இடுகைகள்

மாசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதீத நிலையை எட்டும் காலநிலை மாற்ற விளைவுகள்

படம்
  காலநிலை மாற்றம் குடிநீர் பற்றாக்குறை, காட்டுத்தீ, கடல் மட்டம் உயர்வு, மழை வெள்ளம் சமயத்தில் மட்டும் நாளிதழ்கள் பத்திரிகைகள் உறக்கத்திலிருந்து எழுந்து செய்திகளை வெளியிடுவார்கள். மற்ற நேரங்களில் கோவிலுக்கு செல்ல பிரதமர் செய்த விரதம் என சொம்படிக்கும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்கள். இதற்கு, சில ஆங்கில தேசிய நாளிதழ்கள் விதிவிலக்காக உள்ளன. அவர்களை பெரிதாக குறை சொல்ல ஏதுமில்லை. வாங்கிய பணம் அப்படி பேச, எழுத வைக்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுடைய வேலையைப் பார்க்கட்டும். நாம், காலநிலை மாற்றம் பற்றிய விஷயத்தைப் பார்ப்போம்.  1850ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை உலகளவில் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதற்கு இயற்கை ஒரு காரணம் என்றாலும், மனித செயல்பாடுகள் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.   வெப்பம் அதிகரித்து வருவதால் வெப்ப அலை, பஞ்சம், வெள்ளம், புயல், காட்டுத்தீ சம்பவங்கள் உலகமெங்கும் நடந்துவருகின்றன. காலநிலை மாற்றத்தில் எல் நினோ, லா நினோ ஆகியவை ஏற்படுத்திய தாக்கம் பற்றி அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், ராயல் சங்கம் ஆகிய இரு அமைப்புகள் கிளைமேட் சேஞ்ச் - எவிடென்ஸ் அண்ட்

பிளாஸ்டிக்குகளின் உற்பத்தியை குறைக்காமல் மறுசுழற்சி செய்வதில் பயன் உண்டா?

படம்
  விஷமாக பரவும் பிளாஸ்டிக்குகள்! இன்று உள்ளூர் தொடங்கி புகழ்பெற்ற ஆற்றுக்கரையோரங்களில் சென்று பார்த்தால் எங்கும் நிறைந்துள்ளது பரந்தாமன் மட்டுமல்ல பிளாஸ்டிக்கும் கூடத்தான் என்று தெரிந்துகொள்வீர்கள். அந்தளவுக்கு ஷாஷேக்கள், குழந்தைகளின் பொம்மைகள், பாலிதீன் கவர்கள், சோப்பு உறைகள், எண்ணெய் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், அலுமினிய பாயில்கள் ஏராளமாக கிடைக்கும். உள்ளூர் நிர்வாகங்களும் இவற்றை அள்ளுகின்றன. ஆனாலும் இதன் எண்ணிக்கை குறைவதாக இல்லை. மறுசுழற்சி செய்யும்படியான பிளாஸ்டிக்கை தயாரிக்காதபோது தொழிற்சாலைகளை மூடச்சொல்லி உத்திரவிடும் தைரியமும் நெஞ்சுரமும் அரசுக்கு இல்லை. எனவே, பிளாஸ்டிக்குகள் இன்று குடிநீரில், உணவில், காய்கறிகளில் கூட கலக்கத் தொடங்கிவிட்டன. அதைபற்றிய விரிவான கட்டுரையைப் பார்ப்போம்.  மூன்றாம் உலக நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கூட பிளாஸ்டிக் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றுவரையில் மனிதர்கள் உருவாக்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை பதினொரு பில்லியன் மெட்ரிக் டன் என நேச்சர் ஆய்விதழ் தகவல் கூறுகிறது. தற்போது உலகம் முழுவதும் ஆண்டுக்கு 30

விலங்குகளின் புத்திசாலித்தனம் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்து வருகிறதா?

படம்
  பகுதி 2 விலங்குகளின் மனம் எப்படி இயங்குகிறது? மனிதர்கள் ஐம்புலன்கள் வழியாக ஒன்றை அறிந்து அதன் படி செயல்படுவது குறைந்துவிட்டது. காரணம், அவர்கள் ஐம்புலன்களை விட மூளையை பயன்படுத்துகிறார்கள். இதன் வழியாக கருவிகளை உருவாக்க முடிந்தது. தேனீ, தான் பறக்கும் இடத்தில் உள்ள காந்தப்புலத்தை உணர்கிறது. தனது கூட்டை எளிதாக கண்டறிந்து திரும்பச்செல்கிறது. இதை மனிதர்கள் ஜிபிஎஸ் கருவி இல்லாமல் செய்ய முடியாது. கைதிகளை சிறையில் பல்வேறு அறைகளில் அடைத்து வைத்திருப்பார்கள். அதுபோலத்தான் மனிதர்கள், விலங்குகள் ஆகிய இரண்டு இனத்தின் மூளையின் செயல்பாடும் உள்ளது. செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டும் பெரிதும் வேறுபட்டது. 1974ஆம் ஆண்டு தத்துவவாதி தாமஸ் நாகல்,வௌவாலாக இருப்பது எப்படி என புகழ்பெற்ற கட்டுரையை எழுதினார். இவர், அமெரிக்க தத்துவ வல்லுநர்.வௌவால் குகையில், மரத்தில் தொங்கும்போது அதன் மனதில் என்னவிதமாக கற்பனைகள் தோன்றும் என விளக்கி எழுதியிருந்தார். அது மனிதர்களை எப்படி பார்க்கிறது என விளக்கப்பட்டிருந்தது. அறிவியல் ரீதியாக வௌவாலைப் பார்ப்பது வேறு, அதன் வாழ்க்கையை அப்படியே புரிந்துகொண்டு உணர்வது வேறு. இரண்ட

டைம் 2023 செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் - லெக்ஸி ஹியரிங், மாவென் கிளினிக், சர்க்கிள்

படம்
  மாவன் கிளினிக் லெக்ஸி ஹியரிங் சர்க்கிள கிரிப்டோகாயின் இன்டிரிபிட் டிராவல் மாசு இல்லாத சுற்றுலா அறிவியல் ரீதியாக மாசுபாடு ஏற்படுத்தாத சுற்றுலா நிறுவனம். பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு விமானம் இல்லாத பயணத்தின் மூலம் மக்களை கூட்டிச் செல்கிறார்கள். சுற்றுலா செல்லும் பயணிகள், போகுமிடமெல்லாம் மதுபான புட்டிகளை உடைப்பது, உணவு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கவர், பெட்டிகளை அங்கேயே தூக்கிபோட்டுவிட்டு வருவது இயல்பானது. ஆனால், இந்த நிறுவனம் இதுபோல மக்கள் சுற்றுலா செல்வதை மாற்றியிருக்கிறது. இதன் இயக்குநர், ஜேம்ஸ் தோர்ன்டன். இன்டிரிபிட் டிராவல் நிறுவனம் தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. #intrepid travel     வார்ட்சிலா தூய ஆற்றலுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழித்து வருகின்றன. சோலார், காற்றாலை என ஏகத்துக்கும் செயல்பாடுகள் தொடங்கி நடந்து வருகின்றன. காலநிலை மாற்றம் தீவிரமாக உள்ள காலத்தில் சூரிய வெளிச்சம் கிடைக்காதபோது, காற்று தீவிரமாக வீசாதபோது என்ன செய்வது? அப்போது கிடைத்த சேகரித்த மின்னாற்றலை சேமிக்கும் வழிவகைகளை வார்ட்சிலா நிறுவனம் வழங்குகிறது. மின்சாரத்தை சேமிப்பதற்கான மையங்களை

காலநிலை மாற்றத்தை எளிமையாக புரிந்துகொள்ளலாம்! - காலநிலை மாற்றமும், தட்பவெப்பநிலையும்

படம்
    காலநிலை மாற்றம் பூமி தன்னுடைய 4.54 பில்லியன் ஆண்டு வரலாற்றில் அதனுடைய காலநிலையை மாற்றிக்கொண்டே உள்ளது. இதற்கு முக்கியக் காரணங்கள் என சூரியனின் கதிர்வீச்சு, பூமியின் வட்டப்பாதை மாற்றங்கள், விண்கல் மோதுவது என கூறலாம். இதனால் ஏற்படும் காலநிலை மாற்ற விளைவுகளுக்கு அதிக காலம் தேவை. அதாவது, அதன் பாதிப்புகளை உணர்வதற்கு நமக்கு அதிக காலம் பிடிக்கும். இப்போது அறிவியல் ஆராய்ச்சியில் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்கள்படி மனிதர்களின் செயல்பாட்டால், காலநிலை மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. மேலும இயற்கையாக நேரும் வேகத்தை விட இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இருநூறு ஆண்டுகளில் தொழில்துறை வளர்ச்சி, நகரமயமாதல், மாசுபாடு, மக்கள்தொகை, காடுகள் அழிப்பு காரணமாக நிலம், கடல், காற்று என பலவும் பாதிக்கப்பட்டுவிட்டது. பூமியின் பல்வேறு நாடுகளை காலநிலை மாற்றம் கடுமையாக பாதித்து வருகிறது. பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவு வெளியிடப்ப்படுவதால், பசுமை இல்ல விளைவின் தாக்கம் நினைத்துப் பார்க்க முடியாதபடி அதிகரித்து வருகிறது. பூமியிலுள்ள அடிப்படை கனிம வளங்களை பயன்படுத்தி வளர்ச்சி பெறுவதோடு அதனால் ஏற்படும் மாசுபாடுகளைக் க

காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வது எப்படி?

படம்
  சூரிய வெப்பம் அதிகரித்து வரும் மாதம் இது. அதிகரிக்கும் வெப்பம் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பில்லை. அந்தளவு உலகம் முழுக்க மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. மாசுபாட்டைக் குறைப்பதாக பேசினாலும், அதன் பின்னணியில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில்நிறுவனங்களை பாதுகாக்கும் முயற்சியே நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமல்ல, மேற்கு நாடுகளிலும் இதுதான் நிலைமை. 2021ஆம் ஆண்டு ஐ.நாவில் கார்பன் மாசுபாட்டை குறைக்கும் திட்டத்தில் 193 நாடுகளில்   24 நாடுகள் மட்டுமே தெளிவான மாசு கட்டுப்பாட்டுத் திட்டத்தை சமர்ப்பித்தன. இப்படி திட்டங்களை கூறிய நாடுகள் அதை சரியாக செயல்படுத்துமா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், இதுபற்றிய எண்ணமே இல்லாமல் உள்ள நாடுகள்தான் கவலையை அதிகரிக்கின்றன. காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்ப அலை, மழைப்பொழிவு குறைதல் ஆகியவற்றை பிற நாடுகளை விட இந்தியா அதிகம் சந்திக்கப்போவதாக தட்பவெப்பநிலை ஆய்வாளர்கள் தகவல் கூறுகிறார்கள். அரசு, இதுதொடர்பாக செய்யும் விஷயங்களை விட தனியார் நிறுவனங்கள் பரவாயில்லை ரகத்தில் இயங்கி வருகிறார்கள்.   ரீநியூ என்ற மறுசுழற்சி நிறுவனம்   இந்தியாவில் ப

சூழல் மாசுபாடு பற்றிய தகவல்களை கசியவிடும் நிதித்துறை அதிகாரி! கலகத் தலைவன் - மகிழ் திருமேனி

படம்
  கலகத் தலைவன் இயக்கம் மகிழ் திருமேனி   மகிழ் திருமேனி வணிக ரீதியான படங்கள் எடுப்பவர். அதேசமயம் படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாத வகையில் நேர்த்தியான திரைக்கதையோடு அமைக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் கலகத்தலைவனையும் கூறலாம். கலகத்தலைவன் தொழிற்சாலை கழிவுகள், சூழல் மாசுபாடுகள் எப்படி மக்களை பாதிக்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களை அதிகாரம், அரசு, தொழில்துன்றை என்ன செய்கிறது என்பதை நேர்மையாக பேசியுள்ளது. வஜ்ரா என்ற வணிக வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் பெரும் நிறுவனம். குறைந்த எரிபொருளில் அதிக தூரம் செல்லும் வாகனத்தை தயாரித்து அதை சந்தைப்படுத்தும் அறிவிப்பை வெளியிடுகிறது. ஆனால் மாசுபாட்டு ஆய்வில் அதிக மாசு ஏற்படுவது தெரிய வருகிறது. அதை நிறுவனம் மறைத்து பங்குச்சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கிறது. ஆனால் வஜ்ராவின் மாசுபாட்டு ரகசியம் ஊடகங்களுக்கு கசியவிடப்படுவதால் நிறுவனம் கடுமையான விமர்சனங்களையும் சந்தையில் வீழ்ச்சியையும் சந்திக்கிறது. இதனால் வஜ்ராவின் தலைவர் பழங்குடிகளை கொன்று சாதித்த இரக்கமில்லாத ராணுவ கமாண்டோ ஒருவரை ரகசிய உளவாளியை கண்டுபிடிக்க அமர்த்

மறைமுகமாக மாசுபாடுகளை ஊக்குவிக்கும் நைட்ரஜன்!

படம்
  மாசுபாடுகளின் தலைமகன்!   மாசுபாடு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகிய அனைவருக்கும் தெரிந்த வாயுக்கள்தான். ஆனால் சத்தமே இல்லாமல் நீர், காற்று ஆகிய மனிதர்கள் அடிப்பதை வாழ்வாதாரங்களில் பெரும் பாதிப்பை நைட்ரஜன் வாயு ஏற்படுத்தி வருகிறது.  பொதுவாக ஆபத்தற்றது என கருதப்படும் இந்த வாயு, வளிமண்டலத்தில் 78 சதவீதம் காணப்படுகிறது. காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் இழுத்து வளமடையும் நிறைய பயிர்கள் மண்ணில் உண்டு. இப்படி நடைபெறும் செயல்பாடு சுழற்சியானது. இதில குளறுபடி நடக்கும்போது அனைத்துமே தலைகீழாகி பிரச்னை தொடங்கிவிடுகிறது.. எளிதாக நாம் பார்க்கும் பிரச்னை, நீர்நிலையில் பிற உயிரினங்கள் வாழ முடியாதபடி பாசிகளின் ஆக்கிரமிப்பு. இது வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயுவின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் முக்கியமான பாதிப்பாகும்.  காற்றிலுள்ள நைட்ரேட்டுகளை மழை கரைத்து நீர்நிலைகளில் சேர்க்கிறது. அங்கு பாசிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நைட்ரஜன், நீரிலுள்ள ஆக்சிஜனை உறிஞ்சுகிறது. இதனால் அதிலுள்ள உயிரினங்கள் மெல்ல அழிவைச் சந்திக்கின்றன. இந்த வகையில் உலகில் 400க்கும் மேற்பட்ட நீர்நிலைப்பகுத

விவசாய கழிவுகளை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம்? பஞ்சாப் அரசு முன்னெடுக்கும் புதிய செயல்முறை

படம்
            வி்வசாயக்கழிவுகள் மூலம் மின் உற்பத்தி ! உலகம் முழுவதும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் மெல்ல மூடப்பட்டு வருகின்றன . நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிகளவு கார்பன் வாயுக்களை வெளியிடுகிறது . எனவே , உலக நாடுகள் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளை மெல்ல மூடி புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்களை ஊக்குவித்து வருகின்றன . இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் பதிந்தா நகரில் செயல்பட்டு வந்த குருநானக் தேவ் மின்னாலை மூடப்பட்டது . அந்த இடமும் கூட விற்கப்பட்டுவிட்ட செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது . இந்திய மின்சார ஆணையம் , ஜப்பானிய நிலக்கரி ஆற்றல் மையம் ஆகிய இரு நிறுவனங்களு்ம் இணைந்து இனி விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன . இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதோடு , கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசுபாடும் தடுக்கப்படும் . 2018 ஆம் ஆண்டு மேற்சொன்ன இரு நிறுவனங்களும் செய்த ஆய்வு அடிப்படையில் , 440 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டதாக

சூழலியலில் போராடி வரும் இளைஞர்கள்!

படம்
              இளைய போராளிகள் ஜான் பால் ஜோஸ் இந்தியாவைச் சேர்ந்த சூழலியல் போராட்டக்கார ர் . உலகளவில் நடைபெறும் இயற்கை பேரிடர்களில் இந்தியாவைச் சார்ந்து கருத்துகளை முன்வைத்த சூழலியல்வாதி . இவர் எழுத்தாளரும் கூட . டெலானி ரினால்ட்ஸ் இவர் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் . மியாமி பல்கலைக்கழகத்தில் படித்தவர் . கடல்நீர்மட்டம் உயர்வது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறார் . ஷியா பட்டிஸ்டா அமெரிக்காவைச் சேர்ந்தவர் . நியூயார்க்கில் வசித்து வருகிறார் . பிரைடேஸ் பார் ப்யூச்சர் யூத் வெப்பநிலை மாற்ற சூழல் போராட்டத்தின் முக்கியமான தலைவர் . ஹோலி கில்லிபிராண்ட் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் .. இங்கிலாந்து நாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்திவர்கள் இவர்ரகள முக்கி ஆட்டும் பெல்டியர் கனடாவாசி . தூய்மையான தண்ணீருக்கு போராடி வருகிறார் . இதற்கான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் . பருவநிலை மாறுதல் போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடி வருகிறார் . ரித்திமா பாண்டே பதினொரு வயது சிறுமி . 2013 ஆம்

இனி தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தை இ வாகனங்களே தீர்மானிக்கும்!

உதய் சிங் மேத்தா, கூடுதல் இயக்குநர், கட்ஸ் நீங்கள் கூறும் சூழலுக்கு உகந்த மாறுதல்கள், போக்குவரத்து வாகனங்களால் வேலையிழப்பு ஏற்படுமே? வேலையிழப்பு மட்டுமே நேராது. புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். அதுபற்றியும் நீங்கள் யோசிக்கவேண்டும். எலக்ட்ரிக் வாகனங்களின் கொள்கையிலேயே இதில் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். புதிய எலக்ட்ரிக் வாகனங்கள், அதற்கான உதிரிபாகங்கள், பேட்டரிகள், பழைய வண்டிகள் என இச்சந்தையில் மாறுதல்களை ஏற்படுத்தும் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. குறைந்த கார்பனை வெளியிடுவது நகர்ப்புற அளவிலேனும் சாத்தியமாகுமா? நகர்ப்புறங்களுக்கும் கிராம ப்புறங்களுக்கும் போக்குவரத்து வசதி அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. உள்ளூர் அளவில் வாகனங்களை தயாரிப்பது மட்டுமே இதற்கான தேவையை ஈடுகட்டும். மாநில போக்குவரத்துத்துறை, மண்டலரீதியான போக்குவரத்துத்துறை அலுவலகம், போக்குவரத்து காவல்துறை, நகராட்சி ஆகியோரின் ஆதரவின்றி வாகனங்களை பயன்படுத்துவது கடினம். இதில் அதிர்ஷ்டவசமாக அரசு இ - வாகனங்களை ஆதரிக்கிறது. இதனால் , கோல்கட்டா போன்ற மாநிலத்தில் இ வாகனங்கள் அதிகரித்து வ