பார்க்க வேண்டிய இடம் - மான்ட் செயின்ட் மிச்செல் , பசிபிக் கடலில் ஏற்படும் மாசுபாடு
மான்ட் செயின்ட்
மிச்செல்
பிரான்ஸ்
நாட்டில் நார்மாண்டியில் அமைந்துள்ள தீவு. மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள்
தீவுக்கு அழகு சேர்க்கின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எல்லாமே கிரானைட்டில் உருவாக்கப்பட்டவை.
அனைத்தும் மலைமீது அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு ஜாலி
சுற்றுலா செல்ல நினைத்தால் காலையில் நேரமே எழுந்தால் சூரியக் கதிர்கள் உங்கள் மீது
படும்போது புகைப்படம் எடுக்கலாம். அதை இன்ஸ்டாகிராமில் பதியலாம். நேரம் ஆனால் நீங்கள்
மட்டுமல்ல, பிறருக்கும் தூக்கம் கலைந்துவிடும். எனவே நிறைய பேர் வந்துவிடுவார்கள்.
நெரிசலில் புகைப்படம் எடுத்து நமது வரலாற்றை நிரப்பவேண்டியிருக்கும். கார்களை இரண்டு
கி.மீ. தூரத்தில் நிறுத்திவிடவேண்டிய நிபந்தனை உண்டு. தொன்மை கட்டுமானங்களை மக்களின்
புகைப்பட பரவசத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஏற்பாடு.
ஆண்டுக்கு
3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து போகிறார்கள். மான்ச் செயின்ட் மிச்செலில்
அற்புதமாக கட்டப்பட்ட தேவாலயம் உண்டு. அடுத்து, இங்கு பாறைகளை பிளந்து உருவாக்கப்பட்ட
இடம், போர்க்காலத்தில் மக்கள் ஒளிந்துகொள்ள பயன்பட்டது. பிறகு மக்களை சிறை வைக்கும்
சிறையாகவும் பயன்பட்டது.
கடல் அலைகள்
குறைந்த சமயம்தான் தீவில் நடந்து சுற்றிப்பார்க்க முடியும். எனவே, சரியான நேரத்தை அறிந்து
பயணியுங்கள்.
வேர்ல்ட்ஸ்
ஹெரிடேஜ் சைட்ஸ் நூல்
2
பசிபிக் மாசுபாடு
கடலில் குப்பைகள்
சேருகிறது என்று நான் சொன்னால் அதை உங்களால்
எளிதாக கடந்து செல்ல முடியும். இன்று பலருக்கும் நீர்நிலைகளில் குப்பைகளை, மாசுபாடுகள்
சேர்வதை எளிதாக அறியமுடிகிறது. சூழலியல் சார்ந்த அக்கறை அந்தளவு வளர்ந்துள்ளது. ஆனால்
கழிவுகளை சீர்செய்யும் முயற்சிகள் அந்தளவு வேகமாக இல்லை.
பசிபிக் கடலில்
இரண்டு விதமாக குப்பைகள் சேர்கின்றன. ஒன்று, மேற்குப்புறம், கிழக்குப்புறம் என இரண்டு
வழிகளில் குப்பைகளை ஒன்றுசேருகின்றன. நீரோட்டத்தின் வழித்தடம் பற்றி அறிந்திருப்பீர்கள்.
அந்த முறையில் குப்பைகள் கடலுக்கு எளிதாக இழுத்து வரப்படுகின்றன. இவை ஆழ்கடலின் படுகையில்
சேகரிக்கப்படுகின்றன. இந்த முறையில் 70 சதவீத கழிவுகள் இப்படி கழிவுகளாக கடலடியில்
சேர்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தவகையில் 791 சதுர மைல் பரப்பை குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன.
இவற்றை கடல்
விலங்குகள் உணவு என நினைத்து சாப்பிட்டு உயிரிழந்துள்ளன. சூரிய வெளிச்சத்தில் பிளாஸ்டிக்
பட்டு வேதிவினை நடக்கும்போது நீரில் பாசிள் பெருகும். இது நீரிலுள்ள ஆக்சிஜனைக் குறைக்கிறது.
பத்தாண்டுகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் பத்து
மடங்கு அதிகரித்துவருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக