குழந்தை கடத்தலைத் தடுத்து அப்பாவின் களங்க கறையைத் துடைக்கும் மகன் - ட்ரிகர் - அதர்வா, தான்யா - சாம் ஆண்டன்

 









ட்ரிகர்
இயக்கம் சாம் ஆண்டன்
நடிப்பு அதர்வா, தான்யா பாலச்சந்திரன், முனீஸ்காந்த், சின்னிஜெயந்த்
இசை ஜிப்ரான்

 

அப்பாவின் கடந்த கால அவமானத்தை துடைக்கப் போராடும் மகனின் கதை.

அல்சீமரால் அதர்வாவின் அப்பா அருண்பாண்டியன் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். அவருக்கு இருக்கும் நினைவு எல்லாம் தான் ஒரு வழக்கு தொடர்பாக விசாரித்த தகவல்கள் மட்டுமே. அதை மட்டுமே காகிதத்தில் கிறுக்கி சுவற்றில் மறக்கக் கூடாது என ஒட்டி வைத்திருக்கிறார். அதை அதர்வா பார்த்து அதில் உள்ள மர்மம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதற்கான வாய்ப்பு இயல்பாகவே அவருக்கு ஆயுதக்கடத்தல் மூலமாக கிடைக்கிறது. அந்த வழக்கை ஆராயும்போது அதர்வாவுக்கு வழக்கின் அடிப்படை விஷயமாக பேரல்லல் கிரைம் என்பது புரிய வருகிறது. இதை வைத்து வழக்கை எப்படி தீர்த்தார் என்பதே படம்.

 

வேகமாக காட்சிகள் நகரவேண்டிய படம். அதை ஒளிப்பதிவாளரும், சண்டைப்பயிற்சி கலைஞரான திலீப் சுப்பராயனும் புரிந்துகொண்டு பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் சண்டைக்காட்சிகள் என வரும்போது  பார்ப்பவர்கள் வயிற்றில் அட்ரினலின்  சுரக்கிறது.

சாம் ஆண்டனின் இயக்கத்தில் ஹேக்கிங் செய்யும் விஷயம் மட்டும்தான் படத்தில் ஒட்டவில்லை. மற்றபடி நடிகர்கள் நடிப்பு பரவாயில்லை. பாரதவிலாஸ் என ஹோட்டல் நடத்துவது சரி என்றாலும் அதை வைத்து நகைச்சுவையை முயன்றிருக்கலாம். முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், நிஷா ஆகியோர் இருந்தும்கூட படத்தில் அவர்களுக்கு இடம் மிக குறைவு. அதர்வாவை மையப்படுத்துவதால் படத்தில் சண்டைக்காட்சிகள், உணர்ச்சிரீதியான விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

 

வில்லனாக நடித்த நடிகர் படத்தில் பெரும்பாலான இடங்களில் வருகிறார். படத்தின் அனைத்து விஷயங்களையும் அவர்தான் தீர்மானிக்கிறார். படத்தில் அழகம் பெருமாளை குற்றவாளிக்கு நெருக்கமாக தொடர்புபடுத்துவது போல ஒரு காட்சி வருகிறது. பிறகு அந்த காட்சிக்கு எந்த தொடர்பும் இல்லாதது போல பிற காட்சிகள் அமைந்துவிட்டன.  வில்லனின் மகனாக காவல்துறையில் இருக்கும் அதர்வாவின் நண்பர் என்பது ட்விஸ்ட்தான். ஆனால் குற்றுயிராக கிடப்பவர் தேவா எனும்போதே பலருக்கும் பொறி தட்டிவிடும். பெரும்பாலான படங்களில் இப்படி முக்கியமாக பெயர் கூறப்படுபவர் யாராக இருக்கமுடியும்? குற்றவாளிக்கு நெருக்கமானவராக இருப்பார். அல்லது அவர்களுக்கு காசு வாங்கிக்கொண்டு வேலை செய்வார்.

படத்தில் காதல் கிடையாது. அதற்கான காட்சிகளுக்கும் இயக்குநர் முயற்சிக்கவில்லை. அதுதான் படத்தை சற்றேனும் காப்பாற்றுகிறது.

ட்ரிகர் – துப்பாக்கி தோட்டா வேகம்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்