இடுகைகள்

கிரிப்டோகரன்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிரிப்டோகரன்சியை எப்படி வாங்குவது?

படம்
  கிரிப்டோகரன்சியை இரண்டு வழிகளில் வாங்கலாம். ஒன்று, அதனை விற்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கலாம். அல்லது புதிய கரன்சிகளை நாமே உருவாக்குவது.  இதில் எளிதானது பரிவர்த்தனை மூலம் வாங்குவதுதான். இந்த முறையில் இந்தியாவில் வாசிர்எக்ஸ், காயின்டிசிஎக்ஸ், காயின்ஸ்விட்ச் கியூபர், ஸெப்பிளே, பிட்பிஎன்எஸ், ஜியோட்டஸ் ஆகிய நிறுவனங்களைப் பயன்படுத்தி கரன்சிகளை வாங்கலாம்.  இதில் வணிகம் செய்ய அல்லது முதலீடு செய்ய ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உங்களைப் பற்றி நோ யுவர் கஸ்டமர் தகவல்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். ரூபாயைப் பயன்படுத்தி கரன்சிகளை வாங்கலாம். முதன்முதலில் கரன்சிகளை வாங்குபவர் ஐஎன்ஆர் ரூபாய்களை வாலட்டில் நிரப்பி வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் கிரிப்டோகரன்சியை எளிதாக வாங்க முடியும்.  கிரிப்டோகரன்சி வாலட்டில் ஒருவருக்கு தனித்துவமான எண்கள் வழங்கப்படும். இ வாலட், ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை முறையில் ஒருவர் வாலட்டில் பணத்தை  நிரப்பலாம்.  இந்திய அரசு கிரிப்டோவை மறைமுகமாக அங்கீகரித்து வரி போட்டாலும் கூட நேரடியான அனுமதியை வழங்கவில்லை. எனவே வங்கி மூலம் நீங்கள் பணத்தை இ வாலட்டில் நிரப்ப முடியாது. இப்போதைக்கு மொப

கிரிப்டோகரன்சி பற்றிய அறிமுகம்!

படம்
  கிரிப்டோகரன்சிக்கு வங்கிகள் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் அதில் தொழில் செய்பவர்கள் சம்பாதிக்கும் லாபத்தில் வரி 30 சதவீதம் என ஒன்றிய அரசு லேட்டரல் திங்கிங் முறையில் யோசித்துள்ளது. முதலில் கிரிப்டோகரன்சி என்றால் என்பதைப் பார்ப்போம்.  ரூபாயை எப்படி டாலருடன் ஏற்றுமதி இறக்குமதிக்கு பயன்படுத்துகிறோமோ அதே முறையில்தான் கிரிப்டோகரன்சியும் செயல்படுகிறது. ரூபாய், டாலர் என்பதை நாம் கண்ணால் பார்த்து கையில் தொட முடியும், ஆனால் கிரிப்டோகரன்சியை டிஜிட்டல் முறையில்தான் பார்க்க முடியும். இதனை வியாபார பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். என்கோடிங் முறையில் பரிவர்த்தனை பாதுகாப்பாக நடைபெறும். இவை மின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு குறைவான அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  உலகளவில் 11 ஆயிரம் கிரிப்டோகரன்சிகள் உண்டு. ஆனால் அதில் பிரபலமாக புழங்கத்தக்க வகையில் இருப்பது மிகச்சிலவே. அதில் பிட்காயினும், எத்ரியமும் உண்டு.   கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நடப்பது தனியார் நிறுவனத்தின் சர்வர்களுக்குள்தான். சாதாரண வியாபாரத்தில் வங்கி இடைமுகமாக இருக்கும். இங்கு தனியார் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு

கிரிப்டோகரன்சியில் சம்பளம் வாங்கும் மெஸ்ஸி!

படம்
  பார்சிலோனா கிளப்பிலிருந்து கண்ணீர் மல்க வெளியேறினாலும் தற்போது கிரிப்டோகரன்சியில் சம்பளம் வாங்கி ஆசுவாசமாகியிருக்கிறார்  கால்பந்து வீரர் மெஸ்ஸி. பிரெஞ்சு கிளப் ஒன்றுக்கு இரண்டு ஆண்டுகள் சம்பளத்தில் ஒப்பந்தமாகியவர், தனது சம்பளத்தில் ஒருபகுதியை ஃபேன் டோக்கனாக வாங்கியுள்ளார்.  பேன் டோக்கன் என்பதை நான் ஃபங்கியபிள் டோக்கன் என அழைக்கின்றனர். புரியும்படி சொன்னால் இணையத்தில் பதிவேடுகளில் உள்ள மாற்ற முடியாத மதிப்பு கொண்ட சொத்து என்று வைத்துக்கொள்ளலாம். பிட்காயினை எப்படி கிரிப்டோகரன்சி என்று சொல்கிறார்களோ அதேபோலத்தான் இதுவும். இதனை அவர் பின்னாளில் பணமாக மாற்றிக்கொள்ளலாம். அல்லது அந்த டோக்கன்களை பயன்படுத்தி வேறு பொருட்களைக் கூட வாங்கலாம்.  கிரிப்டோ டோக்கன்களை யாராவது வாங்குகிறார்களா என்றால் அதற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.இவர்கள் பணம் கொடுத்து இந்த டோக்கன்களை வாங்குகிறார்கள். இதைப் பயன்படுத்தி ஆக்மென்ட் விளையாட்டுகளை இணையத்தில் விளையாடலாம். கிளப்புகளில் எடுக்கும் சில முடிவுகளுக்கு வாக்களிக்க கூட இந்த டோக்கன்களை பயன்படுத்தும் வசதி உள்ளது. ஃபேன் டோக்கன்களை சோசியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வழங்கு

லைபீரியா அரசுக்கு உதவிய ஒடிஷா டெக் இளைஞர்! - நியூஸ் ஜங்ஷன்

படம்
நியூஸ் ஜங்ஷன் 11.8.2021 புதன் கிழமை   ஆஹா! கிரிப்டோகரன்சி ஆட்டோ! இந்தியாவில் உள்ள ஆட்டோ க்காரர், கிரிப்டோகரன்சியில் பயணக்கட்டணத்தை செலுத்தலாம் என எழுதி வைத்து இணையத்தில் வைரலாகி வருகிறார். இப்புகைப்படம் எந்த நகரத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும், கிரிப்டோகரன்சியை ஏற்கும் முதல் ஆட்டோக்காரர் இவர்தான் என்ற புகழை முகம்தெரியாத ஆட்டோக்கார ர் பெற்றுவிட்டார். உலகளவில் தொழிலதிபர் எலன் மஸ்க் கிரிப்டோகரன்சியை ஏற்றுள்ளார். இந்தியாவில் ரிசர்வ் வங்கி இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை என்றாலும், பல்வேறு நிறுவனங்கள் டிஜிட்டல் கரன்சி வணிகத்தில் மெல்ல இறங்கி வருகின்றன.  https://www.indiatimes.com/trending/social-relevance/auto-rickshaw-accepts-payments-in-cryptocurrency-goes-viral-546942.html யுவான்ஜியாங் ஆற்றுப்பகுதியில் பாலத்தைக் கூட்டமாக கடந்துசெல்லும் ஆசிய யானைகள்! இடம் யுன்னான், சீனா  https://www.reuters.com/news/picture/top-photos-of-the-day-idUSRTXFFSQQ அங்கீகாரம் சைபர் சக்கரவர்த்தி! ஒடிஷாவின் புல்பானி பகுதியைச்  சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர், சௌம்யா ரஞ்சன் சாஹூ. இவர், ஆப்பிரிக்க ந

2021இல் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன? சூழல், அலுவலகம், கல்வி

படம்
                      202 1 சூழல் மாற்றங்கள் சூழல் கட்டிடங்கள் பயன்பாட்டிலுள்ள கட்டிடங்கள் பயன்படுத்தும் ஆற்றல் காரணமாக 30 சதவீத பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கின்றன . அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரம் உணவகங்கள் தவிர பிற நிறுவனங்கள் வீடுகளில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் பிறப்பித்துள்ளன . இதனால் ஜூன் 2021 முதல் அனைத்து வீடுகளிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களையே பயன்படுத்த முடியும் . பிளாக்பவர் என்ற கட்டுமான நிறுவனம் , குறைவாக ஆற்றலைப் பயன்படுத்தும் வீடுகளை கட்டித்தருகிறது . இம்முறை பிற நாடுகளிலும் பிரபலமாக வாய்ப்புள்ளது . உள்ளூர் சந்தை உள்நாட்டில் விளையும் காய்கறிகளை , உள்நாட்டிலேயே சந்தைப்படுத்துவது தொடங்கப்படலாம் . பல நாடுகளில் பொதுமுடக்கம் தொடர்வதால் அங்கு சரக்குப் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது . உள்நாட்டு விற்பனை மூலம் மக்களின் உணவுப் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்தலாம் . நோய்த்தொற்று காரணமாக நகரங்களிலிருந்து கிராமத்திற்கு திரும்பியுள்ள தொழிலாளர்களால் விவசாயத்துறை வருவாய் கூடலாம் . பசுமை முதலீடு அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம்

ஃபேஸ்புக்கின் லிப்ரா புகழ்பெறுமா? - புதிய கிரிப்டோகரன்சி!

படம்
லிப்ரா கிரிப்டோ கரன்சி மக்களை ஈர்க்குமா?  சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், லிப்ரா எனும் புதிய கிரிப்ட்டோ கரன்சியை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.  நவீன உலகில் அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இணையத்தையே நம்பியுள்ளன. இதில் மக்கள் செய்யும் பணப்பரிமாற்றமும் கூட பல்வேறு வகையில் பாதுகாப்பானதாகவும் நவீனமாகவும் மாறிவருகிறது. இணையத்தில் கட்டற்ற வணிகம் செய்வதற்காக உருவானதுதான் கிரிப்டோகரன்சி. இதிலுள்ள பலமும் பலவீனமும் இதனை அரசும், மத்திய வங்கிகளும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான். பிளாக்செயின் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கிரிப்டோகரன்சிகள் இயங்கிவருகின்றன. இந்தியாவில் வணிகத்திற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை. இதனால், கிரிப்டோகரன்சிகளின் புழக்கம் குறையவெல்லாம் இல்லை. சட்டத்திற்கு புறம்பாகவும் பிட்காயின் கரன்சிகள், இணையம் வழியாக வணிகத்தில் புழங்கி வருகின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவிருக்கும் லிப்ரா கரன்சி, கட்டற்றதல்ல. இதனை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள தன்னார்வ அமைப்பு கட்டுப்படுத்துகிறது. உலகெங்கும் உள்ள லிப்ரா அசோச