''பாலியல் வல்லுறவு பற்றி உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமான முத்திரை என்னைத் தடுத்தது''

'

-எழுத்தாளர் நீஜ் சின்னோ

----------------------------------------------------------------------------------

எழுத்தாளர் சின்னோ, 'சேட் டைகர்'(SAD TIGER-NEIGE SINNO) எனும் சுயசரிதை நூலை எழுதியுள்ளார். இந்த நூல் பிரெஞ்சில் எழுதப்பட்டது. பின்னர், அதை ஆங்கிலத்தில் நடாஷா லெஹ்ரர் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலின் மையம், சின்னோவின் வளர்ப்பு தந்தை அவரை எப்படி பாலியல் ரீதியாக சுரண்டினார் என்பதே. சின்னோவின் ஏழு வயதிலிருந்து இத்தகைய பாலியல் சுரண்டல் இளையோராக மாறும்வரை நீண்டிருக்கிறது. ஒரு குழந்தை பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவரின் நிலைமை, அந்த சம்பவத்தை, அவரை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை பதிவு செய்திருப்பதே நூலின் முக்கிய அம்சம். 2023ஆம் ஆண்டு பிரெஞ்சில் வெளியான நூல், அந்த நாட்டில் பெரும் இலக்கிய விருதுகளை வென்றது. 

___________________________________________________________________________________

உங்களுடைய வாழ்பனுபவத்தை இந்த முறையில் எழுதுவது இதுதான் முதல் முறையா?

இது முதல்முறை கிடையாது. உறவுகள், வன்முறை, பாலியல் சுரண்டல், குடும்ப உறவுகள் பற்றி ஆர்வம் எப்போதும் உண்டு. இதில் புதிது என்னவென்றால், சுயசரிதை கோணம்தான். இதுவரை நான், எனக்கு நேர்ந்த அனுபவங்களை எழுதியது இல்லை. அதை பல்வேறு காரணங்களுக்காக செய்யவேண்டாம் என்று நினைத்து வந்தேன். அதில் முக்கியமானது.பாதிக்கப்பட்டவரின் மீது சமூகம் சுமத்தும்  அவமானம். இந்த விவகாரத்தை அவமானமாகவே பார்க்கிறார்கள். எனக்கு, இதை புனைவாக மாற்றி எழுதுவது சுலபம். இந்த மையப்பொருளின் உணர்ச்சியைக் கலைஞராக எளிதாக கையாண்டு எழுத முடியவில்லை. கடினமாக இருந்தது. சுயசரிதையாக எழுதும்போது, இதற்கான எல்லைகள் மங்கிக்கொண்டே வந்தன. அதுவும் அந்த அனுபவம் வலி நிரம்பியதாக இருக்கிறது அல்லவா?

இந்த நூலை எழுதுவது, எனது தினசரி எழுத்து வழக்கத்தில் வந்துவிட்டது. முதலில் தொடக்க பக்கங்களை மட்டுமே எழுதி கணினியில் சேமித்து வைத்திருந்தேன். பிறகு, அதை எடுத்து மீண்டும் படித்தபோது, அதில் முழு நூலையும் கண்டடைந்தேன். 

பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் ஏன் முன்னமே அதுபற்றி தெரிவிப்பதில்லை என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.பாதிக்கப்பட்டவர்கள், அதுபற்றிய தகவல்களை வெளியுலகிற்கு தெரிவிக்காமல் அமைதியைக் கடைபிடிப்பது, காலம் தாழ்த்தி தனக்கு நேர்ந்ததை கூறுவது பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

நான் என்னுடைய 14-15 வயதுகளில் எனக்கு நேரிட்ட பாதிப்பைக் கூறினேன். முன்னாடியே கூறிவிட்டேன். இதை நான் ஏன் முன்னமே கூறவில்லையென்று  நினைத்துப் பார்க்கிறேன். இப்படித்தான் மோசமான சம்பவங்களின் செயல்பாடு இருக்கும் என முடிவுக்கு வர ஒரு கருத்தை கூறவிரும்புகிறேன். நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராக இருக்கிறீர்கள். அப்போது, தொடர்புடைய வல்லுறவுக் குற்றவாளியால் நீங்கள் கொல்லப்படலாம். குழந்தையாக இருக்கையில் இதைப்பற்றி பேசுவது ஆபத்தானது. உங்களுக்குத் தெரிந்த உலகம், உங்கள் கண் முன்னாடி இருந்து மறைந்துபோய்விடும் என்று பயப்படலாம். நீங்கள் உண்மையைக் கூறினாலும் எதுவும் மாறாது என்ற அச்சம் கொள்ளலாம். இன்னொன்று, இந்த விவகாரம் பற்றி, உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமானம் என்ற முத்திரை. அதை அவர்கள் உங்கள் சிறு வயது முதற்கொண்டே பேசி வருகிறார்கள். பாதிக்கப்பட்டவராக உங்களுக்கு உண்மையில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது. நீங்கள் குற்றம்சாட்டுபவர், அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கலாம். அல்லது, நீங்கள் கூறுவதை பிறர் நம்புவார்களா இல்லையா என்று சந்தேகம் எழலாம். 

நீங்கள் உங்கள் நூலில், வளர்ப்பு தந்தை செய்த செயல்களை கற்பனைக்கும் அப்பாற்பட்டவை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதாவது, உங்களுடைய வர்ணனைப்படி... அவர் சாதாரண மனிதராக தெரிகிறார். இப்படி இருக்கும்போது அவரது செயல்பாடு, கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கிறதா? இதுபற்றி எழுத்தில் ஏதாவது தெளிவு இருக்கிறதா?

ஆம் மற்றும் இல்லை என்று இதற்கு பதில் கூறலாம். தொடக்கத்தில் எனக்கு நான் எழுதுவது பற்றிய தெளிவு கிடைக்கவில்லை. இந்த கதையில் உள்ள விதிகளை அப்போது உருவாக்கவில்லை. ஆனால், பிறகு, கோட்பாடு அளவில் பெண் மைய இலக்கியங்களைப் படித்தபோது தெளிவு பிறந்தது. என்னுடைய கதையில் குடும்பம், வேலை செய்யும் இடம், அலுவலகம் ஆகியவற்றில் உள்ள அதிகாரம் பற்றிய அமைப்பு ரீதியான பிரச்னைகள் பற்றிய தொடர்பை அடையாளம் கண்டேன்.

நீங்கள் பாலியல் வன்முறை பற்றி எழுதப்பட்ட இலக்கிய நூல்களை வாசித்திருக்கிறீர்கள். அதை வாசித்து கலவையான குறிப்பிட உணர்வுகளைப் பெற்றிருக்கிறீர்கள். இப்படியான மையப்பொருளில் நூல்களை எழுதுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பாலியல் சுரண்டல் பற்றிய இலக்கியங்கள் பற்றி எனக்கு கலவையான உணர்வுகளே கருத்துகளே உள்ளது. பாலியல் வன்முறை பற்றி நிறைய எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு நடந்ததை வேகமாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் வேறு சமயங்களிலும் கூட வலியை, அதன் தீவிரத்தை, வினோதமான தன்மையை உணர்ந்திருக்கிறார்கள். நான் என்ன கூறவிரும்புகிறேன் என்றால் எழுத்தோ, இலக்கியமோ, என்னைக் காப்பாற்றவில்லை.எழுத்து என்பது எனக்கு தெரப்பியாக அமைந்து காக்கவில்லை. எழுதுவதை நான் எனக்காக மட்டுமே செய்யவில்லை.

ஆமாம், இலக்கியம் என்பது என் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றுதான். இலக்கியம், வாசிப்பது என்பது என் வாழ்க்கையை பொதுவான தன்மையில் மனிதர்களாக மாற்றம் தந்திருக்கிறது. அவை எனக்கு பல்வேறு கதவுகளைத் திறந்துள்ளன. ஆனால், இலக்கியம் என்பது சிறுவயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து அப்பால் கூட்டிச்செல்லவில்லை. 

உங்களுக்கு சிறுவயதில் நடந்த பாலியல் துன்புறுத்தலைப் பற்றி எழுதுகையில் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

 சமநிலையைப் பேணுவதுதான் பெரிய சவால். நான் எழுதும் புத்தகம் சிறியதாகவும், வாசகர்களுக்கு படிக்கும்போது தொந்தரவு தராதவகையில் இருக்கவேண்டுமென விரும்பினேன். சம்பவங்களைச் சொல்லும்போது சுவாரசியமாக இருக்கவேண்டும். அதேசமயம் சில சம்பவங்கள், நூலின் வாசிப்பு வேகத்தை மெதுவாக மாற்றிவிடும். பாலியல் வல்லுறவு காட்சி என்பது தீவிரமாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். என்னுடைய கதை என்றாலுமே அதில் வாசகருக்கு கூற வேண்டியது என்ன என்பதை அலசிப் பார்த்து தேர்ந்தெடுத்தேன். 

ஆமாம். நூலில் என்னுடைய அத்தனை நினைவுகளையும், சம்பவங்களையும் சேர்க்கவில்லை. என்னையும், என்னுடைய சகோதர சகோதரிகளையும் காக்க நினைத்தேன். சுயசரிதை என்பது முழுக்க உங்களைப் பற்றி மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள குடும்பமும் அதில் வரும். எனவே, அதை மரியாதைக்குரிய வகையில் சித்திரிக்க முயன்றேன். அது எளிதாக இல்லை. 

நன்றி

தி இந்து ஆங்கிலம்

விக்டிம் ஆஃப் ட்ராமா - ராதிகா சந்தானம்

# VICTIM OF TRAUMA #NEIGE SINNO #SAD TIGER #RADHIKA SANTHANAM #THE HINDU #FRENCH #SEXUAL ABUSE #THE HINDU LIT 2026 #FEAR #SHAME #SOCIAL PRESSURE #SILENT #SURVIVORS 

வல்லுறவு, நீஜ் சின்னோ, எழுத்தாளர், பிரெஞ்சு, தி இந்து நாளிதழ், தி இந்து லிட் 2026, பயம், அவமானம்,சமூக அழுத்தம், மௌனம்,பயம், பாதிக்கப்பட்டவர் தடுத்தது''

வல்லுறவு, நீஜ் சின்னோ, எழுத்தாளர், பிரெஞ்சு, தி இந்து நாளிதழ், தி இந்து லிட் 2026, பயம், அவமானம்,சமூக அழுத்தம், மௌனம்,பயம், பாதிக்கப்பட்டவர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?