இடுகைகள்

பணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதல் மீட்டர் - சமூக தகுதிகள் திருமணத்தை தீர்மானிப்பதில் தோற்றுப்போவது ஏன்?

படம்
  காதல் மீட்டர் 3 ஒருவரை மணம் செய்து வைக்க இந்துமதம் சார்ந்து நிறைய தகுதிகள் பார்க்கிறார்கள், பிற மதங்களிலும் இதுபோன்ற தகுதிகள் பொருந்தும்.  அவையெல்லாம் பொதுவானவைதான். அடிப்படையாக மனப்பொருத்தம் தவிர அனைத்தையும் பார்க்கிறார்கள். உடல் தோற்றம், சமூக அந்தஸ்து, புத்திசாலித்தனம், பொருளாதார தகுதி. இதுதான் சமூக தகுதிகள். இந்த நான்கு விஷயங்களை சமூகம் கவனிக்கிறது. இதன் அடிப்படையில்தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் நடைபெறுகின்றன.  பெரும்பாலான திருமணங்கள், விவாகரத்தில் வந்து நிற்கும்போதுதான் பொதுவான சமூக தகுதிகள் வேலைக்கு ஆகவில்லை என பெற்றோருக்கு உறைக்கும். சில சமயங்களில் திருமணங்கள் காசு பறிக்கும் செயலாக மாற, மணமகனோ, மணமகளோ தற்கொலை செய்துகொள்வது அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவது கூட நடைபெறுகிறது. அரசியல் வணிக திருமணங்களில் புகார்கள் எழுவதில்லை. அவர்களே சமாதானம் பேசிக்கொண்டுவிடுகிறார்கள். யார் தரப்பு அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக இருக்கிறதோ, அவர்கள் நடைபெற்ற தவறுக்கு காரணகர்த்தா.  இன்று எழுச்சி பெற்றுள்ள பார்ப்பன பாசிச மதவாத அமைப்புகள், அதிகாரத்தை குறிவ...

பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா?

 பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா? பணம் அல்டிமேட்டான் விஷயம். அதை வைத்துத்தான் பொன், பெண், நிலம் ஆகியவற்றை சொந்தமாக்கிக்கொள்ள முடியும். நல்ல உணவை உண்ண முடியும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். பணமில்லாத நிலையில் காதலைக் காப்பாற்ற முடியாது. திருமணம் நடக்காது. அனைத்திற்கும் பெரும் போராட்டமாக இருக்கும். இந்தியா போன்ற மதவாத நாட்டில், சிறுபான்மையினர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சம்பாதிக்கவிட்டால் எளிதாக அவர்களை பெரும்பான்மையினர் அழித்துவிடுவார்கள். உங்களிடமுள்ள பணம் உடலில் தெரியவேண்டும். அப்போதுதான் ஊர், உலகம் சற்று விலகி தள்ளி நிற்கும். கதவைத் திறந்துவிடும். அனைத்து கதவுகளும் காசு என்றால் திறக்கும். திறக்காத கதவுகளும் கூட. இப்போது அமெரிக்கா பிற நாடுகளை நீ அதை செய்யக்கூடாது இதைச் செய்யக்கூடாது என மிரட்டுகிறது என்றால் அதற்கு என்ன காரணம். அதன் நாணயம்தான் பல்வேறு வியாபாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. வருமானம் ஏகத்துக்கும் வருகிறது. அதை வைத்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது. அந்த நாடு சொல்வதை மூன்றாம் உலக நாடான, அடிமை புத்தி கொண்ட இந்தியா கேட்காவிட்டால் பொருளாதாரம் திட்டமிட்டு வீழ்த்...

சீனாவிலுள்ள பள்ளி வகைகள்

படம்
  எலைட் பள்ளி இதில் தொடக்க, மேல்நிலைப்பள்ளிகள் உண்டு. சீனாவில் தொழிலதிபர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை எலைட் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆங்கில வழிக் கல்வி, கணினி அறிவியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கல்வி, மாணவர்களுக்கான வசதி, சூழல் ஆகியவை சொகுசு ஓட்டல் போல உயர்தரமாக இருக்கும். நகர மேல்நிலைப்பள்ளிகள் அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்கான பள்ளிகள். இப்பள்ளியில் மாணவர்கள் சேர்வது, பல்கலைக்கழக அனுமதி தேர்வில் வெற்றி பெறுவதற்காகவே. தேர்வு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வேலை செய்வதற்கான திறன்களை பெற முடியும். சுயாட்சி முறை என்பதால் சுதந்திரம் உண்டு. அரசின் பாடங்களை கற்றுக்கொடுத்தபிறகு வேறு விருப்ப பாடங்களை மாணவர்கள் கற்கலாம். அரசுப்பள்ளிகளை விட வசதிகள் நன்றாக இருக்கும். குறைபாடு, நிதியுதவி. வயதான ஆசிரியர்கள். தொழில்பயிற்சிபள்ளிகள் கல்விக்கடன் வாங்கிப் படிக்க எல்லோராலும் முடியாது. எனவே, படித்து முடித்த உடனேயே வேலைக்கு செல்ல உதவும் பள்ளிகள் இவை. வாகனம் ஓட்டுதல், சமையல், உலக வணிகம், சுற்றுலா, சேவை நிர்வாகம், அல...

பிழைத்திருப்போம் - எங்கே செல்லும் இந்தப்பாதை?- தங்குவதற்கான இடம், அவசியமான பொருட்கள்

படம்
    இறுதிப்பகுதி     பிழைத்திருப்போம் எங்கே செல்லும் இந்தப்பாதை? பேரிடர், கலவரம், வதந்தி, பொய் வழக்கு என எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். நிம்மதியாக இருக்க தலைக்கு மேலே கூரை வேண்டும். அதாவது தங்குவதற்கு இடம்வேண்டும். அது பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம் அதற்கான செலவும் குறைவாக இருக்கவேண்டும். இடங்களை முன்னமே கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள். தூரம் போகும் தூரம் குறிப்பிட்ட தொலைவில் இருக்கவேண்டும். வண்டியில் நீங்கள் போய்க்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? பெட்ரோலும் வண்டியில் குறைவாக இருக்கும்போது ஏதாவது ஒரு இடத்தை உறுதி செய்து அதை நோக்கி சென்றே தீரவேண்டும். அல்லாதபோது உங்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். பல்வேறு இடங்கள் ஒரு கெட்ட விஷயம் நடக்கும்போது, வீட்டின் கதவை மட்டும் திறக்காது, ஜன்னல்களையும் திறந்துகொண்டு வரும் என்பார்கள். மோசமான விஷயங்கள் நடைபெறும்போது, உடனே தப்பிக்க நான்கு திசைகளுக்கு நான்கு இடங்கள் என தயாரித்து வைத்துக்கொண்டால் உதவியாக இருக்கும். ஒரே இடத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அது ஆபத்தும் கூட. தனிக்குரல் கலைஞரான குணால் கம்ரா, தனது பகடி...

பணத்திற்காக, வைரத்திற்காக, செல்வத்திற்காக விநாயகர் சிலையை துரத்தும் கூட்டம்!

படம்
  கம் கம் கணேசா ஆனந்த் தேவர்கொண்டா, நயன் சரிகா தெலுங்கு மளிகை கடையை கொள்ளையடிக்கும் இரு திருடர்கள், நகைக்கடையை கொள்ளையடித்து வைரம் ஒன்றை லவட்டிக்கொண்டு தப்பிக்கிறார்கள். நகைக்கடை முதலாளியை வேறு சுட்டுவிடுகிறார்கள். அக்கடையின் பையன்தான், வைரத்தை திருடச்சொல்லி ஐடியா கொடுக்கிறான். வைரத்தை திருடியபிறகு, இரு திருடர்களை சுட்டுக்கொன்றுவிடுவது மறைமுக திட்டம். ஆனால், வைரத்தை திருடிய நாயகன், அவனது நண்பன் ஆகிய இருவருக்கும் எதற்கு கையிலுள்ள வைரத்தை கொடுத்துவிட்டு பணத்தை வாங்குவது? நேரடியாக வைரத்தை நாமே விற்றுக்கொள்ளலாமே என நினைக்கிறார்கள். வைரத்தோடு தப்பி ஓடுகிறார்கள். இது ஒரு கதை. இன்னொரு கதை. தேர்தல் நேரம், அதில் போட்டியிடுபவர், நூறு கோடி பணத்தை விநாயகர் சிலையில் வைத்து கடத்துகிறார். எல்லாம் மக்களுக்கு விநியோகம் செய்யத்தான். அந்த சிலை மாறிவிடுகிறது. யார் அதை மாற்றியது என ஆட்களை விட்டு தேடுகிறார். அதில் இரு திருடர்களும் சிக்கிக்கொள்கிறார்கள். படத்தில் இயக்குநர் ஒரு லாஜிக்கை மறந்துவிட்டார். அதாவது, ஹைதராபாத் திருடர்களில் ஒருவனான நாயகன், வைரத்தை அரசியல்வாதி தரப்பு கொண்டு வரும் முதல் விநாயகர் சி...

பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை

படம்
  பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை பேரிடர் காலங்களில் வீடுகளில் புகுந்து பொருட்களை திருட பலரும் முயல்வார்கள். மனிதர்கள் இயல்பாகவே மோசமானவர்கள்தான். சட்டங்கள் இருப்பதால், அவர்கள் வேறு வழியின்றி தண்டனைக்கு பயந்து நல்லவர்களாக நடிக்கிறார்கள். நான் இப்போது சொல்வது குரூரமாக இருந்தாலும் ஆபத்தான காலங்களில் மனிதர்களின் மனம் மோசமானது என்பதை நிரூபிக்க நிறைய உதாரணங்கள் உண்டு பேரிடர் அல்லது மதக்கலவரம் உருவாக்கப்படும்போது பாதிக்கப்படுபவர்களின் வீடுகளை கொள்ளையிடுவது, பெண்களை வல்லுறவு செய்வது இயல்பானது. இதை தடுக்க வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை செய்து கொடுப்பு பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. கதவுகளை பூட்டுவது, பாதுகாப்பு கேமரா, அலாரம் எழுப்புவது, கதவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக பூட்டுவது என நிறைய வசதிகள் வந்துவிட்டன. தற்காப்புக்காக ஒருவரை தாக்குவது என்றாலும் அந்தந்த நிலப்பரப்பிற்கு ஏற்றவகையில் சட்டங்கள் மாறுபட்டிருக்கும். அதை புரிந்துகொண்டு இருக்கவேண்டும். ஆயுதங்களை கையாளும் சூழலில்,  முறையாக பயிற்சி எடுப்பது நல்லது. இந்தியாவில் இந்துத்துவ மதவா...

பொருளாதாரத்திற்கு உதவும் வேலை!

படம்
             பாயும் பொருளாதாரம் 9 பொருளாதாரத்திற்கு உதவும் வேலை யாருடைய செழிப்பிற்கு வேலை உதவுகிறது என்று உள்நோக்கமாக கேட்டால் பதில் சொல்லமுடியாது. பொதுவாக மனிதர்கள் அனைவருமே வேலை செய்வதில் அதிக நேரத்தை செலவிடுகிறோம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து உணவு, உடை, இருப்பிடம் பெறுகிறோம். இதற்கு மேல் காசு இருந்தால் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தலாம். தொழிலாளர்களை தொடக்கத்தில் எந்த அரசும் பாதுகாக்கவில்லை. அவர்களே ஒன்று திரண்டு போராடித்தான் குறிப்பிட்ட எட்டுமணி நேர வேலைத்திட்டத்தை உருவாக்கினர். இன்று அந்த வேலை நேரத்தை மாற்றிவிட சுரண்டல் தொழிலதிபர்களாக சில பைத்தியங்கள் ஊளையிடுகின்றன. இதற்கு பதிலடியாக, வாகனங்கள் தயாரிக்கும் தொழிலதிபர், இப்படியான வேலை நேரத்தை மேல்நிலையில் இருந்து தொடங்கலாமே என்று கேட்டிருக்கிறார். நிறுவனர், தலைவர், இயக்குநர் வாரத்திற்கு 90 மணிநேரங்கள் வேலை செய்கிறார் என்றால் அவரின் சம்பளம் அதிகம். தொழிலாளர்கள் அதை வாழ்நாளில் நினைத்து பார்த்திர முடியாத தொகை. அப்படியே உழைத்தாலும் உடல்,மனம் கெட்டுப்போவதுதான் மிச்சமாகும். கையில் காசு ஏதும் கிடைக்க...

நடுத்தர குடும்பத்திற்கு வரும் அடுத்தடுத்த பணப்பிரச்னையால் தவறான வழிக்கு இறங்குகிறார்கள். விளைவு?

படம்
    நாராயணா அண்ட் கோ தெலுங்கு பட்ஜெட் படம். கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் பணத்தின் பற்றாக்குறை தெரிகிறது. வங்கியில் காசாளராக உள்ளவர் நாராயணா. கிடைக்கும் வருமானத்தில் மனைவி, இரு பையன்கள் என குடு்ம்பத்தை சமாளித்து வருகிறார். மனைவி பட்டுப்புடவை பைத்தியம். மகன் கிரிக்கெட் சூதாட்ட வெறியன். இளையமகன் செக்ஸ் வெறியன். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தில் பிரச்னை வராமல் எப்படி இருக்கும்? நாயகனை நல்லவர் என்று கூறிவிட முடியாது. எப்போதும் குறுக்குவழியில் சம்பாதிக்க நினைக்கத் துடித்துக்கொண்டிருப்பவர். அந்த வகையில் கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டு பத்துலட்சம் கடன்படுகிறார். இத்தனைக்கும் படிப்பு வராமல் வாடகை டாக்சி ஓட்டி வருகிறார். அப்படி வேலை செய்யும் நிலையில் ஓசி பார்ட்டிக்கு சென்று வருகையில் ஒரு பெண்ணோடு கசமுசா செய்துவிடுகிறார். அந்த சமாச்சாரமே அப்பெண் சொல்லித்தான் நாயகனுக்கு தெரிகிறது. அதுவும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லுகிறார். இதனால் அவரை மணம் செய்துகொள்ள வேண்டி வருகிறது. அந்த காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேல் படம் பெரிதாக முன்னேறவில்லை. நகைச்சுவையும் கை...

பிச்சைக்காரன், பேராசையும் கொலைவெறியும் கொண்ட பணக்காரர்கள் வாழும் அரண்மனைக்குள் நுழைந்தால்....

படம்
      பிளடி பெக்கர் தமிழ் இயக்கம் சிவபாலன் பிச்சைக்காரர் ஒருவருக்கு மாளிகை ஒன்றில் சாப்பாடு இலவசமாக போடுவதைச் சாப்பிட வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைபவர், சொத்துப்பிரச்னையில் சிக்கிக்கொண்டு உயிர் பிழைக்கப் போராடுகிறார். உண்மையில் அவர் எதற்கு அங்கு சென்றார், உயிர்பிழைத்து வெளியே வந்தாரா என்பதே கதை. படத்தின் தலைப்பு பற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. படத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு. படத்தில் அனைத்தும் உள்ள பணக்காரர், எதுவுமே இல்லாத பிச்சைக்காரன் என இரண்டு அதீத நிலைகள் காட்டப்படுகின்றன. இந்தப்படம் ஆங்கிலப்படத்தின் தாக்கம் பெற்றது என ஒருசாரார் கூறினர். இருக்கலாம். மறுக்க முடியாது. படத்தை தயாரித்த இயக்குநர் நெல்சனே அமெரிக்க டிவி தொடர்களால் உந்துதல் பெற்று காட்சிகளை அமைப்பவர்தான். அப்போது அவரின் மாணவரான இப்பட இயக்குநர் எப்படி மாறுபட்டு இருப்பார்? கடினமாக உழைத்தால் பணக்காரராகிவிடலாம் என்று நினைப்பதையே படம் பகடி செய்கிறது. ஒருவர் உழைப்பது சரி. ஆனால், தான் செய்வது சரி. தனக்கு கீழே சிலர் இருக்கிறார்கள் என மனநிம்மதி பெறுகிறார். சிலசமயங்களில் அதை சொல்லிக்காட்டவும் வன்ம...

ரோனி சிந்தனைகள் - நன்மையின் இன்னொரு பரிமாணம்!

படம்
      ரோனி சிந்தனைகள் நம் கையை விட்டு அனைத்தும் விலகிப்போய்விட்ட நிலையில் விரக்தியில் சொல்லும் வார்தைகள்தான் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் என்பது. ஒருவர் உங்களுக்கு உதவுகிறார் என்றால் அவர் நல்லவராக இருக்கவேண்டுமென்பதில்லை. முன்னர் உங்களுக்கு செய்த கெடுதலுக்கு பரிகாரமாக நன்மையைச் செய்யக்கூடும். பணத்திற்கு வாய் உண்டு. காதுகள் கிடையாது. அதனால்தான் காசு இருக்கிறவர்கள், தன்னால் யாராவது எளியோர் செத்தால்கூட கவலையேபடாமல் கேக் வெட்டி சாப்பிடவும், மது அருந்திக் கொண்டாடவும் முடிகிறது. கைது செய்ய காக்கிப்படை வந்தாலும் டீ குடித்தபடி மாட்லாடலாம். கையில் காசுள்ளவரையில் இங்கு எதுவும் தவறே கிடையாது. சோளப்பொரிக்கு வரி என அலறவேண்டியதில்லை. குறைந்த வரி கொண்ட சோளப்பொரியை வாங்கிச் சாப்பிடுங்கள் என நிதி அமைச்சர் விரைவில் கூறி மக்களுக்கு வழிகாட்டக்கூடும். சாப்பிட சோறு இல்லையா, கோதுமையில் ரொட்டி சுட்டு சாப்பிடுங்கள் என அரசு கூறக்கூடிய நாள் அருகில் உள்ளது. மேல், நடு, கீழ் என பல்வேறு வர்க்கங்கள் உள்ளனவே என சிலர் வருத்தப்படுகிறார்கள். பின்னே அவர்களை வைத்துத்தானே அரசுகளும் திட்டங்களைத் தீட்டி ...

அமேசானை நெருக்கடியில் தள்ளும் போலிப்பொருட்கள்!

படம்
              அமேசானில் கிடைக்கும் அனேக டெக் பொருட்கள் போலியானவை! அனைத்துமே போலி என்று கூறமுடியாது. ஆனால், நிறைய பொருட்களை ஒரே நிறம், வேறு எழுத்துகள் என நுட்பமாக பயனர்களை ஏமாற்றி வருகிறார்கள். இதனால், அமேசானே இப்படி செய்தால் எப்படி என மக்கள் வேறுவேறு இ விற்பனை தளங்களுக்கு மாறி வருகிறார்கள். அலி எக்ஸ்பிரஸ், டெமு ஆகிய இ விற்பனை தளங்களிலும் நிறைய போலிகள் உண்டு என ஊடகங்கள் கூறி வருகின்றன. போலிகளை முற்றாக தடுப்பது கடினம். ஆனால், அதிக விலை கொடுத்து மட்டமான பொருட்களை வாங்காமல் இருக்கலாமே? அதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். அமேசானில் ஒரு பொருளை வாங்கி சில நாட்களிலேயே அது போலி என தெரிந்தால், முப்பது நாட்களில் அதை வாங்கிய காசை திரும்ப பெறலாம். இதற்கு ஏ டு இசட் கேரண்டி புரடக்சன் என்ற வலைத்தள பக்கம் உள்ளது. பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களது பொருட்கள் பற்றி புகார் தெரிவிக்க வாய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், பயனர்கள் தங்களுக்கு கிடைத்த போலிப்பொருட்களைப் பற்றி புகார் செய்ய முடியாது. எஸ்டி கார்டுகள் இதில் சான் டிஸ்க் நிறுவனத்தின் போலி...

முயற்சியும், பயிற்சியும் செய்தால் எழுத்தாளராக மாறமுடியும்!

படம்
            ரைட்டிங் தட் கெட் நோட்டிஸ்டு எஸ்டெல் எராஸ்மஸ் இந்த நூல் பொது வாசகர்களுக்கானது அல்ல. வளரும், துறையில் ஏற்கெனவே உள்ள எழுத்தாளர்களுக்கானது. நூலை எழுதியுள்ள எழுத்தாளர் எஸ்டெல், பல்வேறு பதிப்பகங்கள், பெண்கள் பத்திரிகைகள், நாளிதழ்களில் பணியாற்றி பல நூறு கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போது சப்ஸ்டாக், பிளாக், வலைத்தளத்தளங்கள், பாட்காஸ்ட் ஆகியவற்றை நடத்தி வருகிறார். புதிய தலைமுறையினருக்கு எழுதுவது பற்றிய பயிற்சிகளை வழங்கி வருகிறார். நீங்கள் அவருடைய வலைத்தளத்திற்கு சென்று, மின்னஞ்சலுக்கு பதிவு செய்தால் கூட இலவச நூலை தரவிறக்கிக்கொள்ள வழிவகை செய்திருக்கிறார். நூல் தரவிறங்குமா என்று தெரியவில்லை. முடிந்தால் முயலுங்கள். எழுத்தாளர் பயணிதரன் என்பவர் கூட இப்படி மின்னஞ்சலில் இணைபவர்களுக்கு புத்தகப் பரிசு ஒன்றை வழங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால், வலைத்தளத்தில் சேர்ந்தபிறகும் கூட அவரது இலவச பரிசு இன்னும் வந்து சேரவில்லை. புதிய வாசகர்களைப் பிடிக்க இப்படியான தூண்டில்களை போடவேண்டும்போல. நூலில், எஸ்டெல் எப்படி எழுதவேண்டும், எடிட்டர்கள் கூறுவதைப் புரிந்துகொள்வது, நேரத்திற...

நாட்டை நிலைநிறுத்த போராடி வரும் ரிசர்வ் வங்கிக்கு வயது 90!

படம்
  ரிசர்வ் வங்கிக்கு வயது 90 இன்று அனைத்து ஜனநாயக அமைப்புகளும் சீரழிவுப்பாதையில் உள்ளன. காவிக்கட்சி ஆட்கள் உள்ளே புகுந்து எளிய மக்களின் நம்பிக்கையாக உள்ள அனைத்து அமைப்புகளையும் உருக்குலைத்து வருகிறார்கள். அதில் முக்கியமான அமைப்பு, ரிசர்வ் வங்கி.  1935ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட மத்திய வங்கி நிர்வாக அமைப்பு. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்குமான நெறிமுறைகள், நிதி நிர்வாகம், பணநோட்டுகள் மேம்பாடு, பணவீக்கம் கட்டுப்பாடு, வட்டிவிகிதம், வங்கிமுறையை சீரமைப்பது ஆகியவற்றை செய்து வருகிறது. தொண்ணூறாண்டு பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளது ரிசர்வ் வங்கி.  செயல்பாடு ஏப்ரல் ஒன்று என்றாலும் திட்டம் தொடங்கியது, 1935ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி. அப்போதே அரசியலமைப்பு சட்டப்படி உரிமைகள், கடமைகள், வகுத்து தனியாக சுயாட்சியாக செயல்படுவதற்கான சிந்தனைகள் வடிவம் பெற்றுவிட்டன. முதல் ஆளுநராக ஆஸ்பர்ன் ஆர்கெல் என்பவர் பொறுப்பேற்றார். சிடி தேஷ்முக் என்பவர் முதல் இந்திய ஆளுநராக பொறுப்பேற்றார்.  பிரிவினை காலத்தின்போது பாகிஸ்தான், இந்தியா என இருநாடுகளுக்குமான நிதி நிர்வா...