இடுகைகள்

பிரபாஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைவிதியை மாற்றி எழுத முடியுமா? - காதலைக் காப்பாற்ற போராடும் கைரேகை நிபுணன்- ராதேஷ்யாம்

படம்
  ராதே ஷ்யாம்  ராதாகிருஷ்ண குமார் மனோஜ் பரம ஹம்சா இசை - ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி - தமன் எஸ்  புகழ்பெற்ற கைரேகை வல்லுநரான விக்ரம் ஆதித்யாவிற்கு, சொந்த வாழ்க்கையில் நடக்கும் காதலும் அதைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா என்பதும்தான் கதை.  படம் எழுபது, எண்பதுகளில் நடக்கும் கதை. ராதே ஸ்யாம் என்பதற்கு கிருஷ்ணன் அல்லது ராதா கிருஷ்ணன் என பொருள் கொள்ளலாம். ஏன் இயக்குநர் தனது பெயரைக் கூட முதல் படத்திற்கு வைத்துக்கொண்டார் என நினைக்கலாம். வேத பாடசாலையில் உள்ள குருவான சத்யராஜ், பார்வையற்றவர். கைரேகையை தொட்டுணர்ந்து சொல்லும் தீர்க்கமான ஆற்றலுடையவர். இவரது சீடர் தான் விக்ரம் ஆதித்யா. இவருக்கும் இஸ்ரோ விஞ்ஞானியான தலைவாசல் விஜய்க்கும் நடக்கும் விவாதமே படத்தின் போக்கை சொல்லிவிடுகிறது. இதில் சத்யராஜ் ஜோதிட சாஸ்திரத்தை நம்பினாலும், மனிதனின் சிந்திக்கும் அறிவு செய்யும் மாயத்தை உணர்ந்தே இருக்கிறார். இதில் இவரது கிரேட் சிஷ்யரான விக்ரம் ஆதித்யா, சற்று மாறுபட்டு விதியை கணித்தால் மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்.  இதனால் நிறைய பிரபலங்களிடம் அப்படியே உண்மையை சொல்லி வம்பு தும்புகளை சம்பாதித்துக்கொள்கிறார்

உயிர்ப்பில்லாத காட்சிகள் - சிஜி வலிமையில் சாஹோ

படம்
சாஹோ இயக்கம் சுஜித் ஒளிப்பதிவு - மதி இசை - பாடல்கள் Songs: Tanishk Bagchi Guru Randhawa Badshah Shankar–Ehsaan–Loy பின்னணி - ஜிப்ரான் கார்ப்பரேட் அடிதடிகள்தான். ராய் எனும் நிறுவனத்தின் தலைவர் கொல்லப்படுகிறார். அந்த சீட்டைப் பிடிக்க குழு உறுப்பினர்களுக்குள் அடிதடி. யார் ஜெயித்தது என்பதுதான் கதை. படம் திரைக்கு வரும்போதே லார்க்கோ வின்ச் காமிக்ஸை படுமோசமாக எடுத்திருக்கிறார்கள் என்று பேச்சு பிரெஞ்சு  இயக்குநர் மூலமே கிளம்பிவிட்டது. எனவே கதை பற்றிய ரகசியத்தை படம் காப்பாற்ற முடியவில்லை. சரி எடுத்தவரை என்னதான் செய்திருக்கிறார்கள். ஆஹா.... மேக்கிங். அப்போதுதான் தூங்கி எழுந்தது போலவே இருக்கும் பிரபாசை வைத்து ஆக்சன் படம் பண்ண நினைத்த சுஜித்தின் தைரியம். கூடவே, மேக்கிங். திகுதிகு வென காட்சிகள் ஓடுகின்றன. பாடல்கள் தனித்துவமாக தனியாக கேட்டால் நன்றாக இருக்கின்றன. பின்னணியில் பிரமாதமாக உழைத்திருக்கிறார் ஜிப்ரான். செட், விசுவல் எஃபக்ட்ஸ், சிஜி என அபார உழைப்பு. பொருட்செலவு என்பதை விடுங்கள். அந்த உழைப்புதான் வியக்க வைக்கிறது. முதல் பகுதி ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது. இரண்டாம்