இடுகைகள்

பிரிட்டிஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியின் பேச்சால் ஊக்கம் பெற்று உருவான தற்சார்பு பேனா மற்றும் இங்க்!

படம்
  காந்தி தன் வாழ்நாளில் எழுதியுள்ள கடிதங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? மொத்தம் 31 ஆயிரம் கடிதங்கள் . தினசரி உலக நாடுகளில் இருந்து வெளிவரும் கடிதங்களுக்கு பதில் அளிப்பது காந்தியின் வழக்கம் . அவர் வார நாட்களில் திங்கள்கிழமை மட்டும் மௌனவிரதம் இருப்பது வழக்கம் . ஆனால் வார நாட்களில் எப்போதும் எழுத்துக்கு விடுமுறை கிடையாது . இப்படி எழுதித்தான் நூறு நூல்களுக்கு மேல் காந்தி எழுதிய கட்டுரைகள் , பேச்சுகள் தொகுக்கப்பட்டு உள்ளன . இந்திய சுயராஜ்யம் பற்றி பேசிய காந்தி , இந்தியாவின் உள்நாட்டுத் தேவை போகவே பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்று கூறிவந்தார் . இவரது கருத்தால் ஊக்கம் பெற்றவர்கள் தான் நாட்டின் தனித்துவமான பேனா மற்றும் பேனாவிற்கான மையைத் தயாரித்தனர் . காந்தியின் சுய ராஜ்ய கனவால் உந்தப்பட்டவர்களில் ஒருவர்தான் ராஜ முந்திரியைச் சேர்ந்த கே வி ரத்னம் . இவர் , 1921 ஆம் ஆண்டு காந்தியை சந்தித்து சுயராஜ்ய லட்சியப்படி என்ன பொருளை உருவாக்க வேண்டுமென கேட்டார் . அதற்கு , காந்தி பின் முதல் பேனா வரையில் நிறைய பொருட்களை நாம் தயாரிக்கலாமே என்று சொன்னார் . இதன்படி , 1932 ஆம் ஆண்டு ரத்னம் பென் வொர்க்ஸ்

இந்திய வரலாறு குறிப்பிட்ட நெறிமுறைப்படி எழுதப்பட்டது! - மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர்

படம்
  மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் மிருதுளா முகர்ஜி வரலாற்று ஆய்வாளர்  மிருதுளா 2012-2014 காலகட்டத்தில் ஜேஎன்யூ சமூக அறிவியல் துறையின் தலைவராக செயல்பட்டார்.  2006 -2011 காலகட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகத்தில் தலைவராக செயல்பட்டார்.  குறிப்பிட்ட முறையில் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அப்படியென்றால் இங்கு, தகவல்களை மறைக்கிறார்களா? வரலாற்றை நேரடியாக எழுதுவது என்ற அதிகாரப்பூர்வ செயல்பாடு எங்குமே நடைபெற்றது இல்லை.வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அவர்களாகவே சுயமாக ஆய்வு செய்து எழுதுகிறார்கள். இந்த வகையில் முதல்தரமான ஆய்வாளர்கள் பாடநூல்களை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். காலனி கால ஆட்சியின் சுவடுகளை தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுதுவது முக்கியம்.  பிரிவினையை ஏற்படுத்தாத உண்மையான கருத்துகள் என்றால் அவை ஏன் வன்முறையை ஏற்படுத்தும் இயல்பில் உள்ளன? நீங்கள் கூறும் விதமாக எழுதப்படும் வரலாறு அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றப்படுவதுதான். இவை இயல்பான தேடுதலால் எழுதப்படுவதில்லை.  வலது சாரி வரலாற்று ஆய்வாளர்களை வரலாறு ஆய்வுகளை செய்ய அனுமதிப்பது, நூல்களை அங்கீகரிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழ

புராணம் உண்மையல்ல என்று கூறுவது சிறுமைத்தனமானது! - எழுத்தாளர் அமிஷ் திரிபாதி

படம்
  எழுத்தாளர் அமிஷ் திரிபாதி அமிஷ் திரிபாதி எழுத்தாளர்  லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா - அமிஷ் திரிபாதி அமிஷ் தற்போது டிஸ்கவரி பிளஸ்சில் தி லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா என்ற டாக் - சீரீஸை தொகுத்து வழங்கி வருகிறார்.  வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் மூடப்படப்போகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது. அவர்கள்தான் உங்களது நூல்களை பதிப்பித்தவர்கள் அல்லவா? எனது மனம் உடைந்து போய்விட்டது. வெஸ்ட்லேண்ட் நிறுவனம் மட்டுமே பிறர் பிரசுரிக்க மறுத்த எனது நாவல்களை பிரசுரித்த நிறுவனம். இம்மார்டல் என்ற வரிசை நூல்களை அவர்கள் தான் பிரசுரத்திற்கு ஏற்றனர். வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தின் இயக்குநர் கௌதம் பத்மநாபன் சிறந்த நபர் என இதற்கு எழுதிய எழுத்தாளர்கள் அனைவருமே கூறுவார்கள். அவரது அப்பாதான் இந்த தொழிலை உருவாகி நடத்தினார். அவரது மகனான கௌதம் மனம் எப்படிப்பட்ட வலியை அனுபவித்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.  டாக் சீரிசில் ராமனுக்கு சகோதரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது.. ஆனால் இதுபற்றி மக்கள் பலருக்கும் தெரியாதே? ராமாயணம் என்ற புராணத்திற்கு பல வெர்ஷன்கள் உண்டு. இந்த சீரிசின் நோக்கம் நகரத்திலுள்ள இந்தியர்களுக்கு

உடன்கட்டை ஏறும் கொடூரத்தை ஒழித்த ராஜாராம் மோகன் ராய்!

படம்
  சதி - உடன்கட்டை ஏறும் பழக்கம் ராஜாராம் மோகன்ராய் இந்திய வரலாற்றில் ராஜாராம் அளவுக்கு எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தெரியவில்லை. அண்மையில் தெலுங்கில் வெளியாகி பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்ட ஷியாம் சிங்கா ராய் படம் கூட ராஜாராம் மோகன் ராயின் சீர்திருத்த தன்மையை தழுவி எடுக்கப்பட்டிருந்த படம்தான். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் பிரிட்டிஷாரோடு சேர்ந்து முயன்றார் ராஜா.  கணவர் இறந்தபிறகு மனைவியை நெருப்பிட்டு கணவரின் தகனமேடையில் உயிரோடு எரிப்பதுதான் சதி எனும் பழக்கம். இந்த கொடூரத்தால் நிறைய பெண்கள் வாழ நினைத்தும் வேறுவழியின்றி படுகொலை செய்யப்பட்டனர். அப்போது குழந்தை திருமணமும், சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் சமூகத்தில் புழக்கத்தில் இருந்தது. இதனை ராஜாராம் மாற்ற நினைத்து போராடினார்.  வங்காள மாகாணத்தில் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பிறந்தவர், ராம் மோகன் ராய். இவர், ஹூக்ளியில் உள்ள ரத்னாகர் நகரில் பிறந்தார். இந்து குடும்பத்தில் பிறந்த ராய், சமஸ்கிருதம், பெர்சியன், ஆங்கிலம், அரபி,

மனதிலுள்ள வெறுமையை கடந்து வருவது கடினமாக இருந்தது! - சூஜித் சிர்கார், இந்திப்பட இயக்குநர்

படம்
  சூஜித் சர்க்கார்  சூஜித் சர்க்கார்  இந்தி திரைப்பட இயக்குநர்.  இருபது ஆண்டுகளாக மனதில் நினைத்து வைத்திருந்த படத்தை உருவாக்கி வெளியிட்டு விட்டார். படத்தின் பெயர் சர்தார் உத்தம் சிங். சிலர் பாராட்டியும், சிலர் திட்டியும் விமர்சனங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது சர்க்கார் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவரிடம் பேசி தெரிந்துகொள்வோம்.  படம் நிறைவடைந்த பிறகு உங்கள் மனநிலை எப்படி இருந்தது? இருபது ஆண்டுகளாக இந்த படத்தை உருவாக்க வேண்டுமென நினைத்திருந்தேன். இப்போது அதனை உருவாக்கியபிறகு மனதில் வெறுமையாக இருக்கிறது. படத்தை உருவாக்குவது பட்ஜெட் என்றளவில் அல்லாமல் அதன் கதையே பிரமாண்டமானது. அதனால் இதனை செய்வது தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. தயாரிப்பாளர் ரோனியிடம் எப்போதும் என்னுடைய பட ஐடியாக்களை பற்றி பேசிக்கொண்டிருப்பேன். ஆனால் இந்த படம் முடிந்தபிறகு எதையும் பேச முடியவில்லை.  எப்படி வெறுமையைக் கடந்து வந்தீர்கள்? நீங்கள் எப்போதும் உங்களை கவனித்து வளர்த்துக்கொள்வது முக்கியம். இந்த வெறுமை என்பது மிக முக்கியமான இடம். இதில்தான் பல்வேறு மக்களும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.  இந்த நேரத்தில்

முரண்டு பிடித்த மாநிலங்களை இணைந்து இந்திய ஒன்றியமாக்கிய வல்லபாய் படேல்! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 இந்தியா பிரிட்டிஷ் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது, 500 மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்த மாநிலங்கள் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டிய தேவையிருந்தது. மாநிலங்களுக்கு முன்னர் இரண்டு வாய்ப்புகள் இருந்தது. அவை, இந்தியா மற்றும் பாகிஸ்தான்  என்று இரு நாடுகள். மாநிலங்கள் யாருடன் சேர்கிறார்கள் என்பது அவர்களது விருப்பம். உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் தனது சாதுரியத்தால் பெரும்பாலான மாநிலங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தார். ஆனாலும் சிக்கல் வந்த மாநிலங்கள் இருந்தன அவற்றைப் பற்றி பார்ப்போம்.  ஹைதராபாத் இந்தியா, சுதந்திரம் பெற்றபிறகு ஹைதராபாத் மாநிலம் அதனுடன் இணைய மறுத்தது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்தபோது போலவே இறையாண்மை கொண்ட மாநிலமாக ஹைதராபாத் இருக்கவேண்டுமென அதன் நிஜாம் நினைத்தார். ஹைதராபாத் நிலப்பரப்பு ரீதியாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவிற்காக வாசல் என்பதால் இந்திய அரசு இதனை முக்கியமான மாநிலமாக பார்த்தது.  இந்திய அரசு மாநிலங்களுக்க சட்டரீதியான ஆவணங்களை வழங்கி அதில் கையெழுத்து போட்டு இந்திய ஒன்றியத்துடன் சேர்த்து வந்தது. ஹைதராபாத்

நவகாளி யாத்திரை! - கலவரத்தை நிறுத்திய காந்தியின் பயணம்

படம்
  நவகாளி யாத்திரை! - கலவரத்தை நிறுத்திய காந்தியின் பயணம் ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரமடைந்தது. அதற்கு முன்னதாகவே இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை, சமாளிக்க முடியாத ஒன்றாக மாறத் தொடங்கியிருந்தது. இதன்விளைவாக, இந்தியா சுதந்திரமடைந்த நாளின்போது கூட காந்தி கலவரங்களைத் தடுப்பதற்கான பணியில் இருந்தார்.   1946 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் கட்சி, தனிநாடு கோரிக்கைக்காக தொடர்ச்சியாகப் போராடி வந்தது. இந்நோக்கத்தை அரசுக்கு வலியுறுத்த பேரணி நடத்த முடிவானது.  இறுதியாக, ஆகஸ்ட் 16 ஆம் தேதியை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தது முஸ்லீம் லீக் கட்சி.  முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களில் நடந்த கட்சிப் பேரணி, திடீரென வன்முறைப் பாதைக்குத் திரும்பியது. இதன் விளைவாக, கோல்கட்டாவில் வாழ்ந்த இந்துக்களின் கடைகளும், வீடுகளும் கொள்ளையிடப்பட்டன. இதற்கடுத்த நாள் இந்து அமைப்புகள், முஸ்லீம்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள், இக்கலவரத்தில் பலியானார்கள்.  கலவரத்தை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி என வழிதெரியாமல் ஆங்கில அரசும் திகைத்து நின

ஆங்கிலம் பொதுமொழியானது எப்படி?

படம்
ஆங்கிலம் என்பது பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக உள்ளது. லத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து பெறப்பட்ட வார்த்தைகள் மூலம் ஆங்கிலம் வலுப்பெற்றுள்ளது. ஜெர்மனியிலிருந்து வந்த பழங்குடியான ஆங்கெலஸ் என்பவரின் பெயரிலிருந்துதான் இங்கிலீஷ் என்ற வார்த்தை உருவானது. ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக கொண்டிராத நாடுகள் இவை. Anguilla Antigua and Barbuda Australia Bahamas Barbados Belize Bermuda Botswana The British Virgin Islands Cameroon Canada (except Quebec) Cayman Islands Dominica England Fiji Gambia Ghana Gibraltar Grenada Guyana Ireland, Northern Ireland, Republic of Jamaica Kenya Lesotho Liberia Malawi Malta Mauritius Montserrat Namibia New Zeland Nigeria Papua New Guinea St. Kitts and Nevis St. Lucia St. Vincent and the Grenadines Scotland Seychelles Sierra Leone Singapore Solomon Islands South Africa Swaziland Tanzania Tonga Trinidad and Tobago The Turks and Caicos Islands Uganda United Kingdom Vanuatu Wales Zambia Zimbabwe