இடுகைகள்

கடல் சூழலியலாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீன்களைக் காப்பாற்றிய கடல் சூழலியலாளருக்கு அங்கீகாரம்!

படம்
indian women blog கடல் சூழலியலாளருக்கு ஃப்யூச்சர் பார் நேச்சர் விருது! திவ்யா கர்நாட், தன் இணையதளத்தில் மீன் தொடர்பான பல்வேறு உணவு வகைகளைப் பட்டியலிட்டுள்ளார். அதோடு சீசனில்  கடலில் கிடைக்கும் மீன்வகைகளை அதி துல்லியமாக பதிவு செய்துள்ள அக்கறைக்குத்தான் அவருக்கு ஃப்யூச்சர் ஃபார் நேச்சர் விருது (2019) கிடைத்துள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்த பெண், திவ்யா.  சிறுவயதிலிருந்து விலங்குகள் மீதான பிரியம், அவரை சூழலியலாளராக மாற்றியுள்ளது.  currentaffairsadda நான் முதலில் கால்நடை மருத்துவராகவே முயன்றேன். ஆனால் காட்டுயிர் சார்ந்த துறையில் காலூன்றி உள்ளேன் என புன்னகைக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது கடல் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்காக தமிழ்நாடு மற்றும் ஒடிஷாவில் பணியாற்றிவர் இவர். ஆமைகளை மீனவர்கள் அழிப்பது போல காட்சியை ஊடகங்கள் உருவாக்கினாலும் அதனை உண்மையில்லை என்று மறுக்கிறார் திவ்யா. சீசனில்லாத போது, மீன்பிடி தடைக்காலத்திலும அவர்களுக்கு வாழ்வாதாரமாக மாறுவது இந்த ஆமைகள்தான். இவற்றை விற்று வரும் பணத்தை, வாழ்வ