வாகனத்துறையை மாற்றியமைத்த செயற்கை நுண்ணறிவு!

 









செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் – வேலையை பாதிக்குமா?

2005ஆம் ஆண்டு வெளியான பேட்மேன் பிகின்ஸ் ஆங்கிலத் திரைப்படத்தில், நாயகன் அதிநவீன கணினியைப் பயன்படுத்தி ரிமோட் முறையில் பேட்மொபைலை கட்டுப்படுத்துவார். தனது குரல் மூலம் அதனை இயக்கி செயல்படுத்துவார். அறிவியல் புனைகதை படங்களில் இந்த படம் முக்கியமானது. நடைமுறையில், 2023ஆம் ஆண்டில் கூட மெஷின் கன்களை, புவிஈர்ப்புவிசைக்கு எதிராக பயன்படுத்துவது கடினமானது. இன்றுவரையில் கூட இந்த தொழில்நுட்பம் உருவாகி வளரவில்லை.

செயற்கை நுண்ணறிவு பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களிலும் ஓட்டும் வாகனங்களிலும் கூட செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்த வகையில் எதிர்காலத்தில் நீங்களும் டிஜிட்டல் பொருட்களை பேட்மேன் போல பயன்படுத்த வாய்ப்புள்ளது.

செயற்கை நுண்ணறிவு மூலம் தானியங்கி முறையில் கார்களை குரலைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். அப்படித்தான் இன்று கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மனிதர்களின் தலையீடு இன்றி, ஸ்டீயரிங், ஆக்சிலேட்டர், பிரேக் ஆகியவற்றை டெஸ்லா, கடிலாக் ஆகிய கார்கள் கட்டுப்படுத்த தொடங்கியுள்ளன. இதற்கு இந்த நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவை தங்களது கார்களின் தயாரிப்பில் பயன்படுத்துவதுதான் காரணம்.

அட்வான்ஸ் டிரைவன் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் மூலம் ஓட்டுநரின் செயல்பாட்டை கண்காணித்து அவருக்கு ஏதாவது பிரச்னை என்றால், உடனே வாகனத்தை தானியங்கு முறையில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முடியும். இப்போது தொழில்நுட்பம் அந்தளவு வேகமாக முன்னேறியுள்ளது. இந்த முறையில், எளிதாக விபத்துகளைக் கண்காணித்து தடுக்க முடியும்.  இந்தியாவில் உள்ள மெர்சிடஸ் நிறுவனம், மேற்சொன்ன தொழில்நுட்பத்தை குரல் மூலம் இயங்கும்படி செயல்படுத்தியுள்ளது. டெலிடயாக்னாசிஸ்  எனும் ஆப்பின் வசதி மூலம் காரில் உள்ள பிரச்னையை, சேவைக்குழுவினர் அறிந்து உதவிகளை வழங்குகிறார்கள். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வாகனத்தை ஒட்டுவதில் கணினி பாதி, மனிதர்கள் பாதி என செயல்பாட்டை மாற்றியிருக்கிறார்கள்.

டெஸ்லா  நிறுவனம், தனது மென்பொருள் சார்ந்த மேம்பாட்டை முக்கியப்படுத்துகிறது. இதன்மூலம், மரபான கார் நிறுவனங்களை தாண்டி யோசிக்கி றது. இது நவீன உலகில் பலரையும் ஈர்க்க கூடியதாக உள்ளது. தொழில்நுட்பத்தை மின் வாகனங்களில் வேகமாக செயல்படுத்தி துறையில் மாற்றம் ஏற்படுத்திய நிறுவனமாக டெஸ்லாவைக் கூறலாம். அதேசமயம் வெறும் தொழில்நுட்பம் பெரியளவு விற்பனையை கார்களுக்கு ஏற்படுத்தித் தராது. அதன் செயல்பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்தும் தொழில்நுட்பமே அதை தனித்துவமாக்கி விற்பனையை அதிகரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும் அதன் வணிக ரீதியான வெற்றியே சந்தையில் அதன் முன்னேற்றத்தை தீர்மானிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

எந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு கார்களின் உற்பத்தியில் பயன்படத் தொடங்கியபிறகு அதன் பராமரிப்பு சேவைகள் கூட பெருமளவு குறைந்துவிட்டன. அதாவது,.பராமரிப்புக்கான  குறிப்பிட்ட கால அளவை செயற்கை நுண்ணறிவே உங்களுக்குக் கூறிவிடும். எனவே, கார் பழுதாவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கார் உற்பத்தியில் கழிவுகளை குறைப்பது, இணைய பாதுகாப்பு ஆகியவை ஒட்டுமொத்த வாகனத்துறையை மாற்றியுள்ளன. செயற்கை நுண்ணறிவு அதுதொடர்பான பல்வேறு மென்பொருட்கள் என கார் உற்பத்தித்துறையே மாபெரும் மாற்றங்களை சந்தித்து வருகிறது.

அதேசமயம், கார் உற்பத்தித்துறையில் பணியாற்றும் பணியாளர்களின் சம்பளம் ஆண்டுக்கு 10-12 சதவீதம் உயர்ந்து வருகிறது. இந்த வகையில் செலவுகளை குறைக்க ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் உதவலாம். மேலும், இதற்கு உதவும்படியான புதிய வேலைவாய்ப்புகள் கூட வாய்ப்புள்ளது.

 

பிரேனா லிது

பிஸினஸ் டுடே 28 மே 2023

image - pixabay

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்