வன்முறையைப் பயன்படுத்தி மக்களை பணிய வைக்கும் சாமர்த்தியம்!
மேலாதிக்க சாதியினர், கையில் பத்திரிகைகளை கொண்டிருக்கிறார்கள். டிவி சேனல்களை நடத்துகிறார்கள். அரசிடம் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மக்கள் அதிகாரத்தை வலியுறுத்துபவர்களை வெடிகுண்டு வீசுபவர்கள், ஒழுங்கின்மை கொண்டவர்கள், பேரிடரை விளைவிப்பவர்கள் என வசைபாடி தவறான கருத்துகளை முன்முடிவுகளை ஏற்படுத்துகிறார்கள். முதலாளித்துவத்தைக் கொண்டுள்ள அரசு, தன்னைக் காத்துக்கொள்ள பேரிடரை ஏற்படுத்துகிறது. வன்முறையை கைக்கொள்கிறது. மக்கள் அதிகாரம், இதற்கு எதிரான இயல்பைக் கொண்டுள்ளது. அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி என இரண்டையும் உருவாக்க முனைகிறது. ஜனநாயகவாதி, முடியரசு விசுவாசி, சோசலிசவாதி, போல்ஸ்விக், மக்கள் அதிகாரர்கள் என எவரும் கூட வெடிகுண்டுகளை வீசலாம். வன்முறையைக் கையில் எடுக்கலாம். இன்றைய சூழலில் வன்முறை ஒருவரின் கையில் திணிக்கப்படுகிறது. அதை மக்கள் எவரும் வேண்டுமென தேர்ந்தெடுக்கவில்லை. ப்ரூடஸ் தனது நண்பனான அரசன் சீசரைக் கொன்றான். அவனுக்கு தனது நண்பன் குடியரசுக்கு துரோகம் செய்துவிடுவானோ என்ற பயம் இருந்தது. ப்ரூடஸ் நண்பனை விட ரோமை அதிகம் நேசித்தான் என்று கூறமுடியாது. வி...