நடுத்தர வயதில் காலம் வேகமாக நகர்வது தோன்றுவது ஏன்?
அறிவியல் தகவல்கள் மிஸ்டர் ரோனி நடுத்தர வயதில் காலம் வேகமாக நகர்வது தோன்றுவது ஏன்? இப்போதுதான் உடையை வாங்கினேன். ஆனால், அதற்குள் இந்த நாகரிகம் பழசாகிவிட்டதா? காலம் வேகமாக ஓடுகிறது என சிலர் ஆச்சரியப்படுவார்கள். அவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயது ஆசாமிகளாக இருப்பார்கள். குழந்தையாக இருப்பவர்களுக்கு நேரம் என்பது அப்படியே உறைந்து நிற்பது போல தோன்றும். இளையோருக்கு குழந்தையிலிருந்து நீண்ட தொலைவு பயணித்து வந்தாலும், காலம் வேகமாக நகர்ந்திருப்பதை அறியமாட்டார்கள். எதிர்காலம் என்ன விஷயங்களைக் கொண்டிருந்தாலும் நடைமுறை மட்டுமே நிஜம் என்பதை புரிய சிலகாலம் தேவை. ஒரு மனிதர் இயல்பாக நடைபாதையில் நடந்து செல்லும்போது சுற்றியுள்ள கட்டுமானங்கள் அப்படியே மாறிக்கொண்டே நவீனமாக மாறுவது போலத்தான் காலம் மாறுவதை கருதவேண்டும். காலம் வேகமாக நகருவதை நடுத்தர வயது கொண்டவர்கள் உணர்வார்கள். டிமென்சியா என்றால் என்ன? டிமென்சியா என்றால் மூளையில் உள்ள ஒருவரின் அறிவுத்திறன்களை இழக்கும் நோய் என்று கூறலாம். திட்டமிடல், கருத்துகளை கோர்வையாக கூறுவது, சுயமாக தன்னை கண்காணித்தல், நினைவுகள் ஆகியவற்றை நோயாளி இழந்துவிடுவா...