இடுகைகள்

படக்கதை! - ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சேலஞ்ச் சின்னத்தம்பிக்கு இரைச்சல் ஆகாது!

படம்
ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் போல படக்கதை ஒன்று எழுதிப்பார்க்க ஆசை. தவறும் தடுமாற்றமும் இருக்கலாம். ஜாலியாக முயற்சித்தோம். ஒண்டிப்பூர் சின்னத்தம்பிக்கு சவுண்டே ஆகாது . சாலையில் மாட்டை பிடித்து செல்லும்போது அடித்த ஹார்ன்களால் சின்னத்தம்பி உச்சிமுடிகூட எழுந்துநின்றது . அந்த கேப்பில் மாடுகள் மிரண்டு ஓடி வீடு சேர்ந்தன . மெல்ல கார் , மாடு , காக்கை , தவளை என அனைத்து ஒலிகளும் அலர்ஜியாக நள்ளிரவிலும் தூக்கம் வராமல் தவித்தார் சின்னத்தம்பி .   குழந்தைகளின் கிரிக்கெட் , குக்கரின் விசில் , சேவலின் கொக்கரிப்பு ஒலிகளை நிறுத்தமுடியுமா ? காதைப்பொத்திக்கொண்டு அமைதிதேடி எங்கெங்கோ ஓடினார் சின்னத்தம்பி . நகருக்கு அமைதி தேடி ஓடிய சின்னத்தம்பி , இளைஞர் ஹெட்போனில் பாடல்கேட்டபடி ஹார்ன் ஒலிகளுக்கு கவலைப்படாமல் சிக்னல்களை கடப்பதைப் பார்த்து யுரேகா என்று கத்தினார் . தனக்கும் மாடுகளுக்குமாக இரண்டு டஜன் ஹெட்போன்களை ஆஃபரில் வாங்கியவர் , இரைச்சலை நாசூக்காக ஒதுக்கி வீடு திரும்பினார் . அதன்பின் தூங்கும்போதும் ஏன் குளிக்கும்போதும் கூட ஹெட்போனை கழற்றாத சின