இடுகைகள்

வீரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆற்றல் மாநாட்டை உருக்குலைக்க முயலும் உள்நாட்டு தீவிரவாதிகளை தடுக்க முயலும் கமாண்டோ படையின் வீரதீரம்!

படம்
  operation special warfare c drama 35 எபிசோடுகள்  ப்ளூலைட்னிங் என்ற கமாண்டோ படை. அதில் மொத்தம் பதினான்கு வீரர்கள். எட்டு பெண்கள். ஆறு ஆண்கள். இவர்கள் அனைவரும் தங்கள் வேறுபாடுகளைப் பற்றி கவலைப்படாமல் போராடி தீவிரவாதிகளை வீழ்த்தி தூய ஆற்றல் மாநாட்டை எப்படி வெற்றிகரமாக நடத்தினர் என்பதே கதை.  இதில் எட்டு பெண் கமாண்டோக்கள் உள்ளனர். அவர்களில் நிங் மெங்தான் நாயகி. இவருடைய அண்ணன் தீவிரவாத தாக்குதலில், தங்கையைக் காப்பாற்றிவிட்டு இறந்துபோவார். இதன் விளைவாக அம்மாவிற்கு அழுது அழுதே கண் பார்வை போய்விடும். நிங்மெங், தனது அண்ணனைக் கொன்றவர்களை பழிவாங்க ராணுவத்தில் குறிப்பாக கமாண்டோ படையில் இணைவார். ஆனால், கமாண்டோ படை கேப்டன், நிங் மெங்கை மட்டும் வெளியேற்றுவதில் குறியாக இருப்பார். அவரை திட்டுவார். இழிவு செய்வார். ஆனால் நிங்மெங் திறமை மீது கமாண்டோ படையின் உயரதிகாரிக்கு நல்ல அபிப்பிராயம் நம்பிக்கை இருக்கும். எனவே அவர் அவளை வெளியேற்றக்கூடாது என கேப்டனை மிரட்டுவார்.  அடிப்படையில் பார்த்தால் தேசப்பற்று சீரியல்தான். ஆனால், ராணுவத்தில் கூட பெண்களை ஆண் வீரர்கள்தான் காப்பாற்ற வேண்டும். அவர்கள் செய்யும் பணியின்

போர்க்கலையைக் கற்ற பெண்ணை அலைகழிக்கும் ஆண்களை மையப்படுத்திய சீன சமூகம்! முலன் 2020

படம்
                முலன்    Director: Niki Caro Produced by: Chris Bender, Jake Weiner, Jason T. Reed Screenplay by: Rick Jaffa, Amanda Silver, Lauren Hynek, Elizabeth Martin ஆண்களுக்கு நிகரான தனது மூத்த பெண்ணுக்கு முன்னாள் போர் வீரர் பயிற்சி கொடுக்கிறார் . அதனை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த பெண்ணின் உயிர்சக்தி வலிமையாக உள்ளது . ஆனால் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அவள் பெண் என்பதற்காக அவமானப்படுத்துகிறார்கள் . இதனை எதிர்த்து அவள் எப்படி தனது திறமையை உலகிற்கு வெளிப்படுத்துகிறாள் , தனது சுற்றியுள்ள உறவினர்களுக்கு தன்னை எப்படி புரிய வைக்கிறாள் என்பதுதான் படத்தின் மையக்கதை . படத்தை பார்ப்பவர்களுக்கு சீனத்தின் எப்படி பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி அவர்களை செக்சுக்கு மட்டும் பயன்படுத்தினார்கள் என்பதே மனதில் ஓடும் . காரணம் , அந்த நாடு மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் பெண்களை அந்த காலத்தில் அப்படித்தான் ஒடுக்கினார்கள் . முலன் கோழியை எப்படி பஞ்சாரத்தில் அடைக்கிறாள் என்பதைக் காட்டும் காட்சியில் அவளது மன வலிமை , உடல் வலிமை , பெற்ற பயிற்சி என அனைத்தையும் காட்டி விடுகிறார்கள் .