இடுகைகள்

ஆஞ்சல் மல்ஹோத்ரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தொற்று கால வேதனைகளை மறக்கவேண்டும். பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும்! - ஆஞ்சல் மல்ஹோத்ரா

படம்
  ஆஞ்சல் மல்ஹோத்ரா ஆஞ்சல் மல்ஹோத்ரா எழுத்தாளர் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும் பிரிவினை கலவரங்கள் நடைபெற்றும் 75 ஆண்டுகள் ஆகின்றன. இன்று பிரிவினையால் பாதிக்கப்பட்ட குடும்ப வாரிசுகள் பலரும் வெளிநாடுகளில் பரவி வாழ்கின்றன. எழுத்தாளர் ஆஞ்சல் மல்ஹோத்ரா, தி லாங்குவேஜ் ஆஃப் ரிமெம்பரிங் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் பிரிவினை பற்றிய பல்வேறு நினைவுகளை பதிவு செய்துள்ளார். அவரிடம் இதுபற்றி பேசினோம்.  நூலில் நீங்கள் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் பேரன்கள் ஆகியோருடன் பேசியுள்ளீர்கள். இந்த சூழல் எப்படியிருந்தது? பிரிவினையால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டிகள், அவர்களின் வாரிசுகள், பேரன்கள் ஆகியோருடன் நிறைய நேரம் செலவிட்டுத்தான் நூலுக்கான தகவல்களைத் திரட்டினேன். பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என்றாலும் அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை எளிதாக மறக்கமுடியாது. அதனை எளிதில் அகற்றிவிடவும் முடியாது.  பெரும்பாலான பேட்டிகளை நான் பாதிக்கப்பட்டவர்களின் பேரன்கள், வாரிசுகளிடம்தான் எடுத்தேன்.