இடுகைகள்

சைவ உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய மேப்பில் அட்டகாசமான இன்போகிராபிக் தகவல்கள்! - ஆச்சரியப்படுத்தும் இளைஞர்!

படம்
  ஆல் இன் ஆல் மேப்- கேள்விகள் அனைத்துக்கும் விடை உண்டு! இந்தியாவில் எத்தனை பேர் சைவ உணவு சாப்பிடுகிறார்கள், எத்தனை கேஎப்சி உணவுக்கடைகள் உள்ளன,  ஒருவரை அண்ணா என இந்தியில் அழைப்பவர்கள் எத்தனை பேர் என பல்வேறு கேள்விகளை நமக்கு கேட்கத் தோன்றும். ஆனால் இதற்கான விடைகளை மேப் வடிவில் கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்தியாவில் சைவம் சாப்பிடுபவர்கள் அதிகமாக இருப்பது போல பிம்பம் உருவாக்கப்பட்டாலும், அசைவம் சாப்பிடுபவர்களின் சதவீதம் 80ஆக உள்ளது. பொதுவாக மாநில மக்களின் சாப்பாட்டு பழக்கத்தை பார்த்தால், பஞ்சாபியர்கள் இறைச்சியை அதிகம் சாப்பிடுகிறார்கள் என்பதும், தென்னிந்தியர்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள் என்பதும் தெரிய வரும். இதை மேப்பாக பார்க்க என்ன செய்வது? இந்தியா டுடே இன்போகிராபிக்ஸ் போடுவதற்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. மென்பொருள் வல்லுநரான அஸ்ரிஸ் சௌத்ரியிடம் சொன்னால் போதும். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்கள், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என தனித்தனியாக பிரித்து காட்டுகிறார். இதற்கு மத்திய அரசு வெளியிட்ட 2014ஆம் ஆண்டு அறிக்கைகளையும் படங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார