இடுகைகள்

சப்ஸ்டாக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரோனி சிந்தனைகள்!

படம்
    தினமணி கதிரில் சுவாமிநாதன் என்ற ஆயுர்வேத பேராசிரியர், குஷ்டம் நோயைப் பற்றி கூறும்போது, தொடக்க பத்தியில் பிறரை சித்திரவதைப்படுத்துவது, முன்னோர்களது சாபம் என்றெல்லாம் கூறி அதன் காரணமாக வந்த நோய் என குறிப்பிடுகிறார். அதாவது சுருக்கமாக கர்மா. இப்படி சொல்லி மருத்துவம் பார்த்தால் அந்த நோயாளி, மருத்துவத்தை ஏற்பானா? திரிதோஷ அடிப்படையில் மருந்துகளை கூறினாலே போதுமே? எதற்கு இந்த இழிவுபடுத்தல்கள் பேராசிரியரே? செருப்பால் அடித்துவிட்டு சோறு போட்டால் நாய் வேண்டுமானாலும் சோறு தின்னும், மனிதர்கள் அப்படி செய்வார்களா? ஒருநாள் உடல்நலம் குன்றிய உறவினரை விசாரித்துவிட்டு தின்பண்டம் கொடுத்துவிட்டு, வந்து இரண்டே நாட்களில் சாமி பூசைக்கு காசு குடுக்கலீனா, சாமி கொன்னுடுமான்னு கேட்டவன்தான் அவன் என ஒருவர் பேசினால் அதை எப்படி எடுத்துக்கொள்வது? இரட்டை முகம் என்றா, இல்லை மனச்சிதைவுள்ள ஆள் என்றா? இன்று ஊழல் எல்லாம் பிரச்னை கிடையாது. கையூட்டு தவறும் கிடையாது. கையூட்டு கொடுத்தும் கூட வேலை செய்யமாட்டேன்கிறார்களே இந்த கேடுகெட்ட அரசாங்கத்தான்கள் என்பதுதான் வேதனையும் புலம்பலுமாக உள்ளது. ஆத்திக நம்பிக்கையிலிருந்த...

மழைப்பேச்சு பாட்காட்ஸ்டை சப்ஸ்டாக் தளத்தில் கேட்கலாம்!

படம்
               மழைப்பேச்சு பாட்காஸ்டை பிற வலைத்தளங்களில் கொண்டு வருவது கடினமான செயல்முறையாக உள்ளது. கணக்கு தொடங்கி, அதில் ஆர்எஸ்எஸ் முகவரியை இணைத்து என செயல்பாடுகள் நீண்டுகொண்டே செல்கிறது. சப்ஸ்டாக் தளம் எளிதாக ஸ்பாட்டிபையுடன் ஒத்திசைவு கொண்டுள்ளதால், மழைப்பேச்சை சப்ஸ்டாக்கில் கொண்டு வர முடிந்தது. சப்ஸ்டாக் தளத்தில் கட்டுரைகளோடு, மழைப்பேச்சு பாட்காஸ்டையும் கேட்கலாம்.    https://anbarasushanmugam.substack.com/p/18a?r=396v6

நாயின் உளவியல் பற்றி அறிய விருப்பமா? - சப்ஸ்டாக் தளத்தில் இணையுங்கள்!

படம்
  நாம் வீட்டில் வளர்க்கும் விலங்குதான் நாய். பெரும்பாலானவர்கள் நாயை தங்கள் துணையாக வைத்துக்கொண்டு வாழ்க்கையை வாழ்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள். இந்த சூழலில், நாயின் உளவியல் பற்றி அறிவது அவசியம். என்னதான் இருந்தாலும் உயிருள்ள பிராணி அல்லவா?  இதைப்பற்றிய தகவல்களை நீங்கள் சப்ஸ்டாக் தளத்தில் வாரம்தோறும் வியாழனில் வாசிக்கலாம். தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால் செய்தி மடல் உங்களுக்கு கிடைக்கும். நன்றி! anbarasushanmugam.substack.com

சப்ஸ்டாக் வலைத்தளத்திலும் பயணிப்போம் - வாய்ப்புள்ளோர் இணையலாம் - வாங்க!

படம்
  இனி வலைப்பூவில் எழுதும் கட்டுரைகள் சப்ஸ்டாக்கிலும் கிடைக்கும். நீங்கள் விரும்பினால் இதிலும், தொடரலாம். தமிழோடு இணைந்து பயணிப்போம்.  https://anbarasushanmugam.substack.com/ நன்றி - மெட்டாமங்கீஸ் - விஜய் வரதராஜ்