இடுகைகள்

செயற்கை நுண்ணறிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

15 நொடி குரல் இருந்தால் போதும்- பேச்சு, பாட்டு எதையும் உருவாக்க முடியும்!

படம்
  ஏஐ மூலம் எந்த குரலிலும் எந்த மொழியிலும் பேசலாம்! ஓப்பன் ஏஐ நிறுவனம், அடுத்த சர்ச்சைக்குரிய தயாரிப்பை உருவாக்கியுள்ளது. இதன்படி, ஏதேனும் ஒருவரின் குரலைக் கொடுத்தால், அதை வைத்து தேசியகீதம் பாடச்சொன்னால் அல்லது குத்துப்பாட்டு பாடச்சொன்னால் கூட அதைச் செய்யமுடியும். மார்ச் 29 வெளியாகியுள்ள இந்த குரல் எஞ்சினில் ஒருவர் பதினைந்து நொடிக்கு குறையாத ஆடியோ கிளிப் ஒன்றை பதிவேற்றினால் போதும். அதை வைத்து, பல்வேறு மொழிகளில் அந்த குரலை பேச வைத்து பாடவைத்து மஜா செய்ய முடியும். தற்போதைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குரல் எஞ்சின் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  குழந்தைகளுக்கு குரல் வழியாக பாடங்களை எளிதாக நடத்தலாம். மாற்றுத்திறனாளிகளுக்கும் இது பிரயோஜனமாக இருக்கும். எழுத்து வழியாக ஒலி என்ற நோக்கத்தில் குரல் எஞ்சின் செயல்படுகிறது. மாணவர்களுக்கு பல்வேறு குரல் சாம்பிள்களை வைத்து குரல் பதிவுகளை உருவாக்கி பாடங்களை நடத்த முடியும். படிக்கத் தெரிந்தவர், தெரியாதவர் என அனைவருக்கும் பயன்படும்படியான படைப்பு இது. இதன் தயாரிப்பில் சாட்ஜிபிடி 4 பயன்பாடும் உள்ளது.        2022ஆம் ஆண்டு தொடங்கி, குரல் எஞ்சின் ஆராய்ச்சி

செயற்கை நுண்ணறிவில் சாதித்த தொழிலதிபர்கள் அறிமுகம்!

படம்
  ராபின் லீ, இயக்குநர், பைடு ராபின் லீ இயக்குநர், தலைவர், துணை நிறுவனர் – பைடு சீனாவின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை கணிக்கும் தொழில்நுட்பவாதி. கூகுளை பிரதியெடுத்து பைடு எனும் தேடுதல் எந்திரத்தை உருவாக்கியவர், இப்போது செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சிகளில் இருக்கிறார். செயற்கை நுண்ணறிவு பாட்களில் அமேஸானின் அலெக்ஸா போல ஷியாவோடு என்ற பாட்டை உருவாக்கி பைடு விற்று வருகிறது. 2000ஆம் ஆண்டு தொடங்கி ஏஐ ஆராய்ச்சியில் ராபின் லீ இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, எர்னி பாட் என்பதை ராபின் லீ உருவாக்கினார். இந்த கருவி, சீன அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது மகிழ்ச்சியான விஷயம். ராபின் லீ அரசின் செயற்கை நுண்ணறிவு திட்ட அமைப்பில் கூட உறுப்பினராக இருக்கிறார். பைடுவிற்கு தற்போது மாதம்தோறும் 677 மில்லியன் பயனர்கள் உள்ளனர். 48 மில்லியன் டாலர்கள் வருமானம் சம்பாதிக்கும் பைடு, தொடக்கத்தில் மைக்ரோசிப்களுக்கு அமெரிக்க நிறுவனமான என்விடியாவை சார்ந்தே இயங்கியது. ஆனால் அமெரிக்க அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக இப்போது உள்நாட்டில் தனக்கு தேவையான சிப்களை தானே தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

செயற்கை நுண்ணறிவில் சாதனை படைக்கும் தொழிலதிபர்கள்!

படம்
  உர்டாசன், வாபி லீலா இப்ராகிம், டீப் மைண்ட் செயற்கை நுண்ணறிவின் பிரம்மாக்கள் டாரியோ, டேனியெலா அமோடெய் துணை நிறுவனர்கள், ஆந்த்ரோபிக்   ஆந்த்ரோபிக், லாபநோக்கற்ற ஏஐ ஆராய்ச்சி நிறுவனம். செயற்கை நுண்ணறிவை ஆராய்ச்சி செய்வது எளிதல்ல. அதற்கு தொடக்கத்திலேயே அதிக நிதி தேவை. எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ எக்சேன்ஞ்ச், சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் பெருமளவு நிதி பெற்று இயங்கி வருகிறது. ஓப்பன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய ஏஐ மாடல்களுக்கு நிகராக சாட்பாட், கிளாட் 2 ஆகிய மாடல்களை உருவாக்கியுள்ள நிறுவனம்தான் ஆந்த்ரோபிக். 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தில் டாரியோ இயக்குநராகவும், டேனியெலா தலைவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சகோதர உறவுமுறையைக் கொண்டவர்கள். இந்த நிறுவனத்தை ஏழு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தொடங்கினர். இவர்கள் அனைவருமே ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் என்பதுதான் முக்கியமான அம்சம். ‘’நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி பற்றி வெளியில் அதிகம் பேசுவதில்லை. அதற்கு காரணம், அதை கார்ப்பரேட் அறிக்கை போல மாற்றவேண்டாம் என்ற நோக்கத்தில்தான்   ’’ என இயக்குநர் டாரியோ தெளிவாக பேசுகிறார

செயற்கை நுண்ணறிவை எப்படி புரிந்துகொள்வது?

படம்
  ஹியூமன் கம்பாட்டிபிள் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் வைகிங் செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையில் பயன்பாட்டுக்கு வந்தால் என்ன விதமான நல்லவை, அல்லவை நடைபெறும் என்பதை விளக்கி எழுதப்பட்ட நூல். பயப்பட வேண்டியதில்லை. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அதன் வகைகள், செயல்பாட்டு வரம்புகள், அதைப்பற்றிய நூல்கள், நுண்ணறிவை மேம்படுத்த உதவிய கணிதவியலாளர்கள், அவர்களது தத்துவங்கள், கோட்பாடுகள், எழுதிய நூல்கள் என ஏராளமான தகவல்களை ஆசிரியர் விவரிக்கிறார். அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையை தெரிந்துகொண்டால் போதும் என்று நினைப்பவர்களுக்கான நூல் இதுதான். அந்த பிரிவிலேயே ஏராளமான தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார். கூகுளின் டீப் மைண்ட் தயாரிப்புகள் என்னவிதமான கணித திறன் கொண்டவை என விவரிக்கும் பகுதி இதற்கு உதாரணம். செயற்கை நுண்ணறிவை அரசு கையில் எடுத்து பயன்படுத்தினால் நன்மை என்ன, தீமைகள் என்ன என்று ஆராய்ந்த விதம் முக்கியமானது.. இந்த வகையில் சீனா மக்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க என்று அரசு சொன்னாலும், தனக்கு எதிரி என்று தோன்றுபவர்களை எளிதாக பிடித்து ஒழித்துக்கட்ட

புதுமையான சிந்தனையால் சாதனை படைத்த தொழில்நிறுவனங்கள், தொழிலதிபர்கள் - டைம் வார இதழ்

படம்
  விர்டா ஹெல்த் கேரோஸ் ஜெனரேஷன் ஜீனியஸ் பப்பாயா குளோபல் ரன்வே புதுமையான சாதனை படைத்த தொழிலதிபர்கள் தி நார்த் ஃபேஸ் சர்குலர் குளோத்திங் ஆடைக்கழிவுகளைத் தவிர்க்கும் புதுமையான முறை உலகம் முழுக்க வேகமான முறையில் உடைகளை விற்கிறார்கள். அதை வாங்கும் மக்கள் உடைகளை பலமுறை அணிவது குறைவு. அதை விரைவிலேயே நாகரிகம் இல்லாமல் போய்விட்டது என்று கூறி தூக்கி எறிந்துவிடுகிறார்கள். இதை தி நார்த் ஃபேஸ் என்ற நிறுவனம் மாற்றுகிறது. பயன்படுத்திய துணிகளை மக்களிடம் இருந்து வாங்கி அதை சற்று மேம்படுத்தி மீண்டும் விற்கிறது. இதன்மூலம் உடைகளின் வாழ்நாள் அதிகரிக்கிறது. குப்பையாக நிலத்தில் தேங்குவது தவிர்க்கப்படுகிறது. தி நார்த் ஃபேஸின் தலைவர் நிக்கோல் ஓட்டோ. தெராபாடி வலியைக் குறைக்கும் கருவி வலியில் இருந்து நிவாரணம் தசையில் ஏற்படும் வலியைக் குறைக்கும் கருவி. தொடக்கத்தில் விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள் என்றே தொழில்ரீதியாக பயன்பட்டது. இப்போது இக்கருவியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து இன்றுவரை மட்டுமே பதினைந்து பொருட்கள் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. தங்களத

வாகனத்துறையை மாற்றியமைத்த செயற்கை நுண்ணறிவு!

படம்
  செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் – வேலையை பாதிக்குமா? 2005ஆம் ஆண்டு வெளியான பேட்மேன் பிகின்ஸ் ஆங்கிலத் திரைப்படத்தில், நாயகன் அதிநவீன கணினியைப் பயன்படுத்தி ரிமோட் முறையில் பேட்மொபைலை கட்டுப்படுத்துவார். தனது குரல் மூலம் அதனை இயக்கி செயல்படுத்துவார். அறிவியல் புனைகதை படங்களில் இந்த படம் முக்கியமானது. நடைமுறையில், 2023ஆம் ஆண்டில் கூட மெஷின் கன்களை, புவிஈர்ப்புவிசைக்கு எதிராக பயன்படுத்துவது கடினமானது. இன்றுவரையில் கூட இந்த தொழில்நுட்பம் உருவாகி வளரவில்லை. செயற்கை நுண்ணறிவு பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களிலும் ஓட்டும் வாகனங்களிலும் கூட செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்த வகையில் எதிர்காலத்தில் நீங்களும் டிஜிட்டல் பொருட்களை பேட்மேன் போல பயன்படுத்த வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் தானியங்கி முறையில் கார்களை குரலைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். அப்படித்தான் இன்று கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களின் தலையீடு இன்றி, ஸ்டீயரிங், ஆக்சிலேட்டர், பிரேக் ஆகியவற்றை டெஸ்லா, கடிலாக் ஆகிய கார்கள் கட்டுப்படுத்த தொடங்கியுள்ளன. இதற்கு இந்த நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவை தங்களது கார்கள

வயதுவந்தவர்களுக்கு மூளையின் அமைப்புகள் புதிதாக வளர்கின்றன

படம்
                விட் ஈகிள்மேன் David eagleman நரம்பியல் அறிவியலாளர் , stanford university, california நமது மூளை இன்றும் கூட அதிசயமான பொருள் . அதில் கற்றல் எப்படி நடைபெறுகிறது என்பதை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இன்றும் கண்டறிய முயன்று வருகிறார்கள் . இப்படி மூளையில் பல்வேறு உணர்வுநிலைகளில் எப்படி கற்றல் நடைபெறுகிறது என டேவிட் ஆராய்ச்சி செய்துவருகிறார் .   மனிதர்கள் தாம் பெறும் அனுபவங்களைப் பொறுத்து மூளையின் மாறுதல்களைப் பற்றியதுதானே உங்களது ஆராய்ச்சி ? மூளையின் அமைப்பு மாறுவதைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன் . இந்த துறையில்தான் நீங்கள் எனது பெயரைப் பார்க்க முடியும் . இப்படித்தான் என்னை நீங்கள் அடுத்தமுறை நினைவுபடுத்திக்கொள்ளமுடியும் . மூளையை தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருள் போல என்றுதான் நினைத்தார்கள் . ஆனால் நான் அதை லைவ் வயர்ட் என்ற அமைப்பாக பார்க்கிறேன் . அதாவது அனுபவங்களுக்கு ஏற்றபடி நிகழ்காலத்தில் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது . இதன் வலிமை மாறிக்கொண்டே இருக்கும் . அதற்கேற்றாற்போல பிளக்குகளை பிடுங்கி வேறிடம் பொருத்திக