இடுகைகள்

ஆன்லைன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இணையத்தில் வழியே பெருக்கெடுக்கும் காதலும், நெருக்கமும் - மெட்டாவர்ஸ் நாகரிகம்

படம்
1 இன்று இணையம் நமது உடலின் இன்றியமையாத பாகம் போல ஆகிவிட்டது. இணையம் இல்லாத ஸ்மார்ட்போன், கணினி என்பது உயிரில்லாத உடல்போல. இணையம் அனைத்தையும் தந்தாலும் உறவைத் தருமா, ஒருவர் தொடுவது போன்ற சுகத்தை தருமா என்றால் கொஞ்சம்  போலியாக இருந்தாலும் அதையும் தரும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. அவற்றைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.  தட் சாஸி திங் என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ளது. இதன் நிறுவனர், சாச்சி மல்ஹோத்ரா. இது டிஜிட்டல் வடிவிலான செக்ஸ் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிராண்ட். இதனை தொடங்கியவர், தனது காதலருடனான காதலை பகிர்ந்துகொள்வதும் இணையம் வழியாகத்தான். சில சமயங்களில் நாம் மனதிலுள்ள  ஆசைகளை பகிர்ந்துகொள்வது கடினமானது. அதற்கு செக்ஸ்டிங் வழிமுறை உதவுகிறது. நாம் தினசரி எதிர்கொள்ளும் சவால்களையும், சங்கடங்களையும் டிஜிட்டல் வழியாக நாம் விரும்புபவருடன் பகிர்ந்துகொள்வது சிறப்பாக இருக்கிறது என்றார் சாச்சி.  தனாயா நரேந்திரா, செக்ஸ் கல்வியாளர் பேஸ்புக், ட்விட்டர், இன்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் என அனைத்துமே மக்களுடன் தொடர்புகொள்ளும் சாதனங்கள்தான். முன்பை விட டிஜிட்டல் வழியாக பிறருடன் தொடர்புகொள்

ஆட்டிச குழந்தைகளின் கலைத்திறனை அங்கீகரிக்கும் வலைத்தளங்கள்!

படம்
  சுவாமிநாதன் மணிவண்ணன் என்ற ஓவியக்கலைஞர் சென்னையில் உள்ளார். இவர் தனது ஏழு ஒவியங்களை 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் தனது லெட்டர்ஹெட்டை விஸ்வநாதன் ஆனந்த் வடிவமைத்துள்ளார். இத்தனைக்கும் சுவாமிநாதன் மணிவண்ணன், ஆட்டிஸ பாதிப்பு கொண்டவர்.  சுவாமியின் படைப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்காக திறக்கப்படவிருக்கும் அருங்காட்சியகத்தில் இடம்பிடிக்கவிருக்கிறது. 36 வயதான சுவாமியின் படைப்புகள் 2018ஆம் ஆண்டு கொச்சி பினாலே நிகழ்ச்சியில் முதன்முதலாக இடம்பெற்றது.இப்போது ஆன்லைன் தளங்கள் உருவாக்கப்பட்டுவிட்டதால் மாற்றுத்திறனாளிகளின் கலைப்படைப்புகள் எளிதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.  ஆட்டிஸ குழந்தைகள் தகவல் தொடர்பு கொள்வதில் தடுமாறினாலும் சரியான பயிற்சி கொடுத்தால், அவர்கள் கலை சார்ந்த விஷயங்களில் திறமையானவர்களாக வளருவார்கள் என்பதற்கு சுவாமி முக்கியமான உதாரணம்.  சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் சிறப்புக் குழந்தைகளுக்காக கலைகளை சொல்லித்தருவதற்காக திட்டங்கள் உள்ளன. 2016ஆம் ஆண்டு தொடங்கி, இங்கு மாலா சின்னப்பாவும் அவரின் குழுவும் உழைத்து வருகிறார்கள். எ பிரஷ் வித் ஆர்ட் என்பது இவர்

வீட்டிலிருந்தே அலுவலக வேலை - கடிதங்கள்

படம்
  வீட்டிலிருந்தே வேலை அன்புக்குரிய தோழர் இரா.முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? தங்கள் குடும்பத்தினர் நலமோடு இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எங்கள் இதழுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. வேலைகள் அனைத்தும் இணையம் சார்ந்தது என்பதால் கட்டுரைகளை எழுதிய மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும். வலி நிவாரணிகள் பற்றி படிக்க நினைத்தேன். அதற்கான நூல் கிடைத்தது. போனில் அதனைப் படித்து வருகிறேன். நேரு பற்றிய தமிழ் நூல் எழுதி வருவதைச் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இன்னும் பதினைந்து பக்கங்கள் எழுதினால் போதும். சரிபார்த்து வெளியிட்டு விடலாம்.  நன்றி ச.அன்பரசு 2.4.2021 படம் பிக்சாபே

பெருந்தொற்றுகாலத்தை எதிர்கொள்ள முடியாத இளைஞர்கள் வீடியோகேமில் மூழ்கிவிடுகின்றனர்!

படம்
                  ஜெனிபர் கொலரி குழந்தை வளர்ப்பு வல்லுநர் பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் பலரும் மன அழுத்தம் , பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரே ? குழந்தை வளர்ப்பு என்பது காலந்தோறும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது . இதில் பல்வேறு விதமான நம்பிக்கைகள் , பிளவுகள் உள்ளன . 1960 ஆம் ஆண்டில் உங்கள் குழந்தையை அழ விடுங்கள் என்று கோட்பாடு ஆட்சி செலுத்தியது . குடும்பத்தில் குழந்தை மீது அதிகாரம் செலுத்துவது , சுதந்திரமாக விடுவது என்பது பல்வேறு கட்டங்களில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது . இப்போது குழந்தைகளுக்கு காலகட்ட நெருக்கடி காரணமாக பதற்றம் , மன அழுத்தம் , ஏடிஹெச்டி தொடர்பான அறிகுறிகள் உள்ளன . சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பல்வேறு விஷயங்களைப் பேசும் இளைஞர்கள் எளிதில் பதற்றம் , மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர் . இவர்கள் தங்கள் நண்பர்களிடமும் , பிறரிடமும் கூட இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு , அதற்கு சாப்பிடும் மருந்துகளைப் பற்றி பேசுகிறார்கள் . ஆனால் விரைவில் நம்பிக்கையற்று போய்விடுகிறார்கள் . இந்த வகையில் யாரும் நம்பிக்கை பெ

உணவுத்துறையில் ரோபோக்களின் பங்கு!

படம்
  cc   உணவுத்துறையி ல் ரோபோ ! அமெரிக்காவில் பிளென்டி என்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது . இந்நிறுவனம் , வீட்டின் உள்ளறைகளில் உணவுப் பயிர்களை வளர்க்கும் தொழிலை செய்துவருகிறது . இதனை பராமரிப்பது மனிதர்கள் அல்ல ரோபோக்கள்தான் . அந்த வகையில் கொரோனா பாதிப்பால் தற்போது உணவுத்துறையில் ரோபோக்களை நிறுவனங்கள் நாடத் தொடங்கியுள்ளன . காரணம் மனிதர்களிடமிருந்து நோய்த்தொற்று எளிதாக பரவும் ஆபத்துதான் . ” மக்கள் மனிதர்களின் கைபடாத காய்கறிகளை அச்சமின்றி சாப்பிட விரும்புகிறார்கள் . காய்கறிகளை முதல் நபராக மக்கள் தாங்களே தொட்டு சாப்பிட நாங்கள் உதவுகிறோம்” என்கிறார் பிளென்டி நிறுவன இயக்குநர் மேட் பர்னார்டு . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரோபோக்கள் மூலம் தொடங்கப்பட்ட கஃபே எக்ஸ் நிறுவனம் , முதலீடு இன்றி தடுமாறியது . ஆனால் இன்று நோய்த்தொற்று காரணமாக மனிதர்கள் இல்லாத உணவகங்களுக்கு வரவேற்பு பெருகிவருகிறது . பிளென்டி போன்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இ வலைத்தளங்கள் மூலம் ஏராளமான ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளன . பீட்சா விற்கும் நிறுவனங்களும் இப்போது மனிதர்களின் கைபடாமல் பீட