இடுகைகள்

சிறப்பு ஆயுதப்படை சட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறப்பு ஆயுதப்படை சட்டம் - நடைமுறைக்கு வந்த தகவல்கள் அறிவோம்

படம்
  சிறப்பு ஆயுதப்படை சட்டம் 1958ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரிட்டிஷ் கால சிறப்பு சலுகைகள் கொண்ட ஆயுதப்படை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாகலாந்தில் ஏற்பட்ட ராணுவ சிக்கல்களை சமாளிக்க நாடாளுமன்றம் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை உருவாகி மக்களவையில் அனுமதி பெற்றது. நான்கு மாதங்களில் அதனை அமல்படுத்தியது.  எப்படி அமல்படுத்துகிறார்கள்? மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகமாக இருந்தால், அதை சமாளிக்க சிறப்பு ஆயுதப்படை சட்டம் உதவுகிறது. இதற்காக அதனை எப்படி குறிப்பிடுகிறார்கள் தெரியுமா? டிஸ்டர்ப்டு ஏரியாஸ் என்று. இந்திய அரசின் உள்துறை அமைச்சர்தான் ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்துகிறார். சில சமயங்களில் இதுபற்றிய முடிவை மாநில அரசும் எடுக்கலாம்.  என்ன அதிகாரங்கள் ராணுவத்தினருக்கு கிடைக்கும்? மக்களில் யாராவது ஆயுதங்களை கையில் எடுத்தால், சட்டத்தை மீறினால் உடனே துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட ராணுவத்தினருக்கு அனுமதி உண்டு. ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூடியிருந்தால் அதை கலைக்க ராணுவத்தினருக்கு அதிகாரம் உண்டு. யாராவது மேல் சந்தேகம் இருந்தால் உடனே அவர்