இடுகைகள்

நைஜீரியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேகமாக பரவி வரும் மங்கிஃபாக்ஸ் தொற்றுநோய்!

படம்
  சின்னம்மை ஏற்படுத்தும் வைரஸை ஒத்துள்ள வைரஸ்தான், மங்கிஃபாக்ஸை ஏற்படுத்துகிறது. இதன் பாதிப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள குரங்குகளில் தொடங்கியது. கடந்த 7 ஆம் தேதி இங்கிலாந்து அரசு மங்கிஃபாக்ஸ் நோய் பாதிப்பை முதன்முறையாக அறிவித்தது. அண்மையல் அங்கு நைஜீரியாவிற்கு சென்று வந்த பயணி, மங்கி ஃபாக்ஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் இங்கிலாந்திற்கு வந்ததும் தோலில் அலர்ஜி போன்ற பாதிப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார். இவரிடமிருந்து இன்னும் எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.  2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸ் தாக்குதல் அறியப்பட்டது. அப்போதும் நைஜீரியா சென்று வந்த பயணிகளால் தான் பாதிப்பு ஏற்பட்டது.  மங்கி ஃபாக்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவீதம் 1 முதல் 10 சதவீதம்தான். பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் இறந்துவிடுவார்கள். அதுதான் இதில் ஆபத்தான பயப்படும் அம்சம்.  எப்படி பரவுகிறது? நோய் பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை சரியாக சமைக்காமல் சாப்பிடுவதால். இன்னொன்று, நோய் பாதிக

தொழில்நுட்பம் மூலம் பாகுபாட்டை குறைக்க முயலும் பெண்மணி! - அஜாயி

படம்
  அபிசோயே அஜாயி அகின்ஃபோலாரின்  சமூக செயல்பாட்டாளர் இவரது பெயரை சரியாக உச்சரிக்க சொல்லி போட்டியே நடத்தலாம். கட்டுரையில் அஜாயி என்று வைத்துக்கொள்வோம்.  1985ஆம் ஆண்டு  மே 19 அன்று நைஜீரியாவின் அகுரே என்ற நகரில் பிறந்தார். லாகோஸ் பல்கலைக்கழகம், தகவல் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் படித்தார். வணிக நிர்வாகத்தில் பிஎஸ்சி பட்டதாரி.  பியர்ல்ஸ் ஆப்பிரிக்கா யூத் பவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பின் தலைவர். ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவுக்கு தோள் கொடுக்கும் அமைப்பு.  இந்த அமைப்பு வழியாக பெண்களுக்கு வருமானத்திற்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார் அஜாயி. இதன்மூலம் பெண்கள் தனியாக இயங்க முடியும். இந்த வகையில் நானூறு பெண்களுக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளார்.  நைஜீரியாவில் வாழும் ஏழை, பணக்காரர்களுக்கான இடைவெளி அதிகம். அதைக் குறைக்க அஜாயின் அமைப்பு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.  பெண்கள் என்பவர்கள் உலகிலுள்ள புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்கள் மட்டுமல்ல. அதனை அவர்கள் உருவாக்குவார்கள் என்று அஜாயி கூறுகிறார்.  2018ஆம் ஆண்டு சிஎன்என் தொலைக்காட்சியில் நாயகர்கள் வரிசையில் அஜ

இரண்டு அடி முன்னே ஒரு அடி பின்னாக - பியி பண்டேலா

படம்
நேர்காணல் பியி பண்டேலா திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் நைஜீரியாவில் எப்படி இத்தனை எழுத்தாளர்கள், இயக்குநர்கள் உருவாகி வருகிறார்கள்? நாற்பது ஆண்டுகளாக நாங்கள் இங்கு கலையை பாதுகாக்க போராடி வருகிறோம். நோலிவுட் 1980ஆம் ஆண்டில்தான் உருவானது. மாநில அரசின் டிவி கூட தடைசெய்யப்பட்டுவிட்ட சூழ்நிலை. இதனால் கலையை நாங்கள் உலகிற்கு சொல்லும் அவசிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இசைக்கலைஞர்கள் ஆப்பிரிக்க இசை மற்றும் ரகே, ஹிப்ஹாப் ஆகியவற்றுடன் வெளியே முகம் காட்டினார்கள். எழுத்தாளர்கள் தங்களின் சிறந்த படைப்புடன் வெளியே வந்தனர். அப்படி இலக்கியம் எழுதினால் கூட வறுமை ஆபாச படம் போல எழுதி பரிசு வாங்குகிறீர்கள் என்று குற்றச்சாட்டு உள்ளதே? மேற்சொன்ன விஷயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் எழுதுவதை நாங்களே வெளியிடுவதில்லை. எடிட்டர் அதனை திருத்தி செப்பனிட்டு தனக்கு தேவையானவற்றை கண்டுபிடித்து அதை மாற்றி வெளியிடுகிறார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்வதால்தான் இலக்கியப் பரிசுகளை எங்கள் நாட்டினர் பெறுகின்றனர். சிமண்டா அடிச்சி என்ற சிறுகதை எழுத்தாளர் இருந்தார். அவர் ஆப்பிரிக்க வாழ்வை எழுதவில்லை. விபச்சார

நைஜீரியாவில் பெருகும் திடக்கழிவுகள்! - பெட் பாட்டில் அபாயம்!

படம்
giphy பிளாஸ்டிக் பயங்கரம்! உலகளவில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின், லாகோஸில் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நகரங்களில் ஒன்றான லாகோஸில், திடக்கழிவுகள் அதிகரித்து வருகின்றன. இதனை உலகளவில் ஒப்பிடும்போது, குறைவு (2016படி) என்றாலும் ஆப்பிரிக்க நகரங்களில் மோசமான கட்டமைப்பு காரணமாக கழிவுத் தேக்கத்தில் முன்னிலை பெறுகிறது. இரண்டு கோடிப் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்டது லாகோஸ் நகரம். நைஜீரியாவில் பயன்படுத்தப்படும் 1,50,000 மெட்ரிக் டன்கள் பிளாஸ்டிக் பொருட்களில் பாதியளவு லாகோஸ் நகரில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஐந்தில் நான்கு சதவீதப் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதனால் சிறியளவிலான மழைவெள்ளத்திற்கே, நகரம் முழுக்க தத்தளிக்க தொடங்கிவிடுகிறது. பயன்படுத்திவிட்டு வீசியெறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சாக்கடைகளை அடைத்துக்கொள்வதே இதற்கு முக்கியக் காரணம். அங்குள்ள முன்னணி உணவுத்தயாரிப்பு, குளிர்பான நிறுவனங்களும் பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். இத்தனைக்கும் கடந்த ஆண்டு நைஜீரியா பயன்படுத்திய ப

பத்திரிகையாளர் மீது ஒடுக்குமுறை! - நைஜீரியாவில் நடக்கும் அநீதி

படம்
நைஜீரியாவைச்சேர்ந்த பத்திரிகையாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஓமோயெலே சோவோரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நைஜீரியத் தேர்தலிலும் போட்டியாளராக இருந்தார். ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாடு தழுவிய ரிவல்யூசன் நவ் என்ற போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். உடனே அரசின் மாநில சேவைகள் துனை சோவோரேவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டும் சிறையில் இருந்து விடுவிக்க அரசுக்கு மனம் வரவில்லை. அரசு இப்போராட்ட அழைப்பை தன்னைக் கவிழ்க்கும் முயற்சியாக பார்க்கிறது. ஆகஸ்ட் எட்டாம் தேதி, சோவோரோவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 45 நாட்கள் அனுமதி கொடுத்தது. உடனே வெகுண்ட சுதந்திர ஊடகங்கள் அமைப்பு, ஐ.நா அமைப்பிடம் சோவோரோவை விடுவிக்க மனு கொடுத்தது. அவரைக் கைது செய்தது மனித உரிமை மீறல் என்று இந்த அமைப்புகள் புகார் தெரிவித்தன. அரசு ஒருவரைக் கட்டம் கட்டிவிட்டால் சும்மா விடுமா? 45 நாட்கள் கழிந்தபின்னர் அவரை விடுவிக்க வேண்டுமே? உடனே இணைய மோசடி, பண மோசடி வழக்குகளை சோவோரே மீது பதிந்தது. சோவோரே, சகாரா ரிப்போர்டர்ஸ் என்ற இணைய பத்திரிகையை 2006 முதல் நடத்தி வந்தா