இடுகைகள்

புல்டு ஆப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் மோடியை நம்புகிறேன்! - சுப்ரான்சு சௌத்ரி

படம்
சுப்ரான்சு சௌத்ரி முன்னாள் பிபிசி ஊடக செய்தியாளர். மத்திய இந்தியாவில் மாவோயிச தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு பாடுபட்டு, கூகுள் டிஜிட்டல் ஆக்டிவிசம் என்ற விருதைப் பெற்றுள்ளார். அண்மையில் வாட்ஸ்அப் கண்காணிப்புக்கு உட்பட்ட நபர்களில் இவரும் உள்ளதாக செய்திகள் அடிபட்டன. இந்திய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை அழித்துவிடுவார் என நம்புகிறீர்களா? ஆமாம். ஏன் மோடியால் முடியாது? சத்தீஸ்கர் மாநில முதல்வர் கூட எங்கள் ஆப்பின் செயல்பாட்டை கவனிக்கவில்லை. ஆனால் இவர் கவனித்தார். ஊடகங்களில் புல்டூ பற்றிக் கேள்விப்பட்டு பிற மாநிலங்களின் கிராம ப் புறங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தவிருப்பதாக தெரிவித்தார். விவசாயிகளின் செயல்முறைகளுக்கு இதனை பயன்படுத்தவிருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி எனக்கு பெரும் ஊக்கம் தந்தவர் என்பதை நான் மறுக்கப்போவதில்லை. மாவோயிச தீவிரவாதிகள் நிறைந்த பகுதிகளில் எப்படி செயல்படுகிறீர்கள்? நான் சத்தீஸ்கரில் பிறந்து  வளர்ந்தவன். அங்குள்ள நிலம், காடு மீதான உரிமைகளை சுயமாக பெற்றிருப்பவர்கள் பழங்குடி மக்கள். அவர்கள் அதனை இழந்துவிட்டதாக மாயை ஏற்படுத்தி  வன்முறை வழி