இடுகைகள்

கேள்வி பதில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2 - அறிவியல் கேள்வி பதில்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2, எந்த வகையில் வேறுபட்டது? முதல் நூல் போல இதில் நகைச்சுவை இருக்காது. சற்று குறைவு. ஏன் இல்லவே இல்லை எனலாம். இதெல்லாம் வெளியிட்ட நாளிதழின் ஆசிரியரின் கைத்தொழில் காரியம். ஆனால் அறிவியல் மூடநம்பிக்கைகளை, அறிவியல் உண்மையோடு எதிர்கொள்ள நேர்ந்தது எனக்கு பிடித்திருந்தது. வாரம்தோறும் இரண்டு நாட்கள் இதற்காக வேலை செய்தபோது தெரிந்து கொண்ட விஷயங்கள் எனக்கு பரவசம் தந்தன.  தினந்தோறும் அறிவியல் உலகம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கேள்விகளை பல்வேறு வடிவங்களில் இணையத்தில் தேடி, அதற்கான பதில்களை ஒப்பீடு செய்து தேர்ந்தெடுத்து தமிழாக்கம் செய்தேன். இந்த வேலை தந்த மகிழ்ச்சி, அக்காலகட்ட  இழிவான அலுவலக அரசியலைக் கூட சற்று மறக்கடித்துவிட்டது. வித்தியாசமான கோக்குமாக்கான கேள்விகளை எடுத்தாலும் அதற்கு நேர்த்தியான அறிவியல் ரீதியான விளக்கம் உள்ளே இருக்கிறது. இதுதான் வாசகர்களுக்கு வாசிப்பில் ஆர்வமூட்டும் விஷயமாக கருதுகிறேன். வாசியுங்கள். நூல் பிடித்திருந்தால் நண்பர்களுக்குப் பகிருங்கள். நன்றி நூலைத் தரவிறக்கி வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BWXM1M4X

உலக வாழ்க்கையை செயலூக்கத்துடன் வாழக் கற்றுத்தரும் நூல்!

படம்
  தன் மீட்சி ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி pinterest இந்த நூல் இளைஞர்களின் சமகால பிரச்னைகளையும், அதற்கு ஜெயமோகன் என்ன தீர்வுகளைச் சொல்லுகிறார் என்பதையும் கொண்டுள்ளது.  இலக்கிய வாசிப்பு தொழில் வாழ்க்கையை பாதிக்குமா? ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்யவேண்டுமா என்றால் அதற்கான பதில்களை தெளிவாக தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பதில்களை தேடி எடுத்து சொல்கிறார்.  இது பதில் கேட்பவர்களுக்கும், தொகுப்பாக நூலை வாசிப்பவர்களுக்கும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.  நூலின் இறுதியில் ஆசான் என்று தன்னை அழைப்பவர்கள் பற்றியும், குக்கூ அமைப்பின் மூலம் தங்களது தொழில் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு தங்களுக்கு மனநிறைவு தரும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இதனை வாசிக்கும் யாருக்கும் தடுமாறாமல் முடிவெடுப்பதற்கான திறன் கிடைக்கும் என நம்பலாம்.  ஜெயமோகனின் வலைத்தளத்தில் இளைஞர்கள் வாசிப்பு பற்றியும், சொந்த வாழ்க்கையில் உள்ள தேக்க நிலை பற்றியும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். கேள்விகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கூற விரும்புவது என்று பார்த்தால், ஒரே

பெட்ரோல் டேங்கில் சர்க்கரை போட்டால் என்னாகும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி வாகனங்களின் டேங்கில் சர்க்கரையைப் போட்டால் இஞ்சின் சேதமாகுமா? கொட்டும் சர்க்கரை வீணாகும். அடுத்து பர்சின் பணம் காலியாகும். நிறைய படங்களைப் பார்த்துவிட்டு அந்த பாதிப்பில் கேட்கிறீர்கள். ஆனால் உண்மையில் சர்க்கரை என்பது பெட்ரோல், டீசலில் கரையும் தன்மை கொண்டதல்ல. லிட்டர் அளவில் ஒரு டீஸ்பூன் என்பது பிரச்னை அல்ல. ஆனால் பாரி சுகர் போன்ற பாக்கெட்டுகளை வாங்கி கிலோ கணக்கில் கொட்டினால் டேங்க் முழுக்க நிறையும் சர்க்கரை வண்டி இயக்கத்திற்கான பெட்ரோல், டீசலை வண்டிக்கு செலவிட விடாது. மற்றபடி மெக்கானிக் உங்களது பர்சின் கனம் குறைக்கச்செய்யும் வித்தைகள் இதில் வராது. இஞ்சின் போயிடுச்சு சார் என்று கூறுவது சும்மா ஹம்பக். டேங்கை சுத்தம் செய்தால் போதும். பத்மினி கார் முதல் போர்ச் கார் வரை பிரமாதமாக ஓடும்.