கோவையில் அதிமுகவினருக்கு ஆதரவான போலீசாரை இடம்மாற்றும் தமிழ்நாடு அரசு!

 










காவல்துறையும் ஊழலும்!

அண்மையில் அதிமுக அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கோயம்புத்தூரில் உள்ள அமைச்சரின் சொத்துகள் மீது ரெய்டு நடத்தப்பட்டது. இதற்கு முன்னதாகவே அங்கு அதிமுகவினருக்கு ஆதரவான ஏராளமான காவல்துறையினர்  அங்கிருந்து உடனடியாக பணிமாற்றம் செய்யப்பட்டனர். ஏன் இப்படி திடீர்  பணிமாற்றம்? அமைச்சர் வேலுமணி தொடர்பான யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் உடனே அதனை திரும்ப பெறுமாறு போன் அழைப்புகளில் தொடர்புடைய போலீஸ்காரர் மிரட்டப்படுவார் என்கிறார்கள். 

நாடாளுமன்ற தேர்தலில் வென்றாலும் சட்டமன்றத் தேர்தலில் தோற்றுப்போன திமுகவினர், இதற்கான காரணமாக காவல்துறையை சுட்டிக்காட்டுகின்றனர். அவர்களின் ஆதரவில்தான் அதிமுகவினர் தேர்தலில் வென்றுள்ளனர் என திமுகவினர் நம்புகின்றனர். எனவேதான், கறைபடிந்த அதிமுக காவல்துறையினரை முழுவதுமாக கோவையை விட்டு அகற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதனால் புதிய ஆட்கள் அங்கு வருவார்கள். அதிமுகவினர்  மீதான அதிரடி செயல்பாடுகளுக்கு பணிமாற்ற நடவடிக்கை உதவியாக இருக்கும். 

இதில் போலீஸ்காரர்களுக்கு பெரும் பாதிப்பு இருக்கிறது. வேறிடத்திலிருந்து கோவைக்கு வந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் பல போலீஸாரை மீண்டும் பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்.  முன்னாள் டிஜிபி நடராஜ் அரசியல் பலன்களுக்காக இப்படி போலீசாரை மாற்றுவது தவறு. இரண்டு ஆண்டுகள் ஒரே இடத்தில் காவல்துறையினர் பணியாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இப்படி சிலமாதங்களிலேயே ஒருவர் மீது எந்த புகாரும் இல்லாத நிலையில் மாற்றுவது பணியை பாதிக்கும் என்றார். 

2006ஆம்ஆண்டு பிரகாஷ் சிங் என்ற ஐபிஎஸ் அதிகாரி இதுதொடர்பாக தொடுத்த வழக்கில்தான் மத்திய அரசின் பணிமாற்ற நடவடிக்கைக்கு எதிராக இரண்டு ஆண்டுகள் போலீஸ்கார ர் ஒரு இடத்தில் பணிபுரியவேண்டும் என உத்தரவானது. மாநில அரசுகள் மாநில பாதுகாப்பு கமிஷன்களை அமைத்து புகார்களை விசாரித்து காவல்துறையினரை காக்கும் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் தொடங்க உத்தரவிட்டும் கூட அது செயல்படுத்தப்படவில்லை. அப்படி செயல்படும் நிலையில் கூட அரசுக்கு ஆதரவான பல்வேறு நபர்கள்தான் இந்த அமைப்பில் இடம்பெறுகிறார்கள். எனவேதான், பாதிக்கப்படும் காவல்துறையினரின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது மு.க. ஸ்டாலின் பாதுகாப்பு கமிஷன் பற்றிய நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளார். 

மதுரையைச் சேர்ந்த ஜோதிபாசு, இதுபற்றிய புகார் மனுவை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.  2013ஆம் ஆண்டு காவல்துறை சீர்திருத்த சட்டத்தை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த்து. அதில் உள்ள பல்வேறு அம்சங்களை இப்போதும் காகிதத்தில் மட்டும் பார்க்கலாம். நேரடியாக காவல்துறையினருக்கு பயன்தரும் வகையில் மாநில காவல்துறையினருக்கான புகார் ஆணையம் உருவாக்கப்படவில்லை. 2019ஆம் ஆண்டு தமிழக அரசு, புகார் ஆணையத்தின் தலைவராக கூடுதல் டிஜிபியை நியமிப்பதாக கூறியது. அப்படி நியமித்தால் சக அதிகாரிகள் மீது எழும் புகார்கள் மீது எப்படி நேர்மையாக நடவடிக்கை எடுக்க முடியும்? 

டேட்டாவைப் பார்ப்போம். 

டிஜிபிகளின் எண்ணிக்கை 8

கூடுதல் டிஜிபி 23

ஐஜி 41

கூடுதல் ஐஜி 29

எஸ்பி 143

கூடுதல் எஸ்பி மற்றும் கான்ஸ்டபிள்கள் 1,24,695

மொத்தம் 1,23,939 பேர் - ஏப்ரல் 2020 நிலவரப்படி 


டைம்ஸ் ஆப் இந்தியா 

மயில் வாகனன்

 

 



கருத்துகள்