இடுகைகள்

அயோத்யா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பருந்து காப்பாற்றும் குழந்தை போர்மங்கையாக மாறும் கதை! - சீதா - மிதிலையின் போர்மங்கை- அமிஷ்

படம்
  சீதா மிதிலையின் போர்மங்கை சீதா  மிதிலை போர்மங்கை அமிஷ் திரிபாதி வெஸ்லேண்ட் பதிப்பகம் தமிழில் - பவித்ரா ஸ்ரீனிவாசன் அமிஷ் எழுதிய ராமாயணம் நான்கு நூல்களைக் கொண்டது. நான்காவது நூல் இன்னும் வெளியாகவில்லை. ராமன், சீதை, ராவணன் இந்த மூன்று நூல்களுமே நிறைய இடங்களில் சந்தித்து மீள்கின்றன. அவற்றை கச்சிதமாக நூலில் பொருத்திப் பார்த்து செம்மை செய்திருக்கிறார்கள். மூன்று நூல்களுமே வாசிப்பில் சிறப்பாகவே இருக்கின்றன.  இப்போது நாம் சீதாவைப் பார்ப்போம். ராமன், சீதை, ராவணன் என்ற மூன்று நாவல்களின் அடிப்படையும் அவர்களின் பிறப்பு, அதற்குப் பிறகு நடைபெறும் சில சிக்கலான சம்பவங்கள் அவர்களை எப்படி வடிவமைக்கின்றன, அதன் பொருட்டு அவர்கள் நடந்துகொள்ளும் விதம் என செல்கிறது.  சீதாவைப் பொறுத்தவரை அவள் யார் என்பது மூன்றாவது நூலான ராவணனைப் படித்தால் தான் தெரியும். இதிலும் நிறைய திருப்பங்களை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். குறிப்பாக ஸமீச்சி பாத்திரம். இது ஆண்களின் மீதான வெறுப்பு கொண்ட பெண் தளபதி பாத்திரம். இவள், தானாகவே முன்வந்து சீதாவுக்கு உதவுகிறாள். சிறுவயதில் நடந்த விபத்தில் சேரியில் வாழும் போக்கிரிகளை அடித்து உதைத்து

சட்டத்தை தனது வாழ்வாக கொள்பவனின் மனைவியை ராவணன் கொள்ளையடித்தால்..... - இஷ்வாகு குலத்தோன்றல் - அமிஷ்

படம்
  எழுத்தாளர் அமிஷ் இஷ்வாகு குலத்தோன்றல் அமிஷ் தமிழில் பவித்ரா ஸ்ரீனிவாசன்  வெஸ்லேண்ட் ராமாயணத்தை தனது பார்வையில் எழுதியுள்ளார். இதில் மூன்று பாக நூல்கள் உள்ளன. ராவணன் ஆர்ய வர்த்தாவின் எதிரி நூலை முன்பே படித்து அதற்கான விமர்சனத்தை எழுதியுள்ளோம். இப்போது, இந்த நூலைப் பற்றி பார்ப்போம். வாய்ப்பு கிடைத்தால் சீதா - மிதிலாவின் போராளி நூலையும் வாசித்து எழுதுவோம்.  கதை தொடங்குவது தண்ட காரண்யா வனத்தில். லஷ்மணனும், ராமனும் மானை வேட்டையாட தயாராக இருக்கிறார்கள். அதை வேட்டையாடி தூக்கிக்கொண்டு வரும்போது சீதா , ராமனை அழைக்கும் குரல் கேட்கிறது. அதை தேடி வேகமாக போகும்போது ராவணன் சீதாவை புஷ்பக விமானத்தில் கடத்திக்கொண்டு செல்கிறான். பாதுகாப்பிற்கு இருந்த ஜடாயூ ஏறத்தாழ குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறார்.  கதை பின்னோக்கி செல்கிறது. அதில் அயோத்யா நகரம் எப்படி இருக்கிறது, அதன் கலாசாரம், அங்குள்ள மக்கள் எப்படி என மெல்ல வாசகர்களுக்கு தெரிய வருகிறது.  தசரதன் சப்தசிந்து கூட்டமைப்பில் மன்னராக இருக்கிறார். இதுதான் பல்வேறு சிற்றரசுகளின் கூட்டமைப்பு. இதனை பல்வேறு அடக்குமுறைகளை செய்து மிரட்டி, ஒடுக்கி கப்பம் கட்டு