இடுகைகள்

எலக்ட்ரான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குளிர வைக்கும் லேசர் !

படம்
  குளிர வைக்கும் லேசர் ! வாயுக்களிலுள்ள எலக்ட்ரான்களை குளிர்விக்க லேசர் ஒளிக்கற்றையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர். வெற்றிடமாக்கப்பட்ட கண்ணாடிக்குள் திரவம் அல்லது திட நிலையில் வாயுவை நிரப்ப வேண்டும். இந்நிலையில் அதிலுள்ள அணுக்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இதனை மாற்ற, லேசர் கற்றைகளை வாயுவை நோக்கிச் செலுத்த வேண்டும்.  இப்போது, வாயுவிலுள்ள எலக்ட்ரான் லேசரிலுள்ள ஒளித்துகளான போட்டானைப் பெறும். பதிலுக்கு வாயுவும் போட்டானை உமிழும். பல்வேறு திசைகளிலிருந்து லேசர் கற்றைகளை வாயு மீது செலுத்த வேண்டும். இச்செயல்முறை தொடரும்போது வாயுவின் எலக்ட்ரான் செயல்வேகம் குறையும். அணுக்களின் வேகத்தைக் குறைக்க இயற்பியலாளர்கள் லேசர் கூலிங் (Laser Cooling) எனும் இம்முறையைப் பயன்படுத்துகின்றனர். இம்முறை 1970ஆம் ஆண்டு முதலாக செயல்பாட்டில் உள்ளது.  தற்போது இம்முறையை விட ஆவியாக்கும் முறையில் (Evaborate Cooling) அணுக்களை குளிர்விக்கிறார்கள்.  1926 ஆம் ஆண்டு வேதியியலாளர்கள், காந்த அலைகளைப் பயன்படுத்தி அணுக்களை குளிர்விக்கும் முறையைக் (adibatic DeMagnetization) கண்டுபிடித்தனர்.இம்முறையில் பொருட்களின் வெப்பநிலை ஒரு

வைரம் ஏ டூ இசட் தகவல்களை அறியலாம் வாங்க!

படம்
  வைரம் ஏ டூ இசட்! கோகினூர் வைரம் இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளம். தங்கம் மட்டுமல்ல வைரத்திற்கும் இந்தியா புகழ்பெற்றது என உலகம் அறிந்தது பின்னர்தான். வைரத்தைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான டைமண்ட் என்பது கிரேக்க வார்த்தையான அடமாவோவிலிருந்து(Adamao) உருவானது. இதன் பொருள், வலிமையானது.  இது ஒன்றும் புதிய விஷயமல்ல. வைரம் என்பது கடினமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது மிகப்பழமையானது. வைரங்கள் பிரித்தெடுக்கப்படும் பாறைகளின் வயது 1600 மில்லியனாகவும், வைரங்களின் வயது 3.3 பில்லியன் ஆண்டுகள் ஆகவும் உள்ளது. கடுமையான வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக வைரங்கள் உருவாகின்றன. இப்படிக் கிடைத்த வைரங்களில் சில நம் சூரியமண்டலத்தைவிட காலத்தால் முந்தையவை என்பது ஆச்சரியம்தானே! கார்பன் அழகு! வைரத்தின் உறுதியான கட்டுமானத்திற்கு கார்பன் காரணம் என்பதை அறிந்திருப்பீர்கள். நியூட்ரலான கார்பன் அணுவில், ஆறு புரோட்டான்கள், ஆறு நியூட்ரான்கள் இதன் அணுக்கருவில் உள்ளன. இதற்கு பதிலீடான எண்ணிக்கையில் எலக்ட்ரான்களும் உள்ளன.  இதிலுள்ள எலக்ட்ரான் கட்டமைப்பு 1s22s22p2 என்று குறிப்பிடுகின்றனர். கார்பன் அணுக்கள் க்யூப

பால்வெளியில் ரேடியோ அலைவெடிப்பு!

படம்
  பால்வெளியில் ரேடியோ அலைவெடிப்பு கோள்களிலிருந்து ரேடியோ சிக்னல்கள் கிடைத்தது என அறிவியல் செய்திகள் படிக்கும்போது பலருக்கும் சந்தேகம் வரும். அதென்ன ரேடியோ சிக்னல்கள் என்று. விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சுகளோடு கிடைக்கும் ரேடியோ அலைகளைத்தான் அப்படி வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  பால்வெளியிலிருந்து பல்வேறு அடையாளம் காணப்படாத செயல்பாடுகளின் விளைவாக , வரும் ரேடியோ அலைகளை 2013 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வானியலாளர்கள் குழப்பத்துடன் பார்த்து வந்தனர். இன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ரேடியோ ஆன்டனாவில் தினசரி பத்திற்கும் மேற்பட்ட ரேடியோ அலை வெடிப்புகள் பதிவாகி வருகின்றன.  ரேடியோ அலைகள் பால்வெளியில் எப்படி உருவாகின்றன?  பிரகாசமான பொருளிலிருந்து வரும் ஒளி, எலக்ட்ரான்களையும் வேறு பல துகள்களையும் கொண்டுள்ளது. இது பழைய துகள்களை உடைத்து மின்காந்த அலை ஊடகத்தை உருவாக்குகிறது. இதிலுள்ள எலக்ட்ரான்கள் ரேடியோ அலைகளை உருவாக்குகின்றன என்பதே ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கை. இது பற்றிய ஆய்வு அறிக்கை arxiv.org வலைத்தளத்தில் பதிவாகியுள்ளது.  2015 ஆம் ஆண்டு கனடாவின் மெக்கில் பல்கலையைச் சேர்ந்த வானியல

மழை பெய்யும்போது இணையமும், செல்போனும் செயல்படாது! - இதற்கான அறிவியல் காரணம் என்ன?

படம்
    மழைக்காலத்தில் ஏற்படும் இயற்கையான தடங்கல்கள் ! மழைக்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் , இணையப் பயன்பாடு என இரண்டுமே பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றன 1860 ஆம் ஆண்டு , ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜேம்ஸ் மேக்ஸ்வெல் , புதியவகை மின்காந்த அலையை கண்டுபிடித்தார் . அதற்குப்பிறகு இயற்பியலாளர் ஹென்ட்ரிச் ஹெர்ட்ஸ் , மேக்ஸ்வெல்லின் கோட்பாட்டை சோதித்துப் பார்த்து , அதனை உறுதியும் செய்தார் . 1895 ஆம் ஆண்டு கோல்கட்டாவில் சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் , மின்காந்த அலை மூலம் 23 மீட்டர் தூரத்தில் வயர்களின்றி செய்தியை அனுப்பமுடியும் என்பதை செய்து காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார் . இன்று நாம் செய்தியை இணையத்தின் வழியாக எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும் . இதற்கு காரணமாக இருப்பது எலக்ட்ரான்கள் . அவற்றில் உருவாகும் மின்காந்தவிசை .   இரு எலக்ட்ரான்களுக்கு இடையில் மின்காந்த விசை உருவாகும்போது நாம் செய்தி அனுப்ப முடிகிறது . எளிய உதாரணமாக நாம் ஒளியை குறிப்பிட்ட கோணத்தில் அலைநீளத்தில் கண்களால் பார்ப்பதால் , அதனை எளிதாக உணர்ந்துவிடுகிறோ்ம் . தொலைத்தொடர்பு வசதி முன்னேறாத