இடுகைகள்

பிரநிதித்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை உயர்த்தும் கட்சிகள் எவை?

படம்
indianexpress பணிகளைச் செய்வதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள்.  தேர்தலில் கட்சிகள் பெண்களை உயர்த்துவது பற்றி வாய்கிழிய பேசினாலும், செயல்பாடு என வரும்போது அந்த வாக்குறுதியை மிக கவனமாக மறந்துவிடுவார்கள். 33 சதவீத இட ஒதுக்கீடும் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. அதெல்லாம் விடுங்கள். விரைவில் தேர்தல் வரப்போகிறது அதில் பெண்களுக்கான இடம் உண்டா? இதில் முதலிடத்தில் நிற்பது மேற்கு வங்கத்தின் தீதிதான். மம்தா பானர்ஜி, தன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளின் சீட்டில் 40 சதவீதத்தை பெண்களுக்காக அளித்துவிட்டார். அடுத்து ஒடிசாவின் பிஜூ பட்நாயக். தேர்தலில் மத்திய அரசு அளிக்கத்தவறிய 33 சதவீத இடங்களை பெண்களுக்கு அளித்து கௌரவம் சேர்த்திருக்கிறார்.  பெண்களுக்கு இடமில்லை! 7 தேசியக்கட்சிகள், 51 மாநிலக்கட்சிகள் உள்ள நாட்டில் பெண்களுக்கு இது எப்படி போதுமானதாக அமையும் சொல்லுங்கள்? இது குறித்த சர்வே ஒன்றை செய்தபோது 1996 - 2014 வரையிலான தேர்தல்களில் பெண்களுக்கான இடங்கள் பத்து சதவீதத்தைக்கூட தாண்டவில்லை. உள்ளூர் தேர்தல்களில் மட்டும் விதிவிலக்காக பத்து சதவீதத்தை பெண்கள் தாண்டியுள்ளனர். இதில் காங்