இடுகைகள்

செல்லப்பிராணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இணையத்தில் செல்லப்பிராணி வீடியோக்கள் உங்களுக்குப் பிடிக்குமா?

படம்
  நாய், பூனை வீடியோக்களை இணையத்தில் பார்ப்பீர்கள். பொதுவாக சீரியசாக பொருளாதார கட்டுரைகளை எழுதும் எங்கள் இதழ் ஆசிரியர் கூட தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள இணையத்தில் நாய்களைப் பற்றிய வீடியோக்களைத் தேடி பார்ப்பது வழக்கம். ஆனால் நமக்கு நன்றாக இருக்கிறது ஆனால் இப்படி வீடியோக்களை எடுப்பதற்காக நாய்களை சித்திரவதை செய்வது நியாயமா என்று விலங்கு நல அமைப்புகள், விலங்கு நேசர்கள் குழுவினர் குரல் எழுப்புகின்றனர். உச்சமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் எழுத்தாளர் வா.மு. கோமு கூட யூட்யூப் வீடியோவுக்காக நாயை சித்திரவதை செய்யும் சிலரைப் பற்றிய புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.  இதைப்பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.  இணையத்தில் ஆயிரக்கணக்கிலான நாய், பூனை குறும்பு வீடியோக்கள் கிடைக்கின்றன. இதனைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது.  யூட்யூபில் நாய், பூனைகளை கொடுமைப்படுத்தும் வீடியோக்களுக்கு இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை எப்படி தடுப்பது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதும் கடினம்.  2021ஆம் ஆண்டு சாரிட்டி இன்டர்நேஷனல் கேட் கேர் அமைப்பு, இதுபோல வீடியோக்

எப்போதும் இணைந்திருக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள்!

படம்
  ரிங் ஜென் 4 இது நான்காம் தலைமுறை வீடியோ டோர்பெல். வைஃபை வசதியும் பிற அம்சங்களும் நிறைய மேம்பட்டிருக்கிறது. யார் உங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். கதவை தட்டுபவர்கள் யார், பிறர் வீட்டுக்கு செல்பவர்கள் என நிறைய விஷயங்களை கண்காணிக்க முடியும். மேலும் காலிங்பெல் அழுத்துபவர்களுக்கு சொல்ல நான்கு வகையான ப்ரீசெட் பதில்களும் உள்ளன. விலை 16,900 எக்கோ ஷோ 10 இது மூன்றாம் தலைமுறை கருவி. 10.1 இன்ச் திரை கொண்ட சாதனம். இதனால் இதில் எளிதாக பிறருடன் பேச முடியும். ஸ்ட்ரீமிங் வீடியோக்களை பார்க்க முடியும். பிற சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தலாம்.   விலை 24,999 ஃபர்போ டாக் கேமரா இது நாய்க்கான கேமரா. இதன்மூலம் நாம் வீட்டில் இல்லாதபோது கூட நாய்க்கு உணவு அளிக்க முடியும். இதில் நாயை கவனிப்பதோடு ஆடியோவும் உண்டு. இதில் உள்ள ஸ்னாக்ஸ் டிஸ்பென்சர் மூலம் நாய்க்கு உணவு அளிக்க முடியும். இதில் அலெக்ஸாவை இணைத்தால் போதுமானது. படத்தின் தரமும் சிறப்பாக உள்ளது.  விலை 26,500 ஆர்லோ எசன்ஷியல் ஸ்பாட்லைட் கேமரா வயர்லெஸ் முறையில் இயங்கும் பாதுகாப்பு கேமரா. வைஃபையில் இணைத்தால் போதும். உங்களுக்கு சொந்தமாக சொத்துக்களை எளிதாக பராமரித்து

புலிகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கலாமா? - பதில் சொல்லும் ஆவணப்படம்

படம்
  பொதுவாக வன விலங்குகளை யாரும் சங்கிலி போட்டு கட்டி செல்லப் பிராணிகளாக்க முடியாது. ஓநாய் குலச்சின்னம் நாவலில் ஒரு மாணவர் அப்படி செய்து இறுதியில் தோற்றுப்போவார்.  கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்தால் விரியும் படம் எட்டு நிமிடங்கள் ஓடும். அதன் மையக்கதையே, புலிகள் அழிவும். அதனை சிலர் குட்டியாக இருக்கும்போதே எடுத்து செல்லப்பிராணியாக வளர்ப்பதும் தவறு என்பதைப் பற்றியதுதான்.  அமெரிக்காவில் மட்டுமல்லாது  உலகம் முழுக்கவுமே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது தோராயமாக 3900 புலிகள் மட்டுமே உயிருடன் உள்ளன. மீதியுள்ள புலிகள் எங்கே போயின என்பதை நாம் நமது மனத்திடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும். பெரும்பாலான புலிகள் வீரிய மாத்திரைகள், சூப் ஆகியவற்றுக்காக பலியாகிவிட்டன.  மீதி நினைவில் மட்டுமே காடுள்ள மிருகமான புலிக்குட்டிகளும் பல பிரபலங்களின் வீட்டில் சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் காட்டப்படும் செல்லபிராணி காட்சிகள் மனதை ரணப்படுத்தக்கூடியது.  ஆவணப்படத்தில் ஏராளமான இயற்கை அமைப்பு சார்ந்த நிபுணர்கள் புலிக்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது ஏன் தவறு என்று பேசுகிறார்