வளர்ச்சியடைந்த இ(ஹி)ந்தியா!
பொறுமையின் சிகரமாக வாழும் இந்தியர்கள்! டெல்லியில் விடுமுறைக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அங்குள்ள காற்றில் மாசுபாடு 10-2.5 என்ற அளவில் அதிகரித்தது. இரண்டு வார விடுமுறையை மக்கள் பலரும் தீர்மானித்துக் கொண்டிருந்தனர். என்னுடைய பத்திரிகையாள நண்பர் கூட பாகிஸ்தானில் உள்ள தனது நண்பர்களோடு சேர்ந்து துருக்கிக்குச் சென்றுவிட்டார். இன்னொருவர் பின்லாந்துக்கு சென்று சான்டா கிளாஸின் ஊரான லேப்லாண்டில் இருக்கிறார். அவர் சான்டா கிளாஸை நம்பாதபோதும், அப்படி வேகமாக, ஒரு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். வெளிநாடுகளுக்குச் சென்று வாழ முற்படும் இந்தியர்களின் ஆர்வத்தை ஈடுபாட்டை எதற்கு என்றே புரிந்துகொள்ள முடியாது. அதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முன்னர். அப்போது புரியவில்லை. இப்போது தெளிவாக புரிகிறது. இந்தியா ஒரு ஏழை நாடு.அதன் அடிப்படைக் கட்டமைப்பு படுமோசமாக உள்ளது. ஓடிபி என்பது மிக குறைவாகவே உள்ளது. பல கோடி ஏழை மக்கள் இருக்கிறார்கள். எனவே, மக்கள் இயற்கையாகவே வெளிநாடுகளுக்குச் சென்றுவிட முயல்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று முன்னேறிய நாட்டின் வளமை, ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால், அ...