பிழைத்திருப்போம் நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து
பிழைத்திருப்போம் நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து இந்திய பேரரசரின் மதக்கலவர ஆட்சியில் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு என்பதே முக்கியமான சுலோகம். அவர் சொல்ல மறந்துவிட்டார். இருந்தாலும் மக்கள் தாமாகவே புரிந்துகொண்டுவிட்டார்கள். சட்டவிரோதமாக குளிரில் உறைந்து செத்தாலும் தாய் நாட்டில் வாழமுடியாது என மக்களுக்கு தெரிந்துவிட்டது. அதுவும் பேரரசரின் பூர்விக ஆட்களே ஆள விட்டுவிடுடா சாமி என தப்பி ஓடிவருகிறார்கள். ஓகே கெட் டு தி பிசினஸ். தப்பி ஓடுவது சரி. அதை எப்படி திட்டமிடுவது? திட்டமிட்டாலும் கூட ஒருமுறை சாலைக்கு வந்துவிட்டால் அப்புறம் நடப்பது எல்லாம் நம் கையில் இருக்காது. அப்படியே வரும் சூழ்நிலைகளை சந்தித்து பயணிக்க வேண்டியதுதான். இருந்தாலும் சில முன்னெச்சரிக்கைகளைப் பார்ப்போம். பேரிடர், மதக்கலவரம், போர் என எது வந்தாலும் சரி, டிவி சேனல்களைப் பார்த்து தேசப்பற்று எனும் உச்சத்தை அடைவதை கட்டுப்படுத்தினால்தான் உயிர்பிழைப்பது சாத்தியம். தப்பிச்செல்லும் சாத்தியம் கொண்ட சாலைகளை அடையாளம் கண்டு அதிகம் பயன்படுத்தாத சாலைகளை தேர்வு செய்து தப்பிக்க முயலவேண்டும். எப்போது...