்கிறாரே எப்படி நடக்கிறது அந்த மேஜிக் ? ஒருவரை வயிற்றில் சுட்டால் நிச்சயம் வாயில் ரத்த வாந்தி எடுக்கமாட்டார் . வயிற்றின் உள்ளே ரத்தக்கசிவு இருக்கும் . அப்படியும் வாயில் குடம் குடமாக ரத்தம் கொட்டுகிறது என்றால் அவரது நுரையீரல் காயம்பட்டிருக்கிறது என்று பொருள் . அங்கு ரத்தம் கசிவதால் மூச்சு , வாய் என அனைத்திலும் பொங்கல் பானையில் நுரை பொங்கி வருவது போல ரத்தம் பொங்குகிறது . அதிலும் மனவலிமை குறையாத நாயகன் , நாலைந்து பக்கங்களுக்கு வசனம் வேறு பேசிவிட்டு சாவார் . வயிற்றில் துப்பாக்கி குண்டு பட்டு வாயில் ரத்தம் வந்தால் அதனை ஹீமாடெமெசிஸ் என்கிறார்கள் . அதுவே நுரையீரல் காயம்பட்டு இருமலோடு ரத்தம் வந்தால் அதற்கு ஹீமோடைசிஸ் என்று பெயர் . நாயகன் மீது இரக்கம் வருவதற்காக , அல்லது வில்லன் மீது உனக்கு இது சரியான தண்டனைடா என நாம் சொல்லும்படி ரத்தத்தை பம்பு செட்டு தண்ணீர் போல மோட்டார் வைத்து இறைக்கிறார்கள் . அதைப்பார்த்து ரசிகர்களுக்கும் புயல்கால...

கற்பனையால்தான் மனிதகுலம் வளர்ச்சி பெற்றதா?

படம்
மிஸ்டர் ரோனி  நீரின் கொதிநிலை மாறுமா? நீரின் கொதிநிலை என்பது அங்குள்ள அழுத்தத்தைப் பொறுத்தது. கடல்மட்டத்தில் நீங்கள் இருந்தால் அங்கு அழுத்தம் தோராயமாக 1013 ஹெக்டாபாஸ்கலாக இருக்கும். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். அதுவே நீங்கள் இமயமலையில் உட்கார்ந்து இருந்தால் அங்கு நீரின் கொதிநிலை 71 டிகிரி செல்சியஸாக இருக்கும். வேகமாக நீரைக் கொதிக்க வைத்துவிடலாம்.  நீரை கொதிக்கவைக்கும்போது, நீர் மூலக்கூறுகள் அலைவுற்று நீராவியாகின்றன. அந்த நீராவி மூலக்கூறுகளின் அழுத்தம், அச்சூழலின் அழுத்தத்திற்கு  சமமாகுவதே நீரின் கொதிநிலை எனலாம். வெயிலில் காய வைக்கப்படும் துணி வெளுத்துப்போவது ஏன்? ஒரு பொருளின் துணியிலுள்ள நிறத்தை தேக்கி வைக்கும் மூலக்கூறு அமைப்புக்கு குரோமோபோர் என்று பெயர். இதன்மீது ஒளியிலிருந்து வரும் போட்டான்கள் பட்டு உட்கவரப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு பொருளின் வண்ணம் தீர்மானிக்கப்படுகிறது. சிவப்பு வண்ண உடைகளை வேகமாக வெளுத்துப்போகின்றன. காரணம், அவை அதிகளவு ஒளியிலுள்ள போட்டான்களை ஈர்க்கின்றன. இதனால் அதன் குரோமோபோர் அமைப்பு சிதைகிறது. இதனால் அதன் ந...

ஸ்நாப்சாட் படங்கள் முழுவதாக அழிவதில்லையா? மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி தகவல்களை வயர்களின்றி பகிரும் தொழில்நுட்பத்திற்கு ப்ளூடூம் என்று பெயர் வந்தது எப்படி? டென்மார்க் மன்னர் ஹெரால்டு பிலாடண்ட், முன்னர் டென்மார்க்கையும் நார்வேயையும் வன்முறையின்றி இணைத்தார். இதன் காரணமாக இதனைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அவரின் பெயரைக் குறிப்பிடும் விதமாக ப்ளூடூத் என்று பெயரிட்டனர். நோர்ஸ் எழுத்துவடிவில் பிலாடண்ட் என்பதை சுருக்கி பி என எழுதியிருப்பார்கள். ஸ்நாப்சாட் புகைப்படங்களை நீங்கள் பார்த்தபிறகு என்னாகிறது தெரியுமா? ஸ்நாப்சாட் நிறுவனம் அவற்றை அழித்து விடுவதாக கூறுகிறது. அதன் சர்வர்களிலிருந்து நீக்கிவிடுவதாக கூறியிருந்தது. ஆனால் அது சாத்தியமில்லை. உங்கள் போனில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை திரும்ப மீட்க முடியும். மின் கோப்புகளை அழிக்கும்போது அவை அழிந்துபோனது போல தோன்றினாலும், அவற்றை திரும்ப பெறமுடியும். அதாவது அவை நம் பார்வைக்குத் தெரியாது. திரும்ப அவற்றை பயன்படுத்தும் வரை போனிலுள்ள நினைவகத்தில் இருக்கும். ரீசார்ஜபிள் பேட்டரி எப்படி வேலை செய்கிறது? அனைத்து பேட்டரிகளுக்கும் அடிப்படை மூன்றுதான். அனோடு, கேத்தோடு, அமிலம். இவற்றுக்கு இட...

உடல் களைத்து தளர்ந்து தூங்குகிறீர்களா?

படம்
மிஸ்டர் ரோனி மிகவும் உடல் தளர்ந்து சோர்ந்து தூங்குவது சாத்தியமா? கணக்கு பாடத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தாலே தலை கிறுகிறுவென்று ஆகி படுத்து தூங்கியவனைப் பார்த்து இந்தக்கேள்வி. பொதுவாக நமக்கு ஐம்புலன்கள் பகலில் வேலை செய்யும். அதில் சிலருக்கு பாரபட்சமாக சில உறுப்புகள் வேலை செய்யப்பட திறன்கள் மாறும். ஆனால் இயல்பாக கண்கள் சோர்ந்து போனால், மூளை படுத்துவிடும். உடனே ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றுவது போல எதையும் செய்ய முடியாது. உடனே தூங்கிப்போனால் உடல் புத்துணர்ச்சியோடு எழும். அப்போது உணவு, தண்ணீர் கூட உடலுக்கு தேவைப்படாது. பேய்த்தூக்கம் போல சிலர் தூங்குவார்கள். மிகவும் உடல் தளர்ந்து தூங்குவது என்பது அரிசி மூட்டை தூக்குவது, பழக்கமின்றி திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுவது போன்றவை செய்தால் நிச்சயம் கடுமையாக சோர்ந்து போய் தூக்கம் வரும். நன்றி - பிபிசி

மனிதர்களின் கண்களில் மாற்றம் ஏற்பட்டது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி பாலூட்டிகளின் கண்களில் வெள்ளை நிறம் அதிகம் இருப்பதில்லை. ஆனால் நமது கண்களில் வெள்ளை நிறம் அதிகமாக  இருக்கிறது. என்ன காரணம்? பொதுவாக கூடி வேட்டையாடும் விலங்குகள் தமக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்ள இந்த வெள்ளை நிற சங்கதியை பயன்படுத்திக்கொள்கின்றன. பிற பாலூட்டிகளுக்கு இந்த நிறம் குறைவாக இருப்பதன் காரணம், பரிணாம வளர்ச்சிதான். புலி, சிங்கம்  போன்றவை தனியாக வேட்டையாடும். ஆனால் ஓநாய்கள் கூட்டாக வேட்டையாடும். இந்நேரங்களில் சின்ன சின்ன ஒலிகள், ஊளைகள் என சிக்னல்கள் கொடுத்து வேட்டையாடப் பாயும். இதில் மூத்த ஓநாய்களின் அறிவுரைப்படி இளைய ஓநாய்கள் ஆட்டு மந்தைகளை கொல்லும். பரிணாம வளர்ச்சி பங்காளிகளான மனிதக்குரங்களுக்கு கூட கண்களில் வெள்ளைநிறத் தன்மை குறைவுதான். இதனை உறுதியாக இப்படித்தான் என உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இன்று நம்மிடையே மிக குறைவாக உள்ளன. நன்றி - பிபிசி

அலுமினிய பாயில் இனிப்பு மூலம் வயிற்றுக்குள் போனால்?

படம்
மிஸ்டர் ரோனி நான் சாக்லெட்டை ஆர்வமாக சாப்பிடும்போது, அதிலுள்ள அலுமினிய பாயிலையையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டேன். இது நச்சாக மாறி ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? வெறித்தனத்தை குறைத்து நிதானம் வளர்ப்பது நல்லது. விளம்பரங்களைப் பார்த்து அதே வேகத்தில் சாப்பிட்டால் எப்படி? அலுமினிய பாயில் உள்ள நச்சு வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தோடு வினைபுரியும். இதில் இரு சதவீத அலுமினிய குளோரைடு நச்சு, வயிற்றில் பாதிப்பு ஏற்படுத்தும். அதை தவிர்க்க முடியாது. ஆனால் இதனால் உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் கிடையாது. பயப்படாதீர்கள். உடலில் செரிக்காத சாக்லெட்டின் பகுதிகள் மலம் வழியாக வெளியேறிவிடும். நன்றி: பிபிசி 

நீளமான பெண்களின் முடி கிக் ஏற்றுகிறதா?

படம்
pixabay மிஸ்டர் ரோனி நீளமான முடி இருந்தால் பெண்களை பெண்தன்மை உள்ளவராக நினைக்கிறார்களே அது ஏன்? பொதுவாக பெரியாரியம் பேசும் பெண்கள் கூட தங்களின் நீளமான கவர்ச்சியான கூந்தலை வெட்டிக்கொள்வதில்லை. மிகச்சில பெண்கள்தான் பாப் கட்டிங் போல வெட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள். இயல்பாக பெண்களுக்கு முடி என்பது ஆண்களை கவனிக்க வைக்கும் ஒரு முக்கியமான அம்சம் என்பது தெரியும். எனவேதான் முடியை அவர்கள் சொத்து போல பராமரிக்கிறார்கள். 18ஆம் நூற்றாண்டு பிரான்சில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் ஜான் விக் போல முடியை வளர்த்துக்கொண்டு கோட் சூட் சர்க்காராக வலம் வந்தனர். ஆண்களின் உளவியல்படி நீளமான புட்டம் தொடும் முடி இருப்பது பெண்களின் கருவுறும் ஆற்றல் சரியாக இருப்பதற்கு அடையாளம் என கருதுகிறார்கள். எனவே, நீளமான முடி என்றால் ஆண்களுக்கு கிக் ஏறுகிறது. ஆண்களுக்கு இதுபோல என்ன என்று கேட்டு சிக்கல் செய்யக்கூடாது. பெண்களுக்கு இந்த மாதிரி என்பது ஆண்கள் பங்கேற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. நன்றி - பிபிசி