இடுகைகள்

ஆப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவர் சாப்பிட்ட மாட்டிறைச்சியைக் கண்டுபிடித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பும் ஆப்!

படம்
24 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்ட மாட்டிறைச்சி!- சஞ்சார் பாட்டி ஆப் பயங்கரம்! அண்மையில், ஒன்றிய அரசு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள கண்காணிப்பு ஆப்களைப் போல ஒன்றை வடிவமைத்தது. தொடக்கத்தில் இந்த ஆப், சிம்களை தவறாக பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பது. அதை முடக்குவது என்றே வலைத்தளமாக இயங்கியது. பிறகு, திடீரென போன்களுக்கு ஆப்பை தரவிறக்கி பதியுங்கள் என மிரட்டும் தொனியில் குறுஞ்செய்திகள் வரத் தொடங்கின. இறுதியாக, தகவல்தொடர்புதுறை அமைச்சர் புதிதாக தயாரிக்கும் போன்களிலும், பழைய போன்களிலும் கண்காணிப்பு ஆப் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டார். ஆப்பிள் நிறுவனம், முடியாது என்ற ஒற்றைப் பதிலை சொல்லிவிட்டது. மற்றவர்கள் அமைதி காத்தனர். அமலாக்கத்துறை பயமாக இருக்கலாம். இணையத்தில், சர்வாதிகார நாடாக மாறிவிட்டதா இந்தியா என கேள்வி எழும்ப அமைச்சர் எப்போதும் போல ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தைப் பின்பற்றி மன்னிப்பு கோரி, உத்தரவை திரும்ப பெற்றுள்ளார். காலில் விழுவது, மன்னிப்பு கோருவது ஆர்எஸ்எஸ் ஆட்களுக்கு புதிதல்ல. ஆனால், அவர்களிடம் பொறுக்கித் தின்பவர்களுக்கு இன்னும் அந்த சடங்குகள் புரிபடவில்லை. சரி, இப்போது அந்த ஆப்...

ஆப் வழியாக மக்களை, கட்சி உறுப்பினர்களை கண்காணிக்கும் ஷி ச்சின்பிங்!

படம்
  ஆப் வழியாக கண்காணிப்பு சீனாவில் ஷி ச்சின்பிங் செல்வாக்கு என்பது தானாக வளர்ந்தது என்று கூறுவதை விட அதை அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கில் வளர்த்தெடுத்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும். ஏற்கெனவே ஷி யின் உரைகளை நூலாக வெளியிட்டு கட்சி பள்ளிகளில் பாடமாக வைத்துவிட்டனர். அடுத்தகட்டமாக, ஆப் ஒன்றை உருவாக்கி வெளியிட்டனர். மிகப்பெரிய அதிகாரத்திடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் ஆப்பின் பெயர். ஷி ச்சின்பிங் சிந்தனைகளிலிருந்து அரசு அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலரும் கற்றுக்கொள்ளலாம். இதை கட்சியின் பிரச்சார நிறுவனம் கண்காணிக்கும். 2019ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டுகிறது. பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40-60 சதவீதமாக உள்ளது. இந்த ஆப்பை பொதுவுடைமைக் கட்சிக்காக தயாரித்து கொடுத்தது அலிபாபா குழுமம். குழந்தைகளின் விளையாட்டுப் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை ஷி ச்சின்பிங் எண்ணங்கள் வண்ணங்களைப் பற்றி ஒருவர் படிக்காமல் தேர்வு எழுதாமல் வெளியே வரமுடியாது. கொரோனா காலத்தில் ஷியின் ஆப் பயன்பாடு, அதிகரித்தது. ...

விமானப் பயணம் இனி ஈஸி - மூன்று ஆப்கள் - கிஸ்மோ குருஜி

படம்
           பிளைட்டி flighty இலவசம் ஐஓஎஸ்சில் மட்டும் நீங்கள், உங்கள் நண்பர், தொலைதூர உறவினர் என யார் விமானத்தில் சென்றாலும் விமான எண்ணை உள்ளீடு செய்தால் போதும். அதைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். விமானம் தாமதமாகிறதா, பயணம் நிறுத்தப்பட்டுவிட்டதா, தட்பவெப்பநிலை விவரங்களை ஆப் வழியாக அறியலாம். பொதுவாக விமான தாமதம் பற்றி அறிய பயன்படுகிறது. ஸ்கைஸ்கேனர் skyscanner இலவசம் ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் இந்த ஆப்பை பயன்படுத்தினால் எப்போது விமானம் ஏறினால் டிக்கெட் விலை குறைந்திருக்கும் என தகவல் தருகிறது. விமானங்களை கூட கூடுதல் கட்டணங்கள் இன்றி பதிவு செய்யலாம். ஆப்பில் ஏஐயான சேவி என்ற வசதி உள்ளதால், பயன்படுத்த சிறப்பாக இருக்கிறது. நிறைய பரிந்துரைகள் கிடைக்கின்றன. விமான கட்டணங்களைப் பார்த்து தெரிந்துகொள்ள பயன்படுகிறது. பிளைட் டிரேடர்24 பிளைட் டிராக்கர் flighttrader 24 flight tracker இலவசம் ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் நேரடியாக விமானம் எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதை அறிய முயல பயன்படுத்தும் ஆப். விமானம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதைப்பற்றிய உடனடிதகவல்களை நாம் பெற்றுக்கொள்ள முட...

மக்களின் ஆசைகளை நிறைவேற்றி வைத்து அவர்களை குற்றப்பங்காளிகளாக்கும் சூப்பர் ஆப்!

படம்
  விஷ்ஷர்  சீன தொடர்  12 எபிசோடுகள் போனில் தானாகவே வந்து அமரும் விஷ்ஷர் ஆப்பில், உங்கள் ஆசைகளைக் கூறினால் அது நிறைவேற்றப்படும். பதிலுக்கு அந்த ஆப் சொல்லும் ஒரு வேலையை நீங்கள் செய்யவேண்டும். அப்படி செய்தால் அடுத்த ஆசையை நிறைவேற்ற கோரிக்கை அனுப்பமுடியும். இப்படி மக்களின் பேராசையைத் தூண்டும் ஆப்பின் பின்னணி, அதிலுள்ள மனிதர்களின் நோக்கம் பற்றி பத்திரிகையாளர் ஆராய்ந்து கண்டுபிடித்து தடுக்கிறார்.  பனிரெண்டு எபிசோடுகளே நீளம் என்று சொல்லுமளவு பாத்திரங்களின் நடிப்பு எரிச்சல் ஊட்டுகிறது. அதிலும் நா டு என்ற பாத்திரத்தில் வரும் பத்திரிகையாளர் தோற்றம், நடிப்பு என அனைத்துமே மிகையாக இருக்கிறது. வயதானவர் போல காட்ட முகத்தில் தாடியை நடவு செய்து இருக்கிறார்கள். அது அவருக்கு ஒட்டவே இல்லை. அவரின் பாத்திரம் கடைசிவரை குழப்பமானதாகவே இருக்கிறது. நேர்மையானவரா, சந்தர்ப்பவாதியா, புத்திசாலியா என ஏதும் புரிவதில்லை.  கற்பனையான ஒரு நகரை காண்பிக்கிறார்கள். அந்த நகரை முப்பது நாட்களில் அழிப்பதுதான் திட்டம். அதற்காக விஷ்ஷர் ஆப் வருகிறது. இந்த ஆப், மக்களின் ஆசையை நிறைவேற்றி வைத்து பதிலுக்கு அவர்களை...

பேராசையைத் தூண்டி குற்றம் செய்யவைக்கும் ஏஐ ஆப்!

படம்
  கோட் – ஜப்பான் பிரீஸ் ஆஃப் விஷஸ் (code –japan price of wishes) J drama Rakutan viki   மினாடோ, காவல்துறையில் வேலை செய்கிறான். தான் நம்பும் விஷயத்தை வன்முறையான வழியில் நிரூபிக்க முயலும் பாத்திரம். இவனை அவனது குழு தலைவர் தாமி, நண்பன் மோமோடோ, காதலி யுகா ஆகியோர்தான் பாதுகாத்து வருகிறார்கள். யுகா, தான் கர்ப்பிணி என்ற தகவலைக் கூறும்போது மினாடோ ஆனந்தமாகி அவளை மணந்துகொள்ள முடிவெடுக்கிறான். அவர்கள் காதலித்து ஐந்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் நாளின் இரவில் திடீரென யுகாவிற்கு தடய அறிவியல் துறையில் இருந்து   அழைப்பு வருகிறது.   இரவு என்பதால்,, அவளை தனியாக அனுப்பாமல் மினாடோ தானும் கூடவே சென்று அலுவலகத்தில் விட்டுவிட்டு காத்திருக்கிறான். ஆனால் யுகா, பிணமாக திரும்ப வருகிறாள். லிஃப்ட் விபத்தில் இறந்துபோகிறவளின் வழக்கை விபத்து என காவல்துறை முடிக்க நினைக்கிறது. ஆனால் மினாடோ அதை நம்பவில்லை. கொலைவழக்காக நினைத்து ஆராயத் தொடங்குகிறான். இதற்கிடையில் அவனது பள்ளி நண்பன் கோட் எனும் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்துகிறான். அதில்   ஒருவர் நிறைவேற நினைக்கும் ஆசைகளை டைப் செய்து நிறைவேற்றிக...

வேலையின்மையால் சேவைப் பணியாற்றும் இளைஞர்களை அடிமையாக நடத்தும் சேவை நிறுவனங்கள்!

படம்
  இன்றைய காலம் சூப்பர் ஆப்களின் காலம். தினசரி தேவைகள் அனைத்தையும் ஆப் மூலம் ஆர்டர் செய்து பெறலாம். தேவை கையில் காசு மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிறு, குறு நகரத்தில் இருந்தும் பொருட்களை ஆர்டர்   செய்து பெற முடியும். இணையமும் வளர்ந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்தும் அந்தளவு வேகமாகியிருக்கிறது.   இந்தியாவின் சில்லறை வர்த்தம் 900 பில்லியன் டாலர்கள் எனில் அதில் இ மார்க்கெட்டின் பங்கு தற்போதைக்கு 6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 200 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இப்போதைக்கு இது குறைவுதான் என்றாலும் 2027ஆம் ஆண்டு 500 மில்லியன் மக்கள்   இ மார்க்கெட்டிற்கு நகர்ந்து சந்தை பங்களிப்பை 170 பில்லியனாக அதிகரிப்பார்கள் என வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். இ மார்க்கெட் இப்படி பெரிதாவது பெரு நிறுவனங்களை அதில் நுழைய வைக்கும். இதனால் சேவை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கருத்துகள் வெளியாகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்கிவிட்டன. இதன்விளைவாக பொருட்களின் விலை கட்டுப்பாடு என்பது பெருநி...

பத்திரிகையாளர்களை அடக்கி ஒடுக்கும் சீன அரசு! விசுவாசமே முக்கியம், நேர்மை அல்ல!

படம்
  அடிமை பத்திரிகையாளர்களை உருவாக்கும் சீனா திருத்தப்படும் ஊடகங்கள் – சீனாவில் ஊடகங்களுக்கான புதிய விதிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சீன அதிபர் ஜின்பிங், அரசின் நாளிதழ், டிவி சேனல்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். செய்திகள் உண்மையான தகவல் மற்றும் புள்ளிவிவரங்களின்படி இருக்கவேண்டும் என்று கூறினார். கூடவே, பத்திரிகையாளர்கள் கம்யூனிச கட்சியை நேசித்து அதை காக்கவேண்டும் என மறக்காமல் கூறினார். அவர் கூறிய விதிகளுக்கும், உண்மையாக செயல்படும் பத்திரிகையாளர்களுக்கும் முரண்பாடுகள் வந்தால் என்ன செய்வது என்று ஜின்பிங் கூறவில்லை. ஆனால், செயல்பாட்டில் அதை காட்டினார். கடந்த ஜூன் 30 அன்று, பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி ஆப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. அதில், மக்களின் கருத்துகளை எப்படி திருத்தி வழிகாட்டுவது என்பதற்கான செயல்முறை இருந்தது. ஏறத்தாழ அந்த ஆப், எப்படி கம்யூனிச கட்சிக்கு ஆதரவான முறையில் பத்திரிகையாளர்கள் செயல்படுவது என்பதைப் பற்றியதுதான். ஆப், வழிகாட்டு நெறிமுறைகளை சற்று மென்மையாக கூறினாலும், பத்திரிகையாளர் நேர்மையாக உண்மையாக நடந்தால் விளைவுகள் கடுமையாகவே இருந்தன. ஏனெனில் ஏரா...

உடற்பயிற்சி செய்பவர்களுக்கான பொருட்கள் - சந்தைக்குப் புதுசு

படம்
  நத்திங் இயர் 2 ஜே பேர்ட் விஸ்டா 2 உடற்பயிற்சி செய்பவர்களுக்கான புதிய பொருட்கள் எய்ட் ஸ்லீப் பாட் 3 கவர் எய்ட் ஸ்லீப் பாட் 3 கவர் இந்த கருவி தூங்குபவரின் இதயத்துடிப்பு, தூக்கத்தின் தரம், நேரம் ஆகியவற்றைக் கணிக்கிறது. படுக்கையின் வெப்பத்தை மாற்றிக்கொள்ளலாம். தூங்கும் நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. உங்களது தூக்கத்தை தரமாக மாற்றும் பழக்கத்தை எய்ட் ஸ்லீப் பாட் 3 கவர் உருவாக்குகிறது. பிரிவெய்ல் ஸ்மார்ட்வேர் பிரிவெய்ல் உடலில் அணியும் ஆடைகளின் மூலம் உடலின் இயல்புகளைக் கண்டுபிடித்து கூறலாம். நொடிக்கு ஆயிரம் டேட்டா பாய்ண்டுகளை சேகரிக்கிறது. அணியும் வகைப் பொருட்களைப் பொறுத்தவரை பிரிவெயிலின் கண்டுபிடிப்பு முக்கியமான முன்னேற்றம் என்று கூறலாம். உடற்பயிற்சி செய்யும் நேரம், அதில் செலவாகும் சக்தி ஆகியவற்றை இந்த உடையிலுள்ள சென்சார் மூலம் அறியலாம். ஹைபரைஸ் ஹைபர்வோல்ட் 2 புரோ மசாஜ் செய்யும் கன்கள். இதைப் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்பவர்கள் தங்கள் உடலை சற்று நெகிழ்வாக்கிக் கொள்ளலாம். இதில் பல்வேறு வேக அளவுகள் உள்ளன. பயன்படுத்த எளிதாக உள்ளது. தெராகன் பு...

ஆன்லைன் சேவை நிறுவனங்களோடு சண்டையிடும் சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன்

படம்
  ஷேக் சலாலுதீன் இந்திய ஒற்றுமை பயணத்தில்... ஆன்லைன் சேவை நிறுவனஙளோடு சண்டையிடும்   சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன் பொதுநல விஷயங்களில் உழைக்கும் மனிதர்கள் முதலில் இழப்பது தங்கள் மனநிம்மதியைத்தான் என்று சொன்னவர் பெரியார். அவர் சொன்ன வார்த்தைகள் எதுவும் மாறவில்லை. சலாலுதீன் மீது பெருநிறுவனங்கள் 42 வழக்குகளைத் தொடுத்துள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள்,   வழக்குகளை சந்திக்கவென ஒதுக்கி உழைத்து வருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக்   சலாலுதீன். எதற்கு அவர் மீது 42 வழக்குகள். அதுவும் பெருநிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன. எதற்கு என்று   நினைக்கிறீர்கள்? சலாலுதீன் ஆன்லைன் வாகன சேவை மற்றும் உணவு சேவை நிறுவனங்களுக்கான தொழிலாளர் சங்கத்தை நடத்தி வருகிறார். ஊழியர்களை ஒன்று கூட்டி அவர்களின் உரிமைகளைக் கேட்டு வேலை நிறுத்தம் செய்த காரணத்திற்காகத்தான் அவர் மீது நீதிமன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உளவியல்ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.   அண்மையில்தான் சலாலுதீன், பிறந்து பதினெட்டு மாதமான மகள் ஜைனப் பேகத்தின் ஹகீக்கா விருந்து விழாவை நடத்தினார். கூட்டு குடும்பமாக வசித்து...

பயணம் செய்பவர்களுக்கான ஆப்ஸ்கள்!

படம்
  polar grit x coros vertix 2 பீக் ஃபைண்டர்  இந்த ஆப் மூலம் உயரமான மலைச்சிகரங்களை அடையாளம் காணலாம். ஏராளமான மலைகள் இருப்பதால், உங்களுக்கு எது தேவையோ அதை தேர்ந்தெடுத்து ஏறலாம். மலைகளை 360 டிகிரியில் பார்க்க முடியும். இதனை ஆஃப்லைனிலும் பயன்படுத்த முடியும். கட்டண சேவை தான்.  ஸ்லோவேய்ஸ்  இங்கிலாந்து மக்கள் பயன்படுத்த இலவச ஆப் இது. லாக்டௌனில் தொடங்கிய ஆப் இது. இலவசம்தான். இங்கிலாந்தின் 7 ஆயிரம் வழித்தடங்களை  ஒரு லட்சம் கி.மீ. தொலைவுக்கு கொடுத்திருக்கிறார்கள். இதனால் கதவைத் திறந்து சாலைகளைப் பார்த்ததும் மிரளாமல் பயணம் செய்யலாம்.  கோமூட் பயணிப்பதற்கான வழித்தடங்களை உருவாக்கும் ஆப் இது. வழித்தடம், ட்ராக்கர், சமூக வலைத்தளம் என பல்வேறு வசதிகளைக் கொண்ட ஆப் இது. நகர தெருக்கள் தொடங்கி மலைகள், சிகரங்கள், பார்க்க வேண்டிய இடங்கள், எங்கே தூங்குவது, குடிநீர் கிடைக்கும் இடம் என பல்வேறு விஷயங்களை ஆப் தருகிறது.  இத்தனைக்கும் சேவை இலவசம்தான். பயணம் தொடர்பான அனைத்து விஷயங்களும் கோமூட் ஆப்பிலேயே கிடைத்துவிடும்.  கோரோஸ் வெர்டிக்ஸ் 2 சாகச பயணத்திற்கு ஏற்ற ஜிபிஎஸ் வாட்ச் இது...

உக்ரைனில் உருவாக்கப்பட்ட முழுக்கியமான மென்பொருள் சேவைகள்!

படம்
  இப்போது இந்தியாவில் உள்ள தேசிய ஊடகங்களில் முக்கியமான விவாதம், உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் மருத்துவ மாணவர்கள்தான். இத்தனை பேர் ஏன் அங்கே போனார்கள் என இப்போதுதான் தூங்கி எழுந்தது போல உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவில் அரசு மருத்துவக்கல்லூரி இடங்களுக்கான போட்டி அதிகம். அதில் போட்டியிட முடியாதவர்கள், தனியார் கல்லூரியில் பணம் கட்டி படிக்க முடியாத சூழல். இங்குதான் முக்கியமான விஷயம் உள்ளது. இந்த சவாலான சூழலுக்காக அவர்கள், கனவை கைவிடவில்லை. உக்ரைன் சென்று படித்து வருகிறார்கள். உக்ரைன் மருத்துவப் படிப்பிற்கு மட்டுமல்ல, டெக் முன்னேற்றங்களுக்கும் புகழ்பெற்றது. அங்கு உருவான முக்கியமான அப்ளிகேஷன்களை இப்போது பார்ப்போம்.  வாட்ஸ்அப் இப்போது மெட்டாவோடு சேர்ந்துவிட்டது. தொடக்கத்தில் இதனைத் தொடங்கிய ஜான் கூம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பிறந்தவர். ஃபாஸ்டிவ் நகரில் வளர்ந்துள்ளார். பிறகுதான் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு தனது அம்மா, பாட்டியுடன் இடம்பெயர்ந்திருக்கிறார். அப்படி இடம்பெயர்ந்தபோது அவரின் வயது 16.  பேபால் பணத்தை இணையம் ...

திருமண ஏற்பாடுகளை செய்வதற்கான ஆப்கள்!

படம்
  பல்வேறு ஆப்களை எழுதியிருக்கிறோம். ஆனால் இப்போது கல்யாணம் செய்வதற்கான அமைப்புகள், சேவைகளைப் பற்றியும் எழுதுகிறோம் என்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இதை ஆங்கில இதழ்கள் எழுதிவிட்டன என்பதல்ல. கல்யாண வேலைகளை கூட செய்வதற்கான ஆட்கள் கிடைப்பதில்லை. உறவுகள் நெருக்கமில்லாமல் தூரமாகிவிட்டன என்பதை நாம் மறைமுகமாக புரிந்துகொள்ளவேண்டியதுதான். சீரியசாக பேசிவிட்டோமே... ஒகே சில்லுகா உண்டன்டி.. ஆப்களை சூஸ்தம்..... வெட்மீகுட் 2014ஆம் ஆண்டு தொடங்கிய ஆப் இது. இதில் கல்யாண கார்ட் வடிவமைப்பு முதல் எந்த பொருட்களுக்கு எந்த வியாபாரிகளை அணுக வேண்டும் என்பது வரையிலான தகவல்கள் கிடைக்கின்றன. மாதத்திற்கு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது போல ஆப்பை தரவிறக்கி வருகிறார்கள். 75 ஆயிரத்திற்கும் மேலான முறை தரவிறக்கி 30 லட்சத்திற்கு மேல் பயன்படுத்தி வருகிறார்கள்.  அப்பி கப்புள் 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேவை. இதைப் பயன்படுத்தி திருமணமாகும் தம்பதிகள் தங்களுக்கென தனி ஆப் , வலைத்தளத்தை தொடங்கலாம். அப்புறம் என்ன செய்வது என்கிறீர்களா? கல்யாணம் செய்யவேண்டியதுதான். விருந்து சோறு சாப்பிட வேண்டியது தான்.  ஆர்எஸ்...

உயிரை ஆரோக்கியத்தை காக்கும் சில ஆப்கள்!

படம்
what3words இதனை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும். வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்துக்கொள்ள சூப்பர்ஸ்டார் சொல்லியிருக்கிறார். இந்த ஆப் 3*3 என பிரித்துக்கொள்கிறது. இதில் உள்ளவர்களுக்கு மூன்று  வார்த்தைகளை அளிக்கிறது. உங்களுக்கு அவசரநிலை என்றால் இதைவைத்து அவர்களுக்கு தகவல் அளிக்கலாம். இங்கிலாந்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப் இது. இதன்மூலம் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.  whatsapp வாட்ஸ்அப்பில் ஏராளமான சில்மிஷங்களை செய்திருப்போம். ஆனால் அதிலும் அவசரகால சங்கதிகள் உண்டு. ஆபத்தான சூழலில் ஒருவரின் சாட் பாக்ஸில் பிளஸ் கீயை அழுத்தி ஷேர் லைவ் லொகேஷன் அனுப்பலாம். அந்த சாட்டுக்கு உரிய நபர் உங்களது இடத்தை குறிப்பிட்ட நேரம் பார்க்க முடியும்.  skinvision ஸ்கின் விஷன் எனும் ஆப்பிற்கு காசு கட்டியே ஆக வேண்டும். இந்த ஆப் உங்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அதனை கண்டுபிடித்து சொல்லும். பாதிக்கப்பட்ட இடத்தை புகைப்படம் எடுத்து ஆப்பில் அனுப்பவேண்டும். இதனை அவர்கள் சோதித்து என்ன பாதிப்பு என்று சொல்லுவார்கள். இதற்கு 30 நொடிகள் போதும். இந்த முடிவுகளைக் கூட மருத்துவர்கள்தான்...

மனதை ரிலாக்ஸ் செய்யும் ஆப்கள்!

படம்
  போர்ட்டல் இயற்கையான அழகிய காட்சிகள் எப்போதும் மனதை ரிலாக்ஸ் செய்யும். அப்படி உலகம் முழுக்க உள்ள அனைத்து அழகான அருவி, மலைத்தொடர், புல்வெளி ஆகியவற்றை இந்த ஆப்பில் பார்த்து ரசிக்கலாம். பக்கத்தில் எரிச்சலூட்டும் நண்பர்களின் பேச்சிலிருந்து கொஞ்சம் தள்ளியிருக்க முடியும்.  இந்த ஆப் ஆண்ட்ராய்ட் , ஆப்பிளிலும் இலவசமாக கிடைக்கிறது.  ஸ்மைலிங் மைண்ட் உங்கள் குடும்பமே மன அழுத்தத்தில் தவித்தாலும் இந்த ஆப், உங்களை அதிலிருந்து மீட்கும். தியானம் செய்வதற்கான ஏராளமான விஷயங்கள் இதில் உள்ளன. அதைப் பயன்படுத்தி தினந்தோறும் ஆப்பை திறந்து வைத்து உழைத்தால் மன அமைதி கிடைக்க வாய்ப்புள்ளது.  பிக்மென்ட் தினத்தந்தி தங்க மலரில் வரும் வண்ணமடிக்கும் பகுதிதான். ஆனாலும் மன அழுத்தத்தை சிறப்பாக போக்குகிறது. ஆப்பை திறக்கிறீர்கள். பூசணி, பப்பாளி என இஷ்டம் போல பெயிண்டை சிதறடித்து வண்ணம் பூசலாம். மெல்ல கஷ்டங்கள் குறையும் வாய்ப்பிருக்கிறது.  டோகா லைப் வேர்ல்ட் இது ஒரு பொம்மை வீடு. இங்கு ஏராளமான கதை மாந்தர்கள் உண்டு. இங்குள்ள சில டாஸ்க்குகளை முடித்தால் சுவாரசியமாக பொழுது போக்கும். வீட்டையே இரண்டாக மாற்று...

ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சிறந்த ஆப்கள் 2021!

படம்
கிளிப்ஸ் ஆப்பிளில் பயன்படுத்தும் வீடியோ எடிட்டர். இதனைப் பயன்படுத்தி எளிதாக வீடியோக்களை எடுக்கலாம். உங்களை புகைப்படம் எடுத்து, அதன் பின்னணியை ஆக்மெண்ட் ரியாலிட்டி முறையில் கூட மாற்றிக்கொள்ளலாம்.  ஷோமேக்ஸ் படங்களைப் பார்க்கும் சேவை இது. மொபைலா, டிவியா என முடிவு செய்து பணத்தை சந்தா வாக கட்டிக்கொள்ளலாம். ஆண்ட்ராய்ட், ஆப்பிள் என எதிலும் படங்களைப் பார்க்கலாம்.  டேஸ்டி சமையலறையில் பயன்படும் ஆப். இதை வைத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகளை பயன்படுத்தலாம். அதன் வடிவம் எப்படி வரவேண்டும் என்பதைக்கூட இந்த ஆப் கூறுகிறது. ஆண்ட்ராய்ட், ஆப்பிளில் இலவசமாக பயன்படுத்தலாம்.  ஜஸ்ட் வாட்ச் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வீடியோ சேவைகளை வழங்கும் ஆப். பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து ஒன்றாக வழங்குகிறது. உங்களுக்கு எது தேவையோ அதை பார்க்கலாம். இலவசமான ஆப்தான்.  ரேவ் டிவி தொடர்களைப் பார்ப்பது, பிறகு அதைப்பற்றி விவாதிப்பது என அனைவருக்கும் பிடித்ததுதானே அதைத்தான் இந்த ஆப்பில் செய்யப்போகிறீர்கள். இதனால் உலகத்திற்கு நாம் பார்த்து ரசித்த விஷயங்களை சொல்லலாம் என நினைத்தவர்கள் ஏமாற மாட்டார்கள்....

ஸ்மார்ட் வாட்சுகளுடன் இணையும் ஆப்கள் 2021

படம்
  இன்ஃபினிட்டி லூப் ஸ்மார்ட் வாட்ச்ச்சில் இந்த விளையாட்டை இணைத்து விளையாடலாம்.. பொழுதுபோகாமல், மீட்டிங்கில் சோர்வாகி உட்கார்ந்திருக்கும்போது கூட விளையாட்டை விளையாடலாம்.  பிஎஃப்டி இதில் வாட்சின் வடிவத்தை விதம் விதமாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம். பார்க்கவும் அழகாக இருக்கிறது. நேரம் தொடர்பான பல்வேறு மாறுதல்களை ஆப் அனுமதிகிறது.  சாம்சங் பே காசை பிறருக்கு அனுப்பும் வசதி,  அனைத்து போன்களிலும் உள்ளது. சாம்சங்கும் தொடங்கியுள்ளது. இதில் சொல்ல என்ன இருக்கிறது? பிபி லாஸ்ட் போன் அலர்ட் ஐபோனை எங்கோ வைத்துவிட்டீர்கள். அதனை எப்படி பெறுவது என தெரியவில்லை. இந்த ஆப் இருந்தால் குரல்வழிச்செய்தி, அலாரம் ஒலிக்கச்செய்து போனைப் பெறலாம். வீட்டிலுள்ள வை ஃபையில் போனை இணைக்கவேண்டுஃ. லைஃப்சம் உணவு, அதன் கலோரி பற்றி கவலைப்பட்டு தொப்பையை தட்டிக்கொண்டிருக்கும் நபர் என்றால் உங்களுக்காகவே இந்த ஆப். பயன்படுத்தி கலோரியை அளவிட்டு ஆரோக்கியம் காக்கலாம். 

பேஸ்புக் வணிக பயன்களுக்காக, மக்களின் தகவல்களை பாதுகாக்க முயற்சிக்காது! - ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ

படம்
  ஜோஹோ நிறுவனர், இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு பத்ம ஸ்ரீயை வென்றிருக்கிறார். தென்காசியில் 2019ஆம் ஆண்டே கிளம்பி வந்து கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும் புரட்சியாளர் இவர். அவரிடம் பேசினோம்.  பத்ம ஸ்ரீ விருது பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது? இதனை விளக்குவது கடினம். கலவையான உணர்வுகளால் பீடிக்கப்பட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. இதன் காரணமாக விருது என்பது எனக்கு பெரிய விஷயமாக பட்டது. பொதுவாக இந்த விருதுகளை சமூகத்திற்கு சுயநலமின்றி உழைப்பவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் . நான் வணிகம் செய்யும் தொழிலதிபர். எனக்கு கொடுக்கப்பட்டதை, இந்தியாவிற்கு வேறுவழிகளில் திரும்பக் கொடுக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.  வாட்ஸ் அப்பின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாங்கள் இப்போது அரட்டை என்ற மென்பொருளை தயாரித்து வருகிறோம். அது இன்னும் சோதனை முறையில்தான் உள்ளது. இந்தியாவிற்கென செய்திகளை அனுப்புவதற்கு தனி மென்பொருள் தேவை என நினைத்து மென்பொருளை உருவாக்கினோம். இதுபோலவே இன்னும் பல்வேறு பொருட்களை உருவாக்கவேண்டும் என நினைக்கிறேன். பேஸ்புக் ...