இடுகைகள்

பா.ராகவன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பனிரெண்டு ஆண்டுகளில் நாட்டையே அதிரடி சட்டங்களால் மாற்றியமைத்த ஆட்சியாளர் ! ஹிட்லர் - பா.ராகவன்

படம்
                ஹிட்லர் பா . ராகவன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பனிரெண்டுகள் ஆண்ட ஆட்சியை , வளர்ச்சியை , அழிவை , மனநிலையை , பழக்க வழக்கங்களை வாசிக்க எளிமையான முறையில் சுவாரசியமாக சொல்லுகிற நூல்தான் இது . மருதன் எழுதிய ஹிட்லர் என்ற நூலும் , பா . ராகவனின் நூலும் வேறுபடுகிற இடம் ஆய்வுத்தன்மைதான் . மருதனின் நூல் ஹிட்லரின் பல்வேறு பரிணாமங்கள் , அவரின் சிந்திக்கும் திறன் , பேச்சு ஆகியவற்றை ஆய்வு நோக்கில் எது சரியாக இருக்க முடியும் என்ற கோணத்தில் பார்க்கிறது . பா . ராகவனின் இந்த நூல் அந்தளவு தொலைவாக செல்லவில்லை . ஜெர்மனியில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளை சந்தர்ப்பவாதி ஒருவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும் என்பதை ஹிட்லர் நூல் மூலம் காட்டியுள்ளார் . பலரும் இன அழிப்பு , யூதர்களின் துன்பம் என்பதை மட்டும் முக்கியப்படுத்தும்போது பொருளாதார வளர்ச்சி சார்ந்து நாடு என்ன நிலையில் இருந்தது என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார் . இது ஆச்சரியகரமான ஒன்று என கூறலாம் . ஹிட்லரின் செயல்திறனுக்கும் கனவுக்க்கும் உழைக்கும் திறனுக்கும் அவர் வேறு வழியில் சென்றிருந்

ஆயுதங்களால் ஜப்பான் அரசை வீழ்த்த திட்டம்போட்ட தந்திரமான சாமியார்! - ஓம் ஷின்ரிக்கியோ! பா.ராகவன்

படம்
          ஷோகோ அசஹாரா -  ஓம் ஷின்ரிக்கியோ            ஓம் ஷின்ரிக்கியோ பா.ராகவன் ஜப்பானில் தொடங்கப்பட்ட பௌத்த - இந்து மத கலவைதான் ஓம் ஷின்ரிக்கியோ. ஷோகோ அசஹாரா என்பவர் இதன் தலைவர். இவருக்கு ஆன்மிகம் எல்லாம் நோக்கம் இல்லை. போர்தான் லட்சியம். அதை சொன்னால் காசு யார் கொடுப்பார்கள். எனவே ஆன்மிகத்தை கையில் எடுத்து வில்லாக வளைந்து யோகா சொல்லிக்கொடுப்பது போல டுபாக்கூர் வேலைகளை செய்து காசு சம்பாதித்தார். அதை வைத்து அவர் செய்த கொடூர செயல்கள்தான் நூலின் முக்கியமான பகுதி. மதம், சாமியார் என்றால் ஆசிய நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கர்கள் கூட காசு பணத்தை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். காலில் விழுந்து யோசிப்பதை நிறுத்தி விடுகிறார்கள். ஜப்பானில் அப்படி அதிரடித்த சாமியார் ஒருவரின் கதை. பா.ராகவனின் அசரடிக்கும் எழுத்து நடைதான் சாயியார் ஷோகோவை முக்கியமான மத தலைவராக நிலைநிறுத்துகிறது. மற்றவர்கள் கிண்டல் செய்யும் முன்னர் எழுத்தாளரே அவரை தக்காளிப்பழம் என்று அவரை கிண்டல் செய்கிறார். நடுத்தர வர்க்க குடும்பத்தில பிறந்தவருக்கு உலகை ஆளும் ஆசை பிறக்க, இந்தியா வந்து யோகா, தியானக்கலை பயில்கிறார். பின்னர். அதை வைத்தே வாழ்கைய