இடுகைகள்

தொல்பொருள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகழாய்வில் ட்ரோனின் பங்கு என்ன?

படம்
  அகழாய்வுக்கு உதவும் ட்ரோன்! தொன்மையான புதைப்படிமங்களைக் கண்டறிய அகழாய்வாளர்கள், குறிப்பிட்ட இடத்தை ஏரியல் புகைப்படமாக பதிவு செய்வார்கள். இதற்கு பலூன், பட்டம், விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். தற்போது, ட்ரோன்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த முறையில் புகைப்படம் வேகமாகவும், தரமாகவும் கிடைக்கிறது.  ட்ரோன்களை ரிமோட் மூலம் எளிதாக பறக்கவைப்பதோடு, பறக்கும் பாதையையும் முன்கூட்டியே புரோகிராம் செய்யலாம். ட்ரோன்கள், புகைப்படங்களை குறிப்பிட்ட இடைவெளியில்  திட்டமிட்டு வெவ்வேறு கோணங்களில் எடுக்கிறது. இதனை கணினியில் உள்ள மென்பொருள் மூலம் நில அடுக்குகளைப் பார்க்கும் டோபோகிராபி (Topography) காட்சித் தன்மைக்கு மாற்றலாம். இம்முறைக்கு, போட்டோகிராமெட்டரி (Photogrammetry) என்று பெயர். அகழாய்வு செய்யும் இடங்களில் ட்ரோன் மூலம் எடுக்கும் புகைப்படங்களை கணினி வழியே 3 D படங்களாக மாற்றி பார்க்கலாம். இதன்  மூலம் அகழாய்வு செய்யும் இடங்களில் உள்ள சிறிய பொருட்களைக்கூட துல்லியமாக அறியலாம். இப்படங்களோடு செயற்கைக்கோள் படங்களையும் இணைத்து நிறைய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் பெறமுடியும...

நிலப்பரப்பு ரீதியான அரசியலைப் பேசும் நூல்! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  போஸ்ட் கொரானா ஸ்காட் காலோவே பெங்குவின்  599 பெருந்தொற்று காரணமாக நாம் என்ன விஷயங்களை இழந்தோம், என்ன விஷயங்களை கற்றோம், தொழில்நுட்பம் முழுக்க நம்மை ஆட்சி செய்த காலம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை ஆசிரியர் ஸ்காட் விவரித்துள்ளார்.  தி வேர்ல்ட் ஆப் இந்தியாஸ் ஃபர்ஸ்ட் ஆர்க்கியாலஜிஸ்ட் உபிந்தர்சிங் ஆக்ஸ்போர்ட் அலெக்ஸாண்டர் கன்னிங்காம் என்பவர்தான் இந்தியாவின் முதல் தொல்பொருள் ஆய்வாளர். இவர் 1871ஆம் ஆண்டு இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.  இந்த நூலில் 1871 முதல் 1888 வரையிலான காலகட்டத்தில் அலெக்ஸ் எழுதிய 193 கடிதங்களைக் கொண்டுள்ளது.  இந்த கடிதங்கள் முதல்முறையாக நூலாக்கப்படுகின்றன. இவை அலெக்ஸின் வாழ்க்கையை வேறுவிதமாக பார்க்க உதவுகின்றன.  தி அன்ஃபார்கிவ்விங் சிட்டி அண்ட் அதர் ஸ்டோரிஸ் வாசுதேந்திரா பெங்குவின் 599 கர்நாடகாவைச் சேர்ந்த வாசுதேந்திரா, கர்நாடக சாகித்திய அகாதெமி பரிசு வென்றவர். நவீன வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நட்பு, துரோகம், நேர்மை, விசுவாசம், அதிர்ச்சி என பல்வேறு விஷயங்களை கதைகளின் சிறப்பாக வெளிப்படுத்தி...