இடுகைகள்

மைக்ரோசாப்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மென்பொருள்களை விற்பனை செய்வதற்கான சந்தையை உருவாக்கிய முன்னோடி! - பில்கேட்ஸ் - சாப்ட்வேர் சுல்தான்

படம்
        பில்கேட்ஸ் சாப்ட்வேர் சுல்தான் என் சொக்கன் பில்கேட்ஸ் கிராப் இன்றுவரை உயரத்தில்தான் இருக்கிறது . இந்த நூலில் அவர் எப்படி உழைத்து ்வளர்ந்தார் , சாப்ட்வேர் துறையில் என்ன செய்தார் , அதற்கு என்ன வழிமுறைகளை கடைபிடித்தார் , அவர் மீதான புகார்கள் , ஒப்பந்தங்கள் , நட்பு , விண்டோஸின் வெற்றி , சர்ச்சைகள் , மென்பொருட்கள் விற்பனை , புகார்கள் , அதற்கான எதிர்வினைகள் , சந்தையில் அவர் ஏற்படுத்திய விளைவுகள் என பல்வேறு விஷயங்களையும் பாரபட்சமின்றி பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் . அனைவருக்கும் தனி கம்ப்யூட்டர் என்ற லட்சியத்தை முன்வைத்து பில்கேட்ஸ் விண்டோஸ் நிறுவனத்தை வளர்த்தெடுத்தார் . அந்த வழியில் அவர் சந்தித்த சவால்கள்ளளை தாண்டி வர தெளிவான வணிகத்திட்டம் அவருக்கு உதவியது . ஆரம்பத்தில் அவர் மென்பொருட்களை எழுதினாலும் பின்னாளில் அவர் முழுக்க மார்க்கெட்டிங் செய்து விண்டோஸ் பொருட்கைள விற்பனை செய்பவராகவே இருந்தார் . அவரது இளமைக்காலம் பற்றி படிப்பது சிறப்பாக உள்ளது . இனிமேல் பில்கேட்ஸ் என்று ஒருவர் வரமுடியாது . அவரின் காலம் முடிந்துவிட்டது . கணினி தொழில்நுட்ப உல

வலைத்தளங்கள் புதுசு!

படம்
          வலைத்தளங்கள் புதுசு ! Filmedinyorkshire.co,uk நிறைய படங்களில் வரும் இடங்களைப் பார்க்க ஆசைப்பட்டிருப்போம் . ஆனால் அவை எங்கே இருக்கிறது என தெரியாமல் அலைவோம் . அந்த பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே இந்த வலைத்தள முயற்சி . பிலிம்டுஇன்யார்க்ஷையர்வலைத்தளத்தில் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டு , அந்த படத்தில் வரும் இடங்கள் எங்கே என சுட்டிக்காட்டப்படுகிறது . இதுவொரு ரசிக்கத்தக்கமுயற்சியாக உள்ளது . faberchildrens.co.uk இந்த வலைத்தளம் ஃபேபர் குழுமத்தின் முயற்சி . பெற்றோர் , குழந்தைகள் , ஆசிரியர்களுக்கான நூல்கள் இதில் கிடைக்கின்றன . குழந்தைகள் செய்யவேண்டிய பயிற்சிகளை இந்த வலைத்தளத்திலிருந்து பெறமுடியும் . கதை வீடியோக்களாக பெற்று குழந்தைகளுக்கு உதவலாம் . எழுத்தாளர்களை சமூகவலைத்தளம் வழியாக பின்பற்றலாம் . அவர்களின் நூல்களை இங்கேயே வாங்கிப்படிக்கலாம் . குழந்தைகளுக்கான ஐடியாக்கள் இருந்தாலும் தாராளமாக சொல்லலாம் . அதற்கும் பரிசு வழங்கி கௌரவிக்கிறார்கள் . Wordsoflife.org..uk 12 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கான பல்வேறு எழுத்துக்கள் , வார்த்தைகள் சார்ந்த பயிற்சிகளை

2021ஆம் ஆண்டோடு முடிவுக்கும் வருகிறது மைக்ரோசாப்டின் இன்டர்நெட்எக்ஸ்ப்ளோரர் 11!

படம்
                           இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்     இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கடந்த வாரம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர ருக்கான ஆதரவை நிறுத்திக்கொள்ளப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இன்டர்எக்ஸ்ப்ளோரர் 11 உடன் நிறுவனத்தின் ஆதரவும், உதவிகளும் நிறுத்தப்படவிருக்கின்றன. இந்த ப்ரௌசர் சாதித்த விஷயங்களைப் பார்ப்போம். 1994ஆம் ஆண்டு நெட்ஸ்கேப் நேவிகேட்டர் மொசைக் ஆகிய ப்ரௌசர்கள் சந்தையில் இருந்தன. இவை இலவசம் கிடையாது. காசு கொடுத்து பிளாப்பி வடிவில்தான் வாங்க வேண்டும். 1995ஆம் ஆண்டு விண்டோஸ் ஓஎஸ்சுடன் இன்டர்எக்ஸ்ப்ளோரர் இலவசமாக வெளிவந்தது. இதன்காரணமாக சந்தையில் நெட்ஸ்கேப் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர ரைவிட அதிக ஆப்சன்களை நெட்ஸ்கேப் கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 3, 95 விண்டோஸ் ஓஎஸ்சுடன் இலவசமாக வந்தது. மக்கள் அதுவரை ப்ரௌசரை காசு கொடுத்து வாங்கினார்கள். விண்டோஸ் இலவசமாக ப்ரௌசரைத் தந்தவுடன் யாரும் நெட்ஸ்கேப்பை நாடவில்லை. இதன் காரணமாக நெட்ஸ்கேப் சந்தையில் தன் வலிமையை இழந்து வந்தது. 1998ஆம் ஆண்டு தனது ப்ரௌசரை திறமூல மென்பொருளாக்கி விட்டு சந்தையிலிருந்து வெளியே

தொழில் நாயகன் நாதெள்ளா- மைக்ரோசாப்ட் இயக்குநர்!

படம்
சத்யா நாதெள்ளா - நம்பர் 1 நீங்கள்தான் நம்பர் 1 தலைவராக ஃபோர்ப்ஸ் இதழில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், அவரே வெட்கப்படுவார். 1992ஆம் ஆண்டு மைக்ரோசாப்டில் சேர்ந்தவர், இன்று 129 பில்லியன் டாலர்கள் வருமானம் சம்பாதிக்கும் நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இவர் பில்கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் போல ஊடகங்களில் அறிமுகம் கொண்டவர் அல்ல. ஆனால் சிறப்பான குழுக்களை அவர்களின் அரசியல் கடந்து உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். சிறந்த இயக்குநரின் தகுதி என்பது, குழுவாக மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் சக்தியை அவர்களுக்கே காட்டுவதுதான் என்கிறார். 2014ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட்ஸ் நிறுவன இயக்குநராக அறிவிக்கப்பட்ட சத்யா நாதெள்ளாவின் முன் நிறைய தடைகள் இருந்தன. நிறுவனம் எதிர்காலத்தில் எந்த தொழில்நுட்பத்தை பிடித்துக்கொள்ளவேண்டும் என்று தெரியாமல் இருந்தது. அதனை ஒழுங்கு செய்து பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து நிறுவனத்தின் எதிர்காலத்தை வெளிச்சமாக்கினார். மேக கணிய முறையை லினக்ஸ் கட்டமைப்பை இணைத்து வலிமையாக்கினார். நிறுவனத்தின் பலத்தோடு பலவீனங்களையும் அறிந்திருந்தார். அதுவே அவரை பலமாக்கிய