என் மீது ஒட்டப்படும் லேபிள்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது - ஆப்கன் திரை இயக்குநர் சாஹர் பானு சதாத்
ஆப்கானிஸ்தான், அங்கு முதலில் அமெரிக்கா,இந்தியா பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்தனர். பிறகு, பல்வேறு திட்டங்களை செய்த பிறகு என்ன நினைத்தார்களோ, தாலிபன்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இருநாடுகளும் தங்கள் நாடு வந்து சேர்ந்துவிட்டனர். தாலிபன்கள் முட்டாள் மூர்க்கர்கள். மதச்சட்டப்படிஆட்சி நடத்தக்கூடியவர்கள். அமெரிக்க, இந்திய நாடுகளில் ஆதரவில் ஆப்கனில் பெண்களின் முன்னேற்றம் மேலேறி உயர்ந்து வந்தது. கல்வி கற்க, விரும்பிய உடையை உடுத்த, வெளியே வேலைக்கு செல்லக்கூடிய, பேசக்கூடிய அடிப்படை விஷயங்கள் நடைபெற்றன. இப்போது மீண்டும் அவர்கள் கற்காலத்திற்கே சென்றுவிட்டனர். அண்மையில், இந்தியா வந்த தாலிபன்கள், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆண்களை மட்டுமே கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதற்கு பெண்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்கள் கண்டனம் தெரிவித்தது குறைவுதான். இப்போது சில நாட்களுக்கு முன்னர் ஆப்கனின் மற்றொரு சட்டம் வந்திருக்கிறது. குடும்ப வன்முறையை சட்டப்பூர்வமாக்கும் சட்டம் அது. அதாவது, கணவர் மனைவியை அடிக்கலாம். ஆனால், எலும்பு முறியும் காயம் ஏற்படக்கூடாது....