கிரிப்டோகரன்சியில் சம்பளம் வாங்கும் மெஸ்ஸி!

 





பார்சிலோனா கிளப்பிலிருந்து கண்ணீர் மல்க வெளியேறினாலும் தற்போது கிரிப்டோகரன்சியில் சம்பளம் வாங்கி ஆசுவாசமாகியிருக்கிறார்  கால்பந்து வீரர் மெஸ்ஸி. பிரெஞ்சு கிளப் ஒன்றுக்கு இரண்டு ஆண்டுகள் சம்பளத்தில் ஒப்பந்தமாகியவர், தனது சம்பளத்தில் ஒருபகுதியை ஃபேன் டோக்கனாக வாங்கியுள்ளார். 

பேன் டோக்கன் என்பதை நான் ஃபங்கியபிள் டோக்கன் என அழைக்கின்றனர். புரியும்படி சொன்னால் இணையத்தில் பதிவேடுகளில் உள்ள மாற்ற முடியாத மதிப்பு கொண்ட சொத்து என்று வைத்துக்கொள்ளலாம். பிட்காயினை எப்படி கிரிப்டோகரன்சி என்று சொல்கிறார்களோ அதேபோலத்தான் இதுவும். இதனை அவர் பின்னாளில் பணமாக மாற்றிக்கொள்ளலாம். அல்லது அந்த டோக்கன்களை பயன்படுத்தி வேறு பொருட்களைக் கூட வாங்கலாம். 

கிரிப்டோ டோக்கன்களை யாராவது வாங்குகிறார்களா என்றால் அதற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.இவர்கள் பணம் கொடுத்து இந்த டோக்கன்களை வாங்குகிறார்கள். இதைப் பயன்படுத்தி ஆக்மென்ட் விளையாட்டுகளை இணையத்தில் விளையாடலாம். கிளப்புகளில் எடுக்கும் சில முடிவுகளுக்கு வாக்களிக்க கூட இந்த டோக்கன்களை பயன்படுத்தும் வசதி உள்ளது. ஃபேன் டோக்கன்களை சோசியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 

ஆர்செனல், ஆஸ்டன் வில்லா, மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, பார்சிலோனா, இன்டர்மிலன் என நிறைய அணிகள் ஃபேன் டோக்கன்களை வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்து கிரிப்டோ நிறுவனங்களோடு இணைந்துள்ளன.  கிளப் எடுக்கும் கிட் டிசைன்,  கோல் அடிக்கும்போது இசைக்கப்படும் இசை, விளையாட்டு போட்டிக்கு முன்னே வீர ர்கள் அழைத்துச்செல்லப்படும் நகரங்கள் ஆகியவற்றை ஃபேன் டோக்கன் மூலம் ரசிகர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம். 35 மில்லியன் மெஸ்ஸியின் சம்பளத்தில் ஃபேன் டோக்கன்களும் ஒரு அங்கம். 

2018ஆம்ஆண்டு துருக்கியைச் சேர்ந்த ஹருனுஸ்ட்ராஸ்போன் என்ற கிளப்தான் முதன்முதலில் ஃபேன் டோக்கன்களை தனது வீர ருக்கு சம்பளத்தின் ஒரு பங்காக வழங்கியது. ஃபேன் டோக்கன்களின் மதிப்பும் கூட 11.93லிருந்து 43 ஆக உயர்ந்துள்ளது. டோக்கன்களின் விற்பனை 1.2 பில்லியன் அளவில் அதிகரித்துள்ளது. இந்த விற்பனை அதிகரித்தபோது, மெஸ்ஸி பிரான்சில் இருந்தார். அங்கு வந்து கிளப்பில் இணைவதை உறுதிப்படுத்தியவர் தனது ஜெர்சியையும் ஊடகங்களுக்கு காட்டினார். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் 

கௌரவ் பட் 






கருத்துகள்