இடுகைகள்

வஜினா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முடிஞ்சா என்னைப் புடி என சவால் விட்ட ஜாக் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  முடிந்தால் என்னைப் பிடி இப்போது |ஜாக்கின் கதைக்கு வருவோம். மேற்சொன்ன கதைகள் எல்லாம் காவல்துறையினர் யாரேனும் புகார் மூலம் கண்டுபிடித்தவைதான். ஆனால் ஜாக்கைப் பொறுத்தவரை அவர் கொலை சம்பவங்களை சுவாரசியமாக செய்ததை உலகத்திலுள்ள 300 பத்திரிகைகள் பிரசுரித்தன. உண்மையில் இப்படி உலகம் முழுக்க தன்னைப் பற்றி விஷயங்கள் தெரியவேண்டுமென ஜாக் நினைத்திருக்கலாம். லண்டன் நகரத்தின் கிழக்கு புறத்தில் உள்ளது ஒயின்சேப்பல் பகுதி. இங்கு வெள்ளிக்கிழமை ஆக.31, 1888 அதிகாலை ஒரு மணி இருக்கலாம். பாலி நிக்கோலஸ் என்ற விலைமாதுப் பெண் ஜாக்கால் கொலை செய்யப்பட்டார். பாலியின் தொண்டை அறுக்கப்பட்டிருந்தது. அணிந்திருந்த ஸ்கர்ட் கலைந்திருக்க, கால்கள் விரிக்கப்பட்டிருந்தன. வயிறு கத்தியால் கிழிக்கப்பட்டு இருந்தது. பெண் குறியில் கீறல்கள் இருந்தன. விலைமாது என்பதால் கொலை பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. அடுத்த கொலை ஒரு வாரத்திற்கு பிறகு காலையில் நடைபெற்றது. கொலையானவர் பெயர், அன்னி சாப்மேன். இவரது வயிறு கத்தியால் அறுக்கப்பட்டு குடல் இடது தோள் மேல் விழுந்து கிடந்தது. வயிறு, தலை ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. பிறப்புறுப்பில

பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்ய தயங்குகிறார்கள்! - ரேச்சல் இ கிராஸ்

படம்
  ரேச்சல் இ கிராஸ்  பத்திரிகையாளர் எழுத்தாளர் ரேச்சல், ஸ்மித்சோனியன் வலைத்தளத்தில் அறிவியல் பகுதி ஆசிரியராக பணியாற்றுகிறார். அண்மையில் இவருக்கு பிறப்பு உறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட்டது. அப்போதிலிருந்து அவருக்கு தன்னுடைய உடலை முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுபற்றி வஜினா அப்ஸ்குரா - அனாடாமிகல் வாயேஜ் என்ற நூலை எழுதியுள்ளார். பெண் உடல் பற்றிய பல்வேறு தவறான கருத்துகளுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்.  இப்படி ஒரு நூலை எழுத உங்களைத் தூண்டியது எது? அறிவியல் வரலாறு தொடர்பான நான் பல்வேறு விஷயங்களை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு சில விஷயங்கள் தெரிய வந்தது. அறிவியல் ஆராய்ச்சியைப் பொறுத்தவரை பெண்கள் சில வரம்புகளுக்குள்தான் இருந்திருக்கின்றனர். அதற்குமேல் அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் பெண்களின் பிறப்புறுப்பு, கருப்பை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளும் எனக்குள் உருவானது. பெண்களின் செயல்பாட்டிற்கும் அவர்களின் உடல் உறுப்புகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது எனக்கு தெரிய வந்தது. இதுபற்றிய கேள்விகளை பெண்களிடம் கேட்கலாம். ஆனால் அவர்கள் அதுபோ