இடுகைகள்

காவ்யா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணன் கள்ளக்கடத்தல் செய்ய, காவல்துறை அதிகாரியான தம்பி அதைத் தடுக்க... ரன்வே - திலீப், காவ்யா, இந்திரஜித்

படம்
  ரன் வே திலீப், இந்திரஜித் சுகுமாரன், காவ்யா மாதவன் தம்பி காவல்துறை அதிகாரி, அண்ணன் மதுபான பாட்டில்களைக் கடத்தும் குற்றவாளி   என இருந்தால் அவர்களது சொந்த வாழ்க்கை, தொழில்வாழ்க்கை என்னவாகும்? இருவருக்கும் எதிராக இருக்கும் தொழில் எதிரிகள் ஒன்று சேர்ந்தால் இறுதியாக வெல்வது உறவா? கடமையா என்பதே திரைப்படத்தின் கதை. முதல் காட்சியில் காவ்யா மாதவன் அவரது தந்தையுடன் வாடகைக்காக வீடு வருகிறார். அந்த வீட்டின் மூத்த பிள்ளை உண்ணி, துபாயில் வேலை பார்க்கிறார். அவர்தான் வீட்டு செலவுகளைப் பார்த்துக்கொள்கிறார். இளைய பிள்ளை பாலு காவல்துறைக்கான தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார். தங்கை பள்ளியில் படிக்கிறாள். இவர்கள் குடும்பத்திற்கு தொழில் செய்த காரணத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடன் உள்ளது. அதைக்கட்டுவதற்குத்தான் உண்ணி துபாய் சென்றிருக்கிறான் என அவன் அம்மா கூறுகிறாள். இதை வாடகைக்கு வந்தவர்களுக்கும் கதையாக கூறுகிறார்கள். படத்தில் காவ்யா மாதவன் பாத்திரம் பாடல்களுக்கு மட்டும் பயன்படுகிறது. மற்றபடி கதையில் பெரிய உதவி ஏதும் கிடையாது. உண்ணி என்ற பெயரை நினைத்துப் பார்த்து அவர் பாட்டுக்கு மனதில் கற்பனை